என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி திருமணம்"
- மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 17வயது மகள் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
மாணவிக்கு திருநின்றவூர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபர் பிரவீன் (வயது20) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தனது காதலி மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்து நேற்று காலை அங்கு சென்ற பிரவீன் மாணவியை வலுக்கட்டாயமாக தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்று திருவேற்காடு கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து பிரவீனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
- மாணவிக்கும் வாலிபருக்கும் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார்.
இந்த நிலையில் வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாணவிக்கும் வாலிபருக்கும் அவரது வீட்டில் வைத்து திருமணம் நடந்தது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடந்ததாக திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ மற்றும் குப்பம் போலீசார் மணமகன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு திருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
- சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலமலை ஊராட்சி பாலி கிராமம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 28) கூலிதொழிலாளி. இவர் ராமன்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிக்கு பழனிசாமி தாய்மாமா உறவாகும்.
இந்த நிலையில் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.
சிறுமிக்கு குழந்தை இறந்து பிறந்தது குறித்த புகாரின் பேரில் மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், சிறுமியை திருமணம் செய்த பழனிசாமி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
- 16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர்.
- தொழிலாளிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் உள்ள மலை கிராமத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக குழந்தைகள் நல குழும அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இடுக்கி சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்திய போது இடமலையார் பகுதியில் குழந்தை திருமணம் நடந்து இருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் உடனே அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 47 வயது தொழிலாளி திருமணம் செய்து இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
16 வயது சிறுமியை திருமணம் செய்த 47 வயது தொழிலாளி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இருந்தும் 16 வயது சிறுமியை அவர் திருமணம் செய்துள்ளார். இதுபற்றி குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 16 வயது சிறுமியை திருமணம் செய்த நபரை பிடிக்க அவர் தங்கியிருந்த கிராமத்துக்கு சென்றனர்.
போலீசார் தேடுவதை அறிந்த அவர், சிறுமியுடன் தலைமறைவாகி விட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது.
மரக்காணம்:
மதுராந்தகம் அருகே உள்ள தென்னலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் வீரபாண்டி (வயது (26)). இவருக்கும் மரக்காணம் அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்தோடு இன்று மதுராந்தகம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக சைல்ட் லைனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் தலைமை காவலர், சமூக நலத்துறை அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு எம்.புதுப்பாக்கம் கிராமத்திற்கு சென்று சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது உண்மை என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் சிறுமியை மீட்டு விழுப்புரத்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.
- 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது.
- முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகில் உள்ள மட்டப்பாறையை சேர்ந்த பிரசாத் என்பவருக்கும், திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சாமிநாதனின் 15 வயது மகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவே சிறுமி கணவரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
அதன்பிறகு திண்டுக்கல் மாவட்டம் பஞ்சம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவருடன் சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இந்த சிறுமிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு அழகர்சாமியுடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே குழந்தையுடன் அவரை வீட்டைவிட்டு விரட்டி விட்டனர்.
சம்பவத்தன்று திருப்பூர் ரெயில்நிலையத்தில் அழுதபடி கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த விபரங்களை கூறியுள்ளார். இதனைதொடர்ந்து திருப்பூர் மாநகர போலீசார் வழக்குபதிவு செய்து இந்த வழக்கை நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் பேபி விசாரணை மேற்கொண்டதில் 15 வயதில் முதல் திருமணமும், 17 வயதில் 2-வது திருமணமும் சிறுமிக்கு நடந்ததது தெரியவந்தது. முதல் கணவரான பிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் 2-வது திருமணம் செய்த கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார்.
- அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகர்கோவில்:
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பூதப்பாண்டி அருகே தெள்ளந்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதுபற்றி சமூக துறைக்கு புகார்கள் வந்தது. சமூகநல அதிகாரிகள் தூத்துக்குடிக்கு சென்று அந்த சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியை நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபரையும் விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது வாலிபரிடம் விசாரணை நடத்திவிட்டு அவரை அனுப்பி விட்டதாக தெரிகிறது. சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் இரவு வரை அலுவலகத்திலேயே வைத்திருந்தனர்.
அப்போது சிறுமியுடன் இருந்த தாயார் தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார். அப்போது அதிகாரிகளுக்கும் சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சிறுமியின் தாயார் அலுவலக வாசலில் அழுது புரண்டார். இதையடுத்து நேசமணி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை இன்று விசாரணைக்கு அழைத்து வர வேண்டும். வயது சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
திருமணத்தை நடத்தக்கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.
- 11-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் விசாரணை
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த அண்ணா நகர் மாசாப்பேட்டை பகு தியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், வேலூர் சத்துவாச்சாரி கண்ணமங்கலம் மதுரா புதுபேட்டை தங்கலார் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் மாசாப் பேட்டையில் உள்ள முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா மேற்பார்வையில் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி, விரிவாக்க அலுவலர் காஞ்சனா, ஊர் நல அலுவலர் கீதா, போலீஸ்காரர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு இரவு விருந்து தயாராகி கொண்டு இருந்ததை நிறுத்தியதோடு, சிறுமிக்கு இன்று நடக்க இருந்த திருமணத்தையும் தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி நடந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம் கொத்தூர் கிராமம் சேர்ந்தவர் முருகன் இவரது மகன் வீரமணி (வயது32) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் வாணியம்பாடி அடுத்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 14 வயதுடைய சிறுமிக்கும் கடந்த 31-ந் தேதி குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் வந்தது.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பாலு, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோ ர்களுடன் இணைந்து மணமகன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமி திருமணம் நடந்தது.
இதனையடுத்து வருவாய் துறையினர் மணமகன் வீரமணி மற்றும் அவரது பெற்றோர்களை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது.
- 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் 12 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அன்புச்செல்வி உத்தரவின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். சிறுமியின் முகவரி மற்றும் வாலிபரின் முகவரியை கண்டுபிடித்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் செட்டிக்குளம் ஒத்தப்பட்டியை சேர்ந்த தம்பதியரின் 12 வயது மகளுக்கும், சேத்தூர் மேட்டுப்பட்டி புது வண்ணார் தெருவை சேர்ந்த பெரியசாமி-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் மாரிமுத்து (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் மாப்பிள்ளையின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றபோது இரவு 10 மணியாகி விட்டது. அதிகாரிகள் விசாரித்தபோது மாப்பிள்ளையும், பெண்ணும் முதலிரவு அறைக்கு சென்று விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அவர்களை அழைத்து வரும்படி கூறினர்.
இதையடுத்து உறவினர்கள் அவர்களை வெளியே அழைத்து வந்தனர். மேலும் அதிகாரிகள் விசாரித்தபோது மாரிமுத்து, சிறுமியின் சொந்த அத்தை மகன் என்பதும், இருவரும் காதலித்து வந்ததும், இருவீட்டாரும் பேசி முடிவு செய்து திருமணத்தை நடத்தி வைத்ததும் தெரியவந்தது.
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர்களை கண்டித்து சிறுமியை மீட்டு விருதுநகர் சைல்டு லைன் காப்பகத்தில் சேர்த்தனர். 12 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தது தொடர்பாக ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாள் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள், சிறுமியை திருமணம் செய்த மாரிமுத்துவை கைது செய்தார். மேலும் வாலிபரின் பெற்றோர், சிறுமியின் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
- குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.
வேப்பந்தட்டை:
இந்தியாவில் குழந்தை திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் குழந்தை திருமணங்கள் தொடர்கதையாக இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 16 வயது மகளை 35 வயது வாலிபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் காளி. கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 40). இந்த தம்பதியரின் 16 வயது சிறுமிக்கு சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல் (35) என்ற வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜூன் மாதம் 13ந் தேதி உற்றார் உறவினர்கள் புடை சூழ தடபுடலாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த குழந்தை திருமணம் குறித்து மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரை தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
இதில் குழந்தை திருமணத்திற்கு சிறுமியின் தாய் முத்துலட்சுமி உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை மோப்பம் பிடித்துக்கொண்டு சக்திவேல் சிறுமியுடன் வெளி மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார். அதைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள சிறுமியையும் அவரது கணவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
குழந்தை திருமணத்தால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு மறுக்கப்படும் சூழல் உருவாகிறது. இதனால் குடும்பத்தில் வறுமை சூழும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் பாலின சமமின்மை காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையும் சிறிது காலத்திலேயே கசந்து போகிறது. மேலும் குழந்தை திருமணத்தால் சிறுமிகளுக்கு பிரசவத்தின்போது உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆகவே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
- மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற பெற்றோர் முடிவு செய்தனர்.
- கடந்த ஜூன் 29-ந்தேதி நடைபெற்ற திருமண விழாவில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியின் கடைசி ஆசையை கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி, தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த பெற்றோர் டேனியல் மார்ஷலின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஜூன் 29-ந்தேதி நடைபெற்ற இத்திருமண விழாவில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற்ற 12 நாட்களில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்து போனார்.