search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்எல்சி"

    • சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது.
    • என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு சமைத்து சாப்பிட்டனர்.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று முன்தினம் கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனைத்தொடர்ந்து இன்று 8-வது நாளாக ஜீவா ஒப்பத தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
    • தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்கினார்கள். 7-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். இதனால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று கடலூரில் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற் சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சென்னை மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • குத்தகை உரிமம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட ஆபத்துகள் இத்துடன் நிற்கவில்லை.
    • சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் அளவிட முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், 2036-ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, மூன்றாவது சுரங்கம் அமைப்பதை கைவிட வேண்டும் என்று தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

    உழவர்களின் நலன் காக்கும் அரசு என்று பெருமை பேசிக்கொள்ளும் தமிழக அரசு, எந்த அளவுக்கு உழவர்களுக்கு துரோகம் செய்கிறது என்பதற்கு இவையே சான்றுகள் ஆகும்.

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாக்களுக்கு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்து மூலம் அளித்த விடையில் இந்த விவரங்களை கூறியுள்ளார்.

    இந்த உண்மைகளை கருத்தில் கொண்டு, மக்கள் நலனை மனதில் கொண்டு என்.எல்.சிக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை இப்போதைய அரசு ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்து கடலூர் மாவட்ட மக்கள் நலனிலும், உழவர்கள் நலனிலும் தமிழக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பது ஐயமின்றி உறுதியாகியிருக்கிறது.

    குத்தகை உரிமம் வழங்கப்பட்டதால் ஏற்பட்ட ஆபத்துகள் இத்துடன் நிற்கவில்லை. உரிமம் வழங்கப்பட்ட நிலங்களில் 37,256 ஏக்கர் நிலங்களில் இதுவரை சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள நிலங்களில் சுமார் 12,125 ஏக்கர் பரப்பளவில் மூன்றாவது சுரங்கத்தை அமைக்க என்.எல்.சி தீர்மானித்து உள்ளது. இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உழவர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கும். அதனால், சுமார் 50,000 குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழந்திருப்பார்கள். அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் அளவிட முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும். இந்த பாதிப்புகள் எந்த வகையிலும் சரி செய்ய முடியாதவை.

    என்.எல்.சியின் மூன்றாவது சுரங்கம் அமைக்கப்படவிருக்கும் 26 கிராமங்களில் 9 கிராமங்கள் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருபவை. மீதமுள்ள கிராமங்கள் அனைத்தும் காவிரி பாசனப் பகுதியில் அமைந்திருப்பவை. இந்தப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்திற்கு எதிரானதாகும். அதனால், மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை கடுமையாக எதிர்க்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையை சற்றும் உணராத தமிழக அரசு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், வரவேற்கிறது. காவிரி பாசனப் பகுதி உழவர்களுக்கு இதை விட கொடிய துரோகத்தை எவரும் செய்துவிட முடியாது.

    என்.எல்.சி ஒன்று மற்றும் இரண்டாவது சுரங்கங்களுக்கு நிலம் எடுப்பதை எதிர்த்து போராடும் போதெல்லாம், அவை ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் தான் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், புதிதாக தொடங்கப்படவுள்ள மூன்றாவது சுரங்கத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். அதுதான் மக்கள் நல அரசின் அடையாளம். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் காவிரி பாசன மாவட்டங்களிலேயே தாம் சார்ந்த தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஒரு நீதி, கடலூர் மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி என்று முதலமைச்சர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

    தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலிலும், கடலூர் மாவட்டம் மக்கள் நலனிலும், தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், 64,750 ஏக்கர் நிலங்களில் சுரங்கம் அமைப்பதற்காக என்.எல்.சிக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள குத்தகை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் மூன்றாவது சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசை உழவர்களின் எதிரியாகவும், என்.எல்.சி நிறுவனத்தின் அடிமையுமாகவே தமிழக மக்கள் பார்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
    • அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    நெய்வேலியில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தின் வழியாக கால்வாய் தோண்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், என்.எல்.சி. விரிவாக்க பணி தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முருகன் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தை 5 ஆண்டுகளாக என்.எல்.சி. பயன்படுத்தவில்லை என்பதால், நிலத்தை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும். மேலும் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. தொந்தரவு தரக்கூடாது என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்திற்குள் வெள்ளம் புகுந்துவிடும் என்றும், 1.5 கிமீ நீளத்துக்கு சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயாராக இருப்பதாகவும் என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    நிலத்தை பயன்பாட்டிற்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிலத்தை கையகப்படுத்தியபின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன்? அந்த நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், என்.எல்.சி.க்காக அரசு கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு, என்.எல்.சி. நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது குறித்து மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பிரமாண பத்திரம், மனுதாரரின் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாதரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.

    • ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது.
    • சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    நெய்வேலி:

    பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இதைத் தொடர்ந்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம், கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் இதுவரையில் என்.எல்.சி. நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள். 6-வது நாளான இன்று வரை அவர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இரவு-பகல் பாராமல் அவர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர். ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு மற்ற தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று மாலை 4 மணிக்கு கடலூரில் பேச்சுவார்த்தை நடக்கிறது. கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள், என்.எல்.சி. நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாட்டால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வரும்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
    • கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.

    கடந்த 28-ந்தேதி மட்டும் வாய்க்கால் வெட்டும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. பா.ம.க. போராட்டம் நடத்தியதால் பணி நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பணி மீண்டும் தொடங்கியது. விளைநிலங்களுக்கு செல்லாமல் மேல் வளையமாதேவியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் கரைகளை சமன்செய்யும் பணியிலும், பாலத்தின் அருகில் கால்வாய் வெட்டும் பணியிலும் என்.எல்.சி. நிறுவனம் ஈடுபட்டது.

    4-வது நாளான நேற்று பணிகள் நடைபெற்றது. விடிய விடிய இந்த பணி நடந்தது. இன்று 5-வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. 1,500 மீட்டர் அகலத்தில் சுமார் 1 ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பணிகள் நடந்து வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வளையமாதேவியில் விளை நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண் மொழிதேவன் அறிவித்து இருந்தார். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

    வளையமாதேவியில் உண்ணாவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளிக்காததால் புவனகிரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

    அதன்படி இன்று காலை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது.
    • பரவனாறு கால்வாய் அமைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில் என்எல்சி விளக்கம்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது.

    இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பரவனாறு கால்வாய் அமைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பரவானறு திசைதிருப்பம் ஏன் என்பது குறித்து என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    மேலும், இதுகுறித்து என்எல்சி நிர்வாகம் கூறியதாவது:-

    அதிக பருவமழை காலங்களில் ஆற்றின் நீர்மட்டம் கூடும்போது, சுற்றியுள்ள வயல்களிலும், கிராமங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.

    அதனால் பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

    பரவனாற்றின் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 2 முதல் 3 பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.

    சுரங்கம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக பரவனாறு நிரந்தர கால்வாய் அமைக்கும் பணி முக்கியமானது.

    பரவனாறு பாதையில் இருந்து 60 மீட்டர் தூரத்தில் சுரங்கம்-2 வெட்டு முகம் முக்கியத்துவத்தை எட்டி உள்ளது.

    பருவமழை விரைவில் வர உள்ளதால், பரவனாற்றில் நிரந்தர ஆற்றுப்பாதையை அமைக்க வேண்டியது அவசியம்.

    புதிதாக பயிற் செய்ய வேண்டாம் என சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

    பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது.

    விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க என்எல்சிஐஎல் முன் வந்துள்ளது.

    பயிர் இழப்பீடு வழங்க, தனிநபர் பெயரில், மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே காசோலைகளை, என்எல்சி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

    பரவனாற்றில் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால், இந்த சீரமைப்பில் உள்ள விவசாய வயல்கள், வற்றாத பாசனத்திற்கு தண்ணீர் பெறும்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
    • கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    நெய்வேலி போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 இடங்களில் மறியல் போராட்டங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    2 இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பா.ம.க. தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. கடந்த 26, 28-ந்தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல் வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    • என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
    • பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம்.

    சிதம்பரம்:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீட்சிதர்கள் சார்பில் ஜெராம தீட்சிதர் வரவேற்பு அளித்து பிரசாதம் வழங்கினார். பின்னர் அவர் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதியிலும் தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து தில்லை காளியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் அம்மனை வழிபட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்காலில் நிர்வாக ரீதியான ஆலோசனை கூட்டத்திற்கு செல்லும் வழியில் சிதம்பரம் நட ராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தேன். ஆன்மிகம் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழை வளர்த்தது ஆன்மிகம்தான்.

    என்.எல்.சி. நிர்வாகம் விளை நிலத்தில் பயிர்களை அழித்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பயிர் உயிருக்கு சமம். அறுவடை காலம் வரை காத்திருந்திருக்கலாம். ஆனால், என்.எல்.சி. நிர்வாகம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. இங்கு இடைவெளி எப்படி வந்தது? என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
    • சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள். இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

    பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்தும், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று என்எல்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

    அன்புமணி உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் தாக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், பாமக போராட்டம் மற்றும் நடவடிக்கை குறித்து கடலூர் மாவட்ட காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. என்.எல்.சி. முற்றுகை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 26 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 26 மற்றும் 28ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குகளில் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், சட்டத்தை மீறிய 2 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

    சுமார் 900 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முயன்ற 2000 பாமகவினர் தடுப்பு நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் கடலூர் காவல்துறை கூறியுள்ளது.

    • விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக சேத்தியாததோப்பு அருகே உள்ள கற்றாழை, கரி வெட்டி, மேல்வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட நெற் பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்து பணிகளை தொடங்கினார்கள்.

    இதனால் விவசாயிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அழிக்கப்படுவதை கண்டித்து பா.ம.க. சார்பில் அந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது.

    போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அன்புமணி ராமதாஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 28 பேரை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விளை நிலத்தில் வாய்க்கால் வெட்டுவதை கண்டித்து பா.ம.க.வினர் கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் பஸ்கள் மீது கல்வீசப்பட்டது. நேற்று இரவும் 5 பஸ்கள் மீது கற்களை வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 25 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    பா.ம.க.வினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து நேற்று மாலை 6 மணி முதல் கடலூரில் இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது.
    • அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியது கண்டனத்திற்குரியது.

    மதுரை:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட் நிலத்தில் முதற்கட்ட பணியை என்எல்சி நிறுவனம் தொடங்கி உள்ளது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது. அதை செய்தால்தான் சுரங்கத்தின் மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். அப்போது தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும்.

    எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நில உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டபிறகும் சிலர் நிலத்தை வழங்காமல் உள்ளனர். திடீரென இந்த முடிவை நிர்வாகம் எடுக்கவில்லை. விவசாயிகளிடம் ஏற்கனவே டிசம்பர் மாதத்திறகு பிறகு நிலத்தில் பயிர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிர்களை சாகுபடி செய்தனர்.

    அறவழியில் போராடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×