search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229067"

    • மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் முடிவு.
    • டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, டிக்கெட் ரத்து குறைந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியது.

    இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், "ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது.

    டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, 01.06.23 அன்று 7.7 லட்சமாக இருந்த டிக்கெட் ரத்து 03.06.23 அன்று 7.5 லட்சமாக குறைந்துள்ளது" என கூறியுள்ளது.

    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

     

    இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

    மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது. 

    • ஐஆர்சிடிசி நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் உணவு ஆர்டர் செய்ய வாட்ஸ்அப்-இல் புது வசதியை வழங்குகிறது.
    • இந்த வசதியை கொண்டு பயணத்தின் போது வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம்.

    இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உணவு டெலிவரி சேவையான சூப் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயில்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம். இதற்கு எந்த விதமான கூடுதல் செயலியையும் டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    பயணத்தின் போது பயணிகள் சாட்பாட் மூலம் உணவு ஆர்டர் செய்தால், ரெயிலில் அமர்ந்து இருக்கும் இருக்கைக்கே ஆர்டர் செய்த உணவு வந்து சேரும். பயணிகள் தங்களின் பிஎன்ஆர் நம்பரை பதிவிட்டு, உணவை முன்பதிவு செய்யலாம். அதன் பின் ஆர்டர் செய்த உணவின் நிலை குறித்து ரியல்-டைம் டிராக்கிங் செய்யலாம். இது குறித்து ஹாப்டிக் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.


    ஐஆர்சிடிசி-இன் சூப் ஹாப்டிக் உடன் இணைந்து ரெயிலில் வாட்ஸ்அப் மூலம் உணவு டெலிவரி சேவையை அறிமுகம் செய்கிறது. இந்த பிளாட்பார்ம் மூலம், ரெயில் பயணத்தின் போது பயணிகள் உணவு ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதற்கு வாட்ஸ்அப் சாட்பாட் "சிவா" உடன் இணைய +91 7042062070 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். பின் தங்களின் பிஎன்ஆர் எண்ணை பதிவிட்டு உணவு ஆர்டர் செய்யலாம்.

    சாட்பாட் உங்களின் பயண விவரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு உணவு எந்த ரெயில் நிலையத்தில் டெலிவரி செய்யப்பட வேண்டும் என கேட்கும். இதன் பின் ஆர்டர் செய்த உணவுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரொக்கம் மூலமாகவோ பணம் செலுத்த முடியும். 

    • போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்
    • உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது வாங்கினால் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என விளக்கம்

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஓடும் தொலை தூர ரெயில்களில் பயணிகளுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் சார்பில் இந்த உணவகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. அவர்கள் மூலம் அமர்த்தப்படும் கேண்டீன் உரிமையாளர்களுக்கே, ரெயில்களில் உணவு சமைத்து விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், ரெயில் பயணத்தின் போது ஒரு கப் டீ குடிப்பதற்கு ஒரு பயணி 70 ரூபாய் செலுத்திய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சதாப்தி ரெயிலில்தான் இந்த அளவுக்கு காஸ்ட்லியான டீ விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 28ம் தேதி டெல்லி-போபால் இடையே இயக்கப்படும் போபால் சதாப்தி ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, டீ வாங்கி அருந்தி உள்ளார். டீ விலை 20 ரூபாய், சேவை வரி 50 ரூபாய் என மொத்தம் 70 ரூபாய்க்கு பில் கொடுத்துள்ளனர். அந்த தொகையை செலுத்திய பயணி, தனக்கு வழங்கப்பட்ட பில்லை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், '20 ரூபாய் மதிப்புள்ள தேநீருக்கு 50 ரூபாய் ஜிஎஸ்டி. மொத்தத்தில் ஒரு டீ விலை 70 ரூபாய். இது ஒரு அற்புதமான கொள்ளை அல்லவா?" என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்த பதிவு வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். சிலர் அந்த பயணி வெளியிட்ட தகவலில் ஜிஎஸ்டி என்ற தகவல் தவறு என்றும், அது சேவை வரி என்றும் திருத்தினர். எனினும், ஒரு கப் டீக்கு 50 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது அதிகம் என்று பலர் பதிவிட்டனர். ஆனால் அதிக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    ஒரு கப் டீக்கு 70 ரூபாய் வசூலித்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    வாடிக்கையாளரிடமிருந்து கூடுதல் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இந்திய ரெயில்வேயால் 2018இல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், முன்கூட்டியே உணவை முன்பதிவு செய்யாமல், பயணத்தின்போது டீ, காபி அல்லது உணவை ஆர்டர் செய்து வாங்கினால் ஒவ்வொரு உணவுக்கும் ரூ.50 சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒரு கப் டீயாக இருந்தாலும் சரி.

    இதற்கு முன்பு ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற ரெயில்களில் உணவு சேவை கட்டாயமாக இருந்தது, ஆனால் பின்னர் அது விருப்ப தேர்வாக மாற்றப்பட்டது. அதாவது, பயணிகள் விரும்பினால், அந்த ரெயில்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை வாங்க மறுக்கலாம். டிக்கெட்டுக்கு மட்டுமே பணம் செலுத்தினால் போதும், உணவு சேவைக்கு வழங்கவேண்டியதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பு அதிகரிக்க உள்ளது.

    புதுடெல்லி:

    ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது.

    இந்நிலையில், பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 ஆகவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×