search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகள்"

    • வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
    • மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய, பழைய பேருந்து நிலையங்கள், ரயில்வே ரோடு, பிடாரி வடக்குவீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடு உள்ளிட்டவை சுற்றித் திரிவதாகவும், இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதனை அடுத்து சாலைகளில் கால்நடைகளை விடக்கூடாது மீறினால் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்படும் என சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல்கட்டமாக சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரிராஜசேகர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் ராஜகோபால், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் அலெக்சாண்டர், டேவிட் உள்ளிட்ட பணியாளர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த 15 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர்.

    பின்னர் மாடுகளின் உரிமையாளர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து மாடுகளை சாலைகளில் நடமாட விட்டால் அபராதம் விதிப்பதுடன், மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • கொள்ளிட கரையோர கிராமங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள், வாழை, காய்கறி வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
    • தாழ்வான பகுதியில் வசித்த 31 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

    பூதலூர்:

    'காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம்' என்ற திரைப்பட பாடல் வரிகள் தற்போது நிதர்சனமாகிக் கொண்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு கொள்ளிடம் ஆறு இன்னும் இருக்கா? திறந்து விடுங்கள் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று கேட்பது போல்ஆர்ப்பரித்து சென்று கொண்டுள்ளது.

    கொள்ளிடக்கரையோர கிராமங்களில் வருவாய் துறை, காவல்துறை அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை முகாம்களுக்கு வாருங்கள் என்று வருந்தி அழைத்தாலும் இதை விட அதிக தண்ணீரை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள் ஒன்னும் ஆகாது என்று அலட்சியமாக சொல்வதால் நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் இரவு-பகலாக கொள்ளிடக் கரையோர பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்ளிட கரையோர கிராமங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள், வாழை, காய்கறி வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கல்லணையில் இன்று காலை நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 58 ஆயிரத்து 220 கன அடி கடந்து வெளியேறி கொண்டுள்ளது. முக்கொம்புலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சேர்ந்து இன்று காலை கொள்ளிடத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 730 கன அடி தண்ணீர் பெருகி ஓடிக் கொண்டுள்ளது.

    கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் வழக்கம்போல தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள 35 மதகுகளையும் திறந்து அதிலிருந்து தண்ணீர் பெருகி பேரிரைச்சலோடு வெளியேறி, முக்கொம்பில் இருந்து வரும் தண்ணீரில் கலந்து கரை புரண்டு ஓடிக் கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்றே குறைந்து ஒரு லட்சத்து 77ஆயிரத்து 284கன அடியாக இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 1லட்சத்து 76 ஆயிரத்து 767 கன அடியாக உள்ளது. திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி ஆற்றில் 70 ஆயிரத்து 696 கன அடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 382 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் ெபருக்கெடுத்து ஓடுவதால் தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டை அருகே கூடலூர் கிராமத்தில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து தாழ்வான பகுதியில் வசித்த 31 பேர் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது மேலும் குறுவை பயிர்களும், கரும்பு, வாழைகளும் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் இந்த பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

    மேலும் திருக்காட்டுப்பள்ளி அடுத்த திருவளர்சோலை அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் 2-து நாளாக அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய ஊர்களில் இருந்து கார்களில் திருச்சி செல்ல வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் வேங்கூர், சர்க்கார்பாளையம் கிராமங்களில் வழியாக சென்று வருகின்றனர்.

    மேலும் தோட்டப்பயிர்களான பருத்தி, தக்காளி, வெண்டை, மிளகாய், மரவள்ளிக்கிழங்கு மற்றும் முல்லை, காக்கரட்டான் செண்டிப்பூ உள்ளிட்ட பூச்செடிகளும் சுமார் 300 ஏக்கரில் மூழ்கி கிடக்கிறது. மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் உள்ள கதவணையில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் கூடுதலாக கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டால் கொள்ளிடம் ஆற்றின் கரைகள் உடைஉடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடக்கரையோர கிராம மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பேரிடர் மீட்பு பணிக்குழுவினர் மணல் மூட்டைகளுடனும், மீட்பு பணிசாதனங்களுடன் ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளனர்.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் சற்று மழை குறைந்துள்ளதால் மேட்டூருக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்துள்ளது. ஆனால் கல்லணையில் இருந்து அணையின் பாதுகாப்பு கருதி கொள்ளிடத்தில் 35 மதகுகளும் முழுமையாக திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கரை பகுதிக்காக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மணல், காலிசாக்குகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளதால் கொள்ளிடத்தி ல்வெளியேற்றப்படும் தண்ணீர் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பசுந்தீவன பொருள் வளர்ப்பு குறித்தும், அவற்றை அறுக்கும் புல்வெட்டும் கருவி மானியத்தில் வழங்கப்ப–ட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
    • கண்டியூர் மற்றும் ஆலக்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி திட்ட முகமை அதிகாரி டாக்டர் முருகேசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டி பகுதியில் கால்நடைகளுக்கு போடப்படும் பசுந்தீவன பொருள் வளர்ப்பு குறித்தும் அவற்றை அறுக்கும் புல்வெட்டும் கருவி மானியத்தில் வழங்கப்ப–ட்டுள்ளது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து திருமலைசமுத்திரம் பகுதியில் விதவைகளின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட்டுள்ள ஆடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அம்மன்பேட்டையில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு சென்று அங்கு டாக்டர்கள் முறையாக பணிக்கு வருகிறார்களா? என பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து கண்டியூர் மற்றும் ஆலக்குடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர்கள் சையத் அலி, பழனிவேல், கால்நடை டாக்டர்கள் செரீப், சரவணன், லாவண்யா மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.
    • சாலையின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அதன்மீது மோதாமல் இருக்க திருப்பும் போது சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஏராளமானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகள் சாலைகளிலும், மார்க்கெட் பகுதிகளிலுமே சுற்றி திரிகிறது.

    அப்படி சுற்றி திரியும் கால்நடைகள், அங்குள்ள பள்ளி வளாகம், மார்க்கெட் பகுதிகளிலும் புகுந்து விடுகிறது.

    மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகள் கடைகள் முன்பு வைத்துள்ள காய்கறிகளை சாப்பிடுகின்றன. அங்கிருந்து விரட்டி விட்டாலும் எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி திரிகிறது. இதேபோல் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் புகுவதால், பள்ளி மாணவர்கள் பயந்து ஓடுகின்றனர்.

    மேலும் சாலைகளில் சுற்றி திரிவதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். திடீரென சாலையின் குறுக்கே வந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அதன்மீது மோதாமல் இருக்க திருப்பும் போது சிறு, சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது. நடந்து செல்லும் மக்களையும் துரத்தி செல்கின்றன.

    எனவே சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை சம்பந்தப்பட்ட துறையினர் பிடித்து உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேலும் சாலைகளில் மாடுகளை சுற்ற விடுபவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
    • நீதிமன்ற ஆணையின் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 37 கால்நடை உதவி மருத்துவா்களுக்கான பயிற்சி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் தென்காசி சு.ஜவஹா் பேசியதாவது:-

    தமிழக கால்நடை பராமரிப்புத் துறை 130 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட மிகவும் தொன்மையான துறையாகும். தமிழகத்தில் கால்நடை வளா்ப்போரின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு கால்நடை மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 3.92 கோடி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 2 பன்முக கால்நடை மருத்துவமனை, 7 கால்நடை மருத்துவமனைகள், 102 கால்நடை மருந்தகங்கள், 2 நடமாடும் கால்நடை மருந்தகங்கள் மற்றும் 38 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் 3,21,236 மாட்டினங்கள், 5,92,590 ஆட்டினங்கள், 1,67,27,394 கோழியினங்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வாய் நோய் வராமல் தடுக்கும் வகையில் 2,92,822 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன்,1.2 லட்சம் கால்நடைகளுக்கு சிகிச்சைப் பணிகள், 13.5 லட்சம் குடற்புழு நீக்கப் பணிகள் மற்றும் 2.02 லட்சம் செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள 3,030 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களில் 1,141 பணியிடங்கள்நீதிமன்ற வழக்குகளால் நிரப்பப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் அனைத்து சட்ட சிக்கல்களும் தீா்க்கப்பட்டு நீதிமன்ற ஆணையின் மூலம் 1,089 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன என்றாா்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் பொன்.பாரிவேந்தன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளா் ஏ.பி.நடராஜன், பால் வளத்துறை துணைப்பதிவாளா் சைமன் சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும்.
    • கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்த்தலும் பிரதான தொழிலாகும். அவ்வகையில், வளர்க்கப்படும் கால்நடைகள் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இந்நிலையில் உடுமலை சுற்றுப்பகுதியில் பரவலாக மழை நீடித்தது. அதேநேரம், மழையால் விளையும் பசுந்தீவனங்களை கால்நடைகள் உட்கொள்வதால், கழிச்சல் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் புதிதாக பறித்த இலை தழைகளை நன்கு காய வைத்த பின் கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கால்நடை டாக்டர்கள் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல், பாதுகாப்பான இடத்தில் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும். ஈரமான இடங்களில் கட்டி வைக்கப்படும் கால்நடைகளுக்கு கால் வீக்க நோய் ஏற்படும் என்பதால் காய்ந்த நிலப்பரப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் பால் கறந்தவுடன் மாடுகளை சிறிது நேரம் கழித்த பின்னரே படுக்க வைக்க வேண்டும்.வழக்கத்திற்கு மாறான நிலையில் கால்நடைகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வைகை ஆற்றில் அதிக அளவில் வளரும் புற்களால் கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
    • தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார பகுதி கிராமங்கள் முழுவதும் பூர்வீக வைகை பாசனபகுதியாகும். தற்போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகைஆற்றில் சித்திரை திருவிழாவிற்காக தண்ணீர் திறந்து விட்டபோது ஆற்றில் தண்ணீர் சென்றது.

    சில நாட்களுக்கு முன்பு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு நீர் செல்வதால் பாசன பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது ஆற்றில் தொடர் நீர்வரத்தால் ஆறு முழுவதும் புல்செடிகள் அதிக அளவில் வளர்ந்து மேய்ச்சல் பகுதியாக மாறி உள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் கால்நடைகளை காலை முதல் மாலை வரை மேயவிட்டு வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.

    கொளுத்தும் வெயிலுக்கு மானாமதுரை வைகை ஆறு இயற்கை புல்வெளியாக பச்சை போர்வை விரித்தது போல் காண்போரின்கண்களுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    குமாரபாளையம் அரசு பள்ளியில் மேயும் கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதி கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்திற்கு அழைத்து வந்து மேய விடுகின்றனர். கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    விளையாட்டு பயிற்சி, என்.சி.சி. பயிற்சி பெறும் மாணவர்கள் செய்வதறியாது உள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க கூடாது. கடும் வெப்பம் காரணமாக வகுப்பறை வெளியில் மரத்தடியில் கூட சில நேரம் வகுப்புகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு நடத்தப்படும் வகுப்புகளுக்கும் இடையூறாக இருப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    • கால்நடைகளை வளர்ப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் ரோடுகளிலும் தெருக்களிலும் விடக்கூடாது.
    • விபத்துக்கள் ஏற்பட்டால் விபத்துகளுக்கு நிதியும் கால்நடை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.

    உடன்குடி:

    உடன்குடி பஜார் பகுதியில் மாடு முட்டி பந்தல் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.இதேபோல ரோடுகளில் அலையும் மாடுகளால் வாகன விபத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

    இதனால் பொதுமக்கள் உடன்குடி பேரூராட்சியை முற் றுகையிட்டுபல்வேறு கோரிக்கைகளை வைத்தனர், இது சம்மந்தமாக பேரூராட்சி செயல் அலுவலர் பாபு வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஆடு, மாடு, நாய், போன்ற கால்நடைகளை வீடு மற்றும் தோட்டங்களில் வளர்ப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் ரோடுகளிலும் தெருக்களிலும் விடக்கூடாது.

    வளர்க்கும் இடத்தில் கால்நடைகளை கட்டி வைத்து, அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களிலும் வீடுகளிலும் அலைய விடக்கூடாது.

    இதையும் மீறி உடன்குடி பேரூராட்சி பகுதியில் நடமாடினால் அவைகளை பிடித்துச் சென்று, குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோசாலையில் சேர்க்கப்படும். இதற்கான செலவுகள் அனைத்தும் கால்நடை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும்.

    விபத்துக்கள் ஏற்பட்டால் விபத்துகளுக்கு நிதியும் வசூலிக்கப்படும். அதனால் கால்நடைகள் வளர்ப்பவர்கள் கட்டிவைத்து அல்லது அடைத்து வைத்து வளர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்தும் இடையூறாக செல்லும் கால்நடைகளை பிடிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொடர் மழையால் தாராளமாய் கிடைக்கும் பசுந்தீவனங்கள்: மின்னாம்பள்ளி மாட்டு சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பேளூர் பகுதியில் பெரும்பாலான கிராமங்களில், விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும், பால் உற்பத்தியில் வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளை விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    கறவைமாடுகளுக்கு 'உறைவிந்து' செலுத்தி, குறைந்த பராமரிப்பு செலவில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் அதிக பால் கறக்கும் உயர்ரக கலப்பின பசுக்களை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கி கொடுத்ததாலும், சேலம் மாவட்டத்தில் கறவைமாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி பெரும் தொழிலாக உயர்ந்தது.

    வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி கருமாபுரம், அயோத்தியாப்பட்டணம் ராமலிங்கபுரம், முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பெரிய அளவில் பிரபல தனியார் நிறுவனங்களில் பால் மற்றும் பால் பொருட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து நாடு முழுவதும் மதிப்புக்கூட்டப்பட்ட பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம், பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன.

    இதனால், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில், குக்கிராமங்களிலும் அரசு பால் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் பால் பண்ணை நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு நேரடி பால் கொள்முதல் மற்றும் குளிரூட்டும் நிலையங்கள் அமைத்துள்ளன. கறவைமாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தியால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை கூடும் மாட்டுச்சந்தைகளில் ஒன்றான, வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு, கால்நடைகளுக்கான பிரத்தியேக வர்த்தக மையமாக விளங்கி வருகிறது.

    மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், கோடைகாலத்திலும் கால்நடைகளுக்குத் தீவனமாக மக்காச்சோளம், சோளத்தட்டை, புற்கள் உள்ளிட்ட பசுந்தீவனங்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. இதனால், குறைந்த செலவில் பால் உற்பத்தி அதிகரித்து, கால்நடை வளர்ப்போருக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் கறவை மாடுகளை விற்பனை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் நேற்று திங்கட்கிழமை கூடிய மின்னாம்பள்ளி மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனைக்கு வரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து மின்னாம்பள்ளி சேர்ந்த கால்நடை வியாபாரிகள் சிலர் கூறியதாவது:

    வாரத்திற்கு சராசரியாக 500 மாடுகள் வரை விற்பனைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 200 மாடுகள் கூட விற்பனைக்கு வரவில்லை. வற்ற கறவை மாடுகளை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்கிச் சென்றனர்.

    ×