search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் சாலை ஓர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் வகித்தார் நிகழ்ச்சியில் ரூ. 22.50 லட்சம் மதிப்புள்ள 21 காய்கறி பழங்கள் விற்பனை செய்பவர்களுக்கும், .10 பூ வியாபாரம் செய்பவர்களுக்கும் சேர்த்து 31 வண்டிகளை நகர மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா ஒன்றிய பொறியாளர் முகமது இப்ராஹிம் துணை தலைவர் மங்களநாயகி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மதுரை

    மதுரை சமயநல்லூர், வளர்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவரது மனைவி பாண்டியம்மாள். கணேசன் அதே பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

    இதன் காரணமாக மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கணேசன், நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததனர், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரியிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மற்றும் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மேலமாசி வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 57). அந்த பகுதியில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வரும் இவர், திடீர் நகர் போலீசில் புகார் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சங்கரநாராயணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கார்மெண்ட்ஸ் கடை நடத்தி வருகி றேன். இதற்காக சங்கர நாராயணனின் தந்தை நாகலிங்கத்திடம் ரூ.25 லட்சம் கொடுத்தேன். இந்த நிலையில் நாகலிங்கம் இறந்துவிட்டார்.

    நான் கொடுத்த ரூ.25 லட்சத்தை சங்கரநாராயணன் திருப்பி தராமல், கடையை காலி பண்ண சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார். இதற்கு சங்கரநாராயணனின் தாய், மனைவி மற்றும் உறவினர் உள்பட 6 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரநாராயணன், அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர் உள்பட சிலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சங்கரநாராயணன் கொடுத்த புகாரின் அடிப்ப டையில், திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் மற்றும் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • வியாபாரி-வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது.
    • சிறுவன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை வல்லானந்தபுரம், ஜே.ஜே. நகரை சேர்ந்த வர் கோட்டைசாமி (வயது 32). கோழி வியாபாரியான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவா, வினோத் மற்றும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. கோட்டைசுவாமி சம்பவத்தன்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் என்பவரை கைது செய்தனர். இது தவிர தப்பி ஓடிய சிவா உள்பட சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மதுரை அண்ணாநகர், எஸ்.எம்.பி. காலனியை சேர்ந்தவர் முத்து கருப்பசாமி (வயது 38). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. முத்துக்கருப்பசுவாமி சம்பவத்தன்று இரவு, ஆலமரத்தடி மாநகராட்சி பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கும்பல் தகராறு செய்து முத்து கருப்பசாமியை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.

    இது தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் ஜோதிகுமார் (22), அழகுபாண்டி மகன் ராமர் என்ற தமிழ்நிலவன் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.தப்பி ஓடிய செந்தில் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

    • வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ் கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள செட்டிக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது57). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுப்பழக்கத்தால் உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த அவர் கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு சென்ற கயத்தாறு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    தாராபுரம் :

    காங்கயம் அருகே வடசின்னாரிபாளையம் காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 50). திருமணமான இவர் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் செல்லமுத்து கடந்த பல வருடங்களாக அதிகளவில் மது குடித்து வந்ததாகவும், அதிலிருந்து மீள முடியாமல் புலம்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தனது தோட்டத்தில் இருந்த பயிர்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    இதையறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு கொடுவாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லமுத்துவை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினம் பாப்பையின் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ராஜேஷ் (வயது 35). காய்கறி வியாபாரியான இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த சர்மி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷத் (13) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மகனுடன் கோவையில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    ராஜேஷ் தனது பெற்றோருடன் பாப்பையின் புதூர் பகுதியில் வசித்தபடி வியாபாரத்தை கவனித்து வந்தார். அடிக்கடி மனைவி மற்றும் மகனை நினைத்து சில நேரத்தில் பெற்றோரிடம் வருத்தம் தெரிவித்து வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு தாய் ராணி ஊருக்கு சென்றபோது ராஜேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் மனு
    • வணிக நிறுவனங்கள் இல்லாத பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமையில் நிர்வாகிகள் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் 65 கிளை சங்கங்களை கொண்டு எங்களது பேரவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வியாபாரம் நடக்கும் நேரத்தில் போலீசார் 4 முனைகளிலும் அரணாக நின்று வாகன தணிக்கை செய்கிறார்கள்.

    இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக அந்த பகுதிக்கு வராமலேயே திரும்பி சென்று விடுகிறார்கள். கோடி கணக்கில் கடன் வாங்கி தொழில் செய்து வரும் வணிகர்களுக்கு இது பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே வணிக நிறுவனங்கள் இல்லாத பகுதியில் போலீசார் வாகன தணிக்கை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு படி நடவடிக்கை
    • கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வழக்கில் வடசேரியைச் சேர்ந்த காட்வின் எட்வர்ட், பெருவிளையை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதை யடுத்து காட்வின் எட்வர்ட் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்குகளும் சந்திரகுமாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

    • உசிலம்பட்டியில் வியாபாரியின் மகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டார்.
    • போலீஸ் அதிரடியால் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டாள் சிறுமியை கடத்தி சென்ற 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏ.ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 4 வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.

    பார்த்தசாரதி மதுரை-உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பூதிப்புரம் விலக்கில் பிராய்லர் கடை நடத்தி வருகிறார். மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் பேக்கிரி கடையும் வைத்துள்ளார். இன்று காலை பார்த்தசாரதி மனைவி மற்றும் குழந்தையுடன் பிராய்லர் கடையில் வியாபாரம் பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது அருகில் உள்ள வீட்டின் முன்பு சிறுமி ஜனனி விளையாடி கொண்டிருந்தாள். காலை 11 மணியளவில் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும்-பெண்ணும் பிராய்லர் கடைக்கு வந்தனர். அவர்கள் விளையாடி கொண்டிருந்த ஜனனியிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது மர்ம நபர்கள் எங்களுடன் வந்து விடுகிறாயா? என குழந்தையிடம் கேட்டுள்ளனர். ஏதும் அறியாத அந்த குழந்தையும் அவர்களுடன் செல்வதாக தெரிவித்தாள்.

    மேலும் மர்ம நபர்கள் வித்யாவிடம் குழந்தையை அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். அதை வித்யா விளையாட்டாக எடுத்துக் கொண்டார். ஆனால் மர்ம நபர்கள் குழந்தையை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மாயமானார்கள்.

    1 மணி நேரத்திற்குள் மேலாகியும் அவர்கள் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்த்தசாரதி-வித்யா மற்றும் குடும்பத்தினர் ஜனனியை தேடி பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதையடுத்து குழந்தை கடத்தல் தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜய் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். கடத்தல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து உசிலம்பட்டியை சுற்றியுள்ள சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் சிறுமி ஜனனியை மீட்டனர். சிறுமியை கடத்தி சென்ற 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
    • இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் 84 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 67 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது.

    இன்று நடைபெற்ற சந்தையில் 54 கால்நடைகள் ரூ.17 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர். தற்போது நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்தையில் மாடுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவது மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

    • பெண் வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பாண்டியன் நகர், சிவசக்தி தெருவை சேர்ந்த உதயபாண்டி மனைவி பாலம்மாள் (27). இவர் வண்டியூர், சவுராஷ்டிராபுரம் தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவர் ஓட்டலில் இருந்தார். அங்கு குடிபோதையில் வந்த 2 பேர் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றனர். இதை பாலம்மாள் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த கும்பல், பெண் வியாபாரியை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.

     இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் கவுண்டன் கால் பகுதியைச் சேர்ந்த தண்டீஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை டி.வி.எஸ் நகர் துரைச்சாமி ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 30). இவர் அந்தப்பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். சரியாக வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சுப்பிர மணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட ஆனந்த் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மதுரை வண்டியூர், செம்மண் சாலை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 53). இவரது மனைவி சுமதி. வேலுச்சாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டது. அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வேலுச்சாமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×