search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • மனைவி போலீசில் புகார்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமபுரத்தை அடுத்த ஆண்டார் குளம் கால்வாய் தெருவைச் சேர்ந்தவர் செலின்ராயன் (வயது 34).

    இவர் பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதி வீட்டில் இருந்து வியாபார விஷயமாக வெளியே சென்ற செலின்ராயன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    அவரை, மனைவி செலின்ரோஸ் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரியிடம் பணப்பையை ஆட்டோ டிரைவர் பறித்துச்சென்றார்.
    • போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மேலூர், கருத்தபிள்ளையம் பட்டியைச் சேர்ந்த அயூப்கான் மகன் பிரேம்நசீர் (வயது 27). இவர் அந்த பகுதியில் கோழி கடை நடத்தி வருகிறார்.இவர் வெளியூர் செல்வதற்காக பஸ் மூலம் நேற்று அதிகாலை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். முதல் பிளாட்பாரத்தில் உள்ள மொபைல் கடை அருகே பணப்பையை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றார்.

    திரும்பி வந்து பார்த்தபோது பணப்பையை காணவில்லை. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் விசாரணை நடத்தினார்.

    அப்போது பிரேம் நசீரின் பணப்பையை, ஆட்டோ டிரைவர் ஒருவர் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. போலீசார் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பணப்பையை பறித்து சென்றது செல்லூர், மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த ராமபாண்டி (37) என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் ராமபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

    • வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 31). இவருக்கு மூளை நரம்பு வியாதி உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் குமார் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வண்டியூர் சதாசிவம் நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 46). இவர் அனுமார் பட்டியில் இரும்பு கடை நடத்தினார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனைவி சியாமளா கணவருடன் கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரி கிருஷ்ணன் நேற்று இரும்பு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • போன் தர மறுத்த வியாபாரியை கத்தியால் குத்தினர்
    • பணத்தையும் பறித்து சென்றனர்

    கரூர்:

    கரூர் டி. செல்லாண்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 50) வியாபாரியான இவர், சம்பவத்தன்று காமராஜ் மார்க்கெட்டில், காய்கறிகளை வாங்கிக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் மக்கள் பாதை ரவுண்டானா வழியாக வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.அப்போது, மோகன்ராஜ் (22), உதயபிரகாஷ் (21), ஹேமல் (20), சஞ்சய்குமார் (20), ஆகிய நான்கு பேர், செந்தில் குமாரை வழிமறித்து மொபைல் போனை கேட்டுள்ளனர். அவர் மொபைல் போனை தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், செந்தில் குமாரை கத்தியால் குத்தினர். பின், செந்தில் குமாரிடமிருந்து மொபைல் போன் மற்றும் 1,200 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். காயம்டைந்த செந்தில்குமார், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து, கரூர் டவுன் போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்
    • போலீசார் விசாரணை நடத்தி புனிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி தடிச்சமாவுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 50). இவர் முஞ்சிறை பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துதாஸ் கடையில் இருக்கும்போது, வேங்கோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜசேகர் உட்பட மேலும் மூன்று பேர் சேர்ந்து பேசி, தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கிறிஸ்துதாஸ் தனது செல்போனையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி புனிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • உலகமணி நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று உலகமணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந் தவர் உலகமணி (வயது58).

    வளையல் வியாபாரி

    இவர் மோட்டார் சைக்கிள் மூலம் பல்வேறு இடங்களுக்கு சென்று வளையல் வியாபாரம் செய்து வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் மதுரை-தூத்துக்குடி பாலப்பணிகள் நடைபெறும் சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உலகமணி மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • கருங்கல் போலீசில் புகார்
    • கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள நெடியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தவசுமணி. இவரது மகன் லெனின் (வயது 43). இவர் கருங்கல் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலையில் கடைக்கு வியாபாரத்திற்கு சென்ற இவர் தனது மோட்டார் சைக்கிளை கடை அருகில் வைத்துள்ளார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அதனை காணவில்லை. பைக்கை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து லெனின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதை தடுப்பதற்காகபோலீசார் பல்வேறு நடவடிக்கை
    • 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதை தடுப்பதற்காகபோலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் குமரி, கேரளா எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாக கடந்து செல்கின்ற வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று உண்ணாமலைக்கடை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடைகளில் சோதனை செய்தபோது அப்பகுதியில் விஜயன் (வயது 51) என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காங்கேயம் வாரச்சந்தையில் 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன.
    • இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் சந்தை அமைக்கப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை மிக பழமையானதாகும். இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் திங்கள் தோறும் நடக்கும் சந்தையில் பொருட்களை வாங்கி விற்று வருவது வழக்கம். ஆனால் சந்தை பல ஆண்டாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்டது.

    இதனை மேம்படுத்த வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 2 ஏக்கர் பரப்பளவில் 380 கடைகள் அமைக்கப் படுகின்றன. சாய்வு தளத்துடன் விவசாயிகள் கொண்டு வரும் பொருட்களை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக கடைகள் அமைக்கப்படும். இதில் தினசரி மார்க்கெட்க்கு 67 கடைகள் அமைக்கப்படுகின்றன.

    இந்தக் கடைகளுக்கு வந்து செல்ல வசதியாக அகலமான தடம் அமைக்கப்படும். மழை, வெயில் போன்ற இயற்கை சீற்றங்கள் எதிலிருந்தும் பாதுகாப்பாக வியாபாரிகள் வியாபாரம் செய்யவும், பொது மக்கள் பொருட்களை வாங்கி செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.

    மேலும் 27 கறிக்கடைகள் அமைக்க இடம் தனியாக ஒதுக்கப்பட்டு, முறைப்படி இந்த கடைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் ஒரு பெரிய அளவிலான குடோனும் அமைக்கப்பட உள்ளது. சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ஏடிஎம். சென்டர் ஒன்றும் இதில் அமைய உள்ளது. மேலும் பாத்ரூம், டாய்லெட் 20 அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதியும் இதில் செய்யப்பட உள்ளது. இதனால் மக்கள் எளிதில் வந்து செல்ல முடியும்.

    இந்த சந்தைக்கு 24 மணி நேரம் பாதுகாப்பு என நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கடந்த 10 வருடத்திற்கு மேல் சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சாமிநாதன் சந்தையை மேம்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதனை அடுத்து தற்போது சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த சந்தை பணிகள் ஒரு வருடத்தில் முடிக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தரப்பிலிருந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    • வாகனங்களை விற்று தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • என்னை ெதாடர்பு கொண்ட சதீஷ் லாரியை அதிகவிலைக்கு விற்று தருவதாக கூறினார். நான் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியை ஒப்படைத்தேன்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி, சிவகங்கை மாவட்டம் கன்னிவாசல் முனிசிபல் தெருவை சேர்ந்த சண்முகம் ஆகிேயார் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    அதில், கார்மற்றும் லாரி வாங்கி, விற்றுதருவதாக மதுரை வியாபாரி ஒருவர் ரூ.10 லட்சம் மோசடி செய்து விட்டதாக தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் துணை கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முதல் கட்டமாக புகார் கொடுத்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    இதில் செல்லப்பாண்டி கூறும்போது, மதுரை பார்க் டவுன் விஸ்வநாததாஸ்புரம் மணல்மேடு தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 36), சேகர் ஆகிய 2 பேர் என்னை தொடர்பு கொண்டு, நான் உங்களுக்கு குறைந்த விலையில் கார் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்தார்.

    அதனை நம்பி அவரிடம் ரூ.5 லட்சத்து 36 ஆயிரம் கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட அவர், கார் வாங்கி தர வில்ைல. பணத்தை திருப்பிக்கேட்டபோது ரூ.2 லட்சத்து 36 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதம் தர வேண்டிய ரூ.2 லட்சத்தை தரமுடியாது என்று கூறிவிட்டார்.

    அவரிடம் நான் தொடர்ந்து பணம் கேட்ட தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார் என்று தெரிவித் தார்.

    பின்னர் சண்முகம் கூறும்போது, நான் லாரியை விற்பதற்கான முயற்சியில் இருந்தேன். அப்போது என்னை ெதாடர்பு கொண்ட சதீஷ் லாரியை அதிகவிலைக்கு விற்று தருவதாக கூறினார். நான் அவரிடம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியை ஒப்படைத்தேன். ஆனால் அவர் லாரியை விற்றுத்தரவில்லை.

    எனவே அவரிடம் லாரிைய திருப்பி கேட்டேன். ஆனால் அவர் திருப்பித்தர மறுத்து விட்டார் என்று தெரிவித்தார்.

    பின்னர் 2 பேர்களிடம் மோசடியில் ஈடுபட்ட சதீசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் அவர் புகார் செய்த 2 பேரிடமும் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சதீசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், கிண்ணி மங்கலம், கொக்குளம், சாப்டூர், வால்ராஜபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இதே பகுதியில் வசிக்கும் ஒரு சில வியாபாரிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களை விவசாயிகள் என்று கூறி தரமற்ற நெல்லை வழங்கியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி விவசாயிகள் புகார் செய்ததால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் உத்தரவின் பெயரில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் வாங்கப்பட்ட நெல்லை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவை சமீபத்தில் அறுவடை செய்த நெல் அல்ல.  அவை தரமற்றவை என ஆய்வில் தெரியவந்தது.

    எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.41 லட்சம் மோசடி: மதுரை நகை வியாபாரி, மகன்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்’ என்று தெரிவித்தனர்.

    மதுரை

    சேலம் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் குமார் (41). இவர் மதுரை மாநகர குற்றபுலனாய்வு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    அதில் நான் சேலம் மாவட்டத்தில் வெள்ளி ஆபரண நகைக்கடை நடத்தி வருகிறேன். மதுரை பி.பி.குளம், ரத்தினசாமி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோர் என்னை தேடி வந்தனர். அவர்கள், நாங்கள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் நகை கடை நடத்தி வருகிறோம். நீங்கள் கடனுக்கு நகை தாருங்கள். நாங்கள் அதனை விற்று சில மாதங்களில் பணம் செலுத்தி விடுகிறோம்' என்று தெரிவித்தனர்.

    நான் அவர்களுக்கு 56.876 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் கொடுத்தேன். இதனை பெற்றுக் கொண்ட அவர்கள், இதுவரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை. நகைகளையும் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். போலீசார் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

    மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் குப்புசாமி மேற்பார்வையில், மாநகர குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன்கள் பிரசன்ன வெங்கடேசன், அனந்த லட்சுமணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×