search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • மகாமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்செரிதல் விழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்களை சுமந்து ஊர்வலமாக வந்தனர்

    அரியலூர்,

    அரியலூர்காந்தி மார்க்கெட் பகுதியில் இச்சிலிமரத்து மகாமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூச்செரிதல் விழா நடைபெறுவது வழக்கம்.இதனை முன்னிட்டு அரியலூர் செட்டி ஏரிக்கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பூத்தட்அடை சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். ஊர்வலம் பேருந்து நிலையம், தேரடி வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பன்னீர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களம், ஆராதனைகளும் நடைபெற்றது. அதன் பின்னர் தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    • பெரம்பலூரில் 8-வது புத்தக திருவிழா கோலாகலமாக தொடங்கியது
    • 3ம் தேதி வரை நடைபெறுகிறது

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 8 வது புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது.பெரம்பலூர் நகராட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள புத்தகத்திருவிழா தொடக்க விழாவிற்கு கலெக்டர் கற்பகம் தலைமை வகித்தார். திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி, எஸ்பி ஷ்யாம்ளாதேவி, எம்எல்ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் புத்தகத் திருவிழாவினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் "கற்கை நன்றே" என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். அயலி என்ற இணைய தொடரில் நடித்துள்ள அபி நட்சத்திராவிற்கு பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பாக "பெண்மையை போற்றுவோம்" சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    இதில் 100 அரங்குகளில் 100க்கு மேற்பட்ட தலைப்பு களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புத்தங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 14 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலை கைதிகளுக்கு பயன்படும் வகையில் புத்தகம் வழங்க விரும்பும் நபர்கள் புத்தகங்களை வாங்கி பரிசளிக்க ஏதுவாக சிறைத்து றையின் சார்பில் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.கலை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழா, பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கியுள்ளன.விழாவில் நகராட்சி தலைவர் அம்பிகா, யூனியன் சேர்மன்கன் மீனாம்பாள், பிரபா, ராமலிங்கம், மக்கள் பண்பாட்டு மன்ற தலைவர் சரவணன், செயலாளர் அரவிந்தன், நகராட்சி ஆணையர் (பொ) ராதா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரநிதிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டிஆர்ஓ அங்கையற்கண்ணி வரவேற்றார். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லலிதா நன்றி கூறினார்.இரண்டாம் நாளான இன்று (26ம்தேதி) பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா "புத்தகம் என்ன செய்யும்?" என்ற தலைப்பிலும், பாவலர் அறிவுமதி "போர் என்ன செய்யும்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆண்டன்பெனி "இன்னொரு தாய்வீடு" என்ற தலைப்பிலும் கருத்துறை யாற்றவுள்ளனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெறகிறது. இந்த புத்தகத்திருவிழா வரும் 3ம்தேதி வரை நடைபெறுகிறது.

    • 40 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
    • தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    நிழல் தரும் மரக்கன்றுகளை இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் வழங்கினார்.

    மரக்கன்றுகளை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் எம்.ராம்குமார், வாகீஸ்வரன் ஆகியோர் நடவு செய்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், தலைமை காவலர் பாலமுருகன், மகளிர் காவலர் சண்முகப்பிரியா, அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், இயற்கை ஆர்வலர் ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் சுமார் 40 ஆண்டுகளாக மரக்கன்று களை உற்பத்தி செய்து பொது இடங்களில் நட்டு பராமரித்து வருகிறார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

    வேலாயுதம்பாளையம்

    வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது. நேற்று காலை 8.15 மணிக்கு கரூர் நாமக்கல் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது. அதில் யானை, ஒட்டகம், காளை மற்றும் குதிரைகள் பங்கேற்றன. பின் கோவிலை அடைந்த தீர்த்த குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை பக்தியுடன் வழிபட்டனர். இன்று மாலை 5 மணி முதல் நாளை அதிகாலை வரை நான்கு கால யாக பூஜைகள் நடக்கிறது. வரும் 27 காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழு தலைவரும், புகலூர் நகராட்சி தலைவருமான நொய்யல் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆலங்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் 56-வது ஆண்டு விழா
    • பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பு னித அற்புத மாதா நடுநிலைப் பள்ளியின் 56வது ஆண்டு விழா பள் ளி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.ஆண்டு விழாவிற்கு வருகை தந்த அரசு அதிகாரிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரையும் பள்ளியின் தாளாளர் ஆர்கே அடிகளா ர் மற்றும் அருட்தந்தை கித்தேரிமுத்து ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.பள்ளியின் தலைமையாசிரியர் சூசைராஜ் நடப்பாண்டிற்கான ஆண் டறிக்கை வாசித்து தலைமை ஏற்றார்.பள்ளி ஆண்டு விழாவிற்கு சிற ப்பு விருந்தினராக வருகை தந்த புதுக்கோட்டை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் ஆண்டறிக்கை மற்றும் கட்டுரை,ஓவியம் பாடல் ஆடல் மற்றும் விளையாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெ ற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசுகளை வழங்கினார்.ஆண்டு விழாவில் பள்ளியில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றது.ஆண்டு விழாவில் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர்கள் கருணாகரன் கவிதா தனராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாண வ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியைகள் அலு வலக பணியாளர்கள் முக்கியஸ்தர்கள் ஏராளமானோர் விழாவில் க லந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர் ஜோசப் அ னைவருக்கும் நன்றி கூறினார்.

    கிராம காவல் திட்டத்தை எஸ்.பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்து றையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் "கிராம காவல்" என்ற புதிய திட்டத்தை எஸ்பி ஷ்யாம்ளாதேவி தொடங்கி வைத்து அவர் பேசுகையில்:-பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் "கிராம காவல்" திட்டம் ஏற்படு த்தப்பட்டு தொடங்க ப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தாய்க்கிராமம் அதன் சேய்கிராமம் என மொத்தம் 146 கிராமங்களுக்கும் தலா ஒரு போலீசாரை நியமித்து அந்த போலீசார் வாரம் ஒருமுறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அந்தந்த கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களது கோரிக்கைகளை எனது (எஸ்பி ) பார்வைக்கு கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் சந்தேகப்ப டும்படியான நபர்கள் யாரேனும் சுற்றித்திறிந்தால் உடனடியாக காவல்து றையினருக்கு தகவல் தெரிவி க்கப்பட்டு குற்றங்கள் தடுக்கவும், குற்ற ச்செயல்களில் ஈடுபடு வோரின் தகவல்களை சேகரிப்பதன் மூலம் நடந்த குற்றங்களை கண்டறியவும், குற்றம் நடக்காமல் தடுக்கவும் ஏதுவாக இருக்கும்.ஒவ்வொரு கிரா மத்திற்கும் காவல்துறையினர் கிராம பொதுமக்கள் என அனைவரும் இணைத்து ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு தகவல்கள் அனைத்தும் அதில் சேகரிக்கபட்டு குற்ற செயல்களை தடுப்பது இதன் மற்றுமொரு நோக்கமாகும். மேலும் இத்திட்டதின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், அரும்பாவூர், குன்னம், மங்களமேடு, வ.களத்தூர், கை.களத்தூர் ஆகிய 8 போலீஸ் ஸ்டேசன்கள் எல்லை க்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 146 வாட்ஸ்அப் குழுக்கள் தொடங்க ப்பட்டு தகவல்கள் பரிமா ற்றப்படும்.இந்த ஒவ்வொரு வாட்ஸ்அப் குழுவிலும் அந்தந்த கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட போலீசார், போலீஸ் ஸ்டேசன் அதிகாரிகள் கிராமத்தில் முக்கிய நபர்கள் மற்றும் தன்னா ர்வலர்கள் மாணவர்கள், பொது மக்கள் என அனைவரும் இடம்பெறுவர்.இத்திட்டம் குற்ற சம்பவங்களை குறைக்கும் நோக்கத்தோடும், பொது மக்களையும் காவல்துறை யினரையும் இணைக்கும் பாலம் போல் இத்திட்டம் செயல்படும். மேலும் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டு ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன் (தலைமையிடம்), பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு) மற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெ க்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • திமுக முன்னோடிகளுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டது

    அரியலூர்,

     கங்கை கொண்ட சோழபுரம் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு " மாபெரும் இரத்த தான முகாம்" மற்றும் " நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா" நடைபெற்றது.ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. மணிமாறன், அவர்கள் தலைமையில் மாவட்ட கழக பிரதிநிதி எஸ்.கே.பி. சங்கரன், வரவேற்புரை ஆற்றனார்.தலைமை செயற்குழுஉறுப்பினர் எம். பி.பாலசுப்ரமணியன், முன்னிலையில் மாநில சட்ட திட்ட திருத்தகுழு இணை செயலாளர் சுபா.சந்திரசேகர்.நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்."இரத்த தான முகாம்" விழாவில் கழக முன்னோடிகளுக்கு புத்தாடை வழங்கி, மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் கொண்டு பொது மக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.முகாமில் பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.எம். பொய்யாமொழி. மாவட்ட பொருளாளர் கு. இராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம். ஷாஜகான் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வீர (சிவா) என்கிற சிவகுருநாதன், நன்றி உரை ஆற்றி விழாவினை நிறைவு செய்தார்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது.
    • பள்ளி - கல்லூரிமாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி தேசிய நுகர்வோர்பாதுகாப்பு தினம்-உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவானது " தூய்மையானஆற்றலின் மூலமாக நுகர்வோர்களை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் (மாவட்ட கலெக்டர் அலுவலக அறை எண்.20) மாவட்ட கலெக்டர் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் நுகர்வோர் நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்அரசுத்துறைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், சுய உதவிக்குழுவினர் ஆகியோர்களைஒருங்கிணைத்து விழா கொண்டாடப்பட உள்ளது.

    நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் சிறப்பம்சங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு சட்டம் -2011 (பேக்கிங் மற்றும் லேபிளிங்) சட்ட விதிமீறல்கள், உணவுப்பொருள் வீணாவதை தடுத்தல் அல்லது தவிர்த்தல், தவறானவிளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாக கொண்டு ஓவியம் வரைதல் போட்டி, கவிதை- கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் முதல், மற்றும் இரண்டாம், மூன்றாம் இடம் பெற்ற பள்ளி- கல்லூரிமாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    விழாவில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    அரியலூர், சிறுவாளூர் அரசு பள்ளியில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் அருகே உள்ள சிறுவளூர் அரசு  உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழா பள்ளியின் தலை மையாசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையாளர் முருகானந்தம் பேசும் போது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிகவும் அவசியமானது. உலகில் தற்பொழுது 40 சதவீத மக்களுக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை . உணவு, உடையை கூட உற்பத்தி செய்யும் மனிதனால் நீரை உற்பத்தி செய்ய முடியாது. எனவே அடுத்த தலைமுறைக்கு நீரை விட்டுச் செல்ல நாம் மரங்களை வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும்.  தண்ணீரை வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில், குடிநீரை ஆறு, ஏரி, அருவி, குளம் போன்ற இடங்களில் எடுத்த மனிதன் இன்று பாட்டில்களிலும் தண்ணீர் கேன்களிலும் பெறுகிறான். அடுத்த தலைமுறைக்கு ஆறு , குளம் என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு இன்று ஆறு குளங்கள் காணாமல் போய்விட்டன.நாகரிக மோகம், தொழிற்சாலைகள் அதிகப்படியான நீர் பயன்பாடு போன்றவற்றால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது . எனவே அடுத்த தலைமுறைக்கு குடிநீரை விட்டு செல்ல வேண்டுமென்றால் மக்கள் ஒவ்வொருவரும் இணைந்து கண்ணில் படும் இடங்களில் எல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும், நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

    • ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடைபெற்றது
    • மாணவர்கள் கற்று கொண்ட செயல்முறைகளை, தனித்தனியாக வெளிப்படுத்தினர்

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின், ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், எழுதும் திறன், வாசித்தல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாணவர்கள் செயல்பாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் கற்று கொண்ட செயல்முறைகளை, தனித்தனியாக வெளிப்படுத்தினர். இதில் மாணவர்கள் வாசிக்கும் திறன், பாடல் பாடி ஒப்புவித்தல் போன்ற திறன்களை வெளிப்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலைமணிகலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு
    • எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவை, எம்.எல்.ஏ.கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி சௌந்தரராஜன், ஒப்பந்தக்காரர் துரைமாறன் மற்றும் கழக நிர்வாகிகள், நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்
    • இயற்கையை நேசிக்க உறுதி மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வனத்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் உலக வன நாள் விழா கொண்டாடப்பட்டது.தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்த உலக வன நாள் விழாவிறகு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், " ஐக்கிய நாடுகளின் சபையில் மார்ச் 21 ஆம் நாள் உலக வன நாள் விழாவாக கொண்டடாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நாம் உலக வனநாளை கொண்டாடி வருகின்றோம். காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக இருக்கின்றது. அதற்கு நாம் செய்ய வேண்டியது காடுகளை பாதுகாக்க வேண்டும். காடு செழித்தால் நாடு செழிக்கும். காடுகளை பாதுகாப்போம், வெப்பம் தணிப்போம், இயற்கையை நேசிப்போம் என நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்" என தெரிவித்தார்.சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்துகொண்டு பேசுகையில், மாணவ, மாணவிகளிடம் " வன வளத்தை நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவும் அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்பத்துவதற்காகதான் உலக வன நாளை நாம் கொண்டாடுகின்றோம். மனித வாழ்விற்கு தேவையான பல பொருட்களை வழங்கக்கூடிய இடம் தான் வனம். வனங்கள் தான் நம் வாழ்வாதாரத்திற்கு தேவையான தூய்மையான நீரையும் தூய காற்றையும் தருகின்றது. அது மட்டுமின்றி நமது அன்றாடத் தேவைகளான விறகு. விலங்குகளுக்கு தேவையான தீவனம். மருத்துவ மூலிகைகளையும் அள்ளித் தரும் பொக்கிஷம். இந்த நன்னாளில் நாம் வனங்கள் நமக்கு தரும் நன்மைகளை மனதில் வைத்து வனவளத்தை பேணி பாதுகாப்போம் என உறுதி மொழி ஏற்போம்." என தெரிவித்தார். தொடர்ந்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ் ஆகியோரும் பேசினர்.பின்னர் மரக்கன்று நடும் விழா நடந்தது. முன்னதாக உலக வன நாளையொட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த வன நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வன அலுவலர் குகனேஷ், எஸ்பி ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் கற்பகம் கொடியைசைத்து தொடங்கி வைத்தார். மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்நிகழ்ச்சியில் வனச்சரகர் பழனிகுமரன், சீனிவாசன் கலைக்கல்லூரி முதல்வர் வெற்றிவேலன், கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி, வேளாண் கல்லூரி முதல்வர் சாந்தாகோவிந்த, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    ×