search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.
    • முன்னாள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு ஊராட்சியில் 31 குடும்பங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையா ற்றினார்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் வி. ஜவகர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில கட்டு ப்பாட்டு குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ கலந்துகொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் பொ ன்னாடை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான வை. செல்வராஜ் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. மாரிமுத்து, மாநில குழு உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே. உலகநாதன், வட்டார ஊராட்சி தலைவரும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான அ. பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஞானமோகன், பி.வி சந்திர ராமன் கே ஆர் ஜோசப் விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோ ஜெயபால் விவசாய தொழிலாளர் சங்கத்தின்ஒன்றிய செயலாளர் எம். மகாலிங்கம்

    மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சு. தமிழ்ச்செல்வி ராஜா மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எஸ் கவிதா மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே சுஜாதா வட்டார ஊராட்சி உறுப்பினர் இந்திரா வெள்ளைச்சாமி இராயநல்லூர் ஊராட்சி தலைவர் எம் ரஜினி சுப்பிர மணியன், ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் எஸ்.ஜெயபால் வங்கிஊழியர்சங்கத்தின் பொறுப்பாளர்கள் தோழர் சி.பாஸ்கர், தோழர் எஸ்.ராமச்சந்திரன்உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

    • கரூரில் பிள்ளையார் நோன்பு விழா நடந்தது.
    • விநாயகர் முன்பு பூஜையில் வைக்கப்பட்ட மங்களப் பொருட்கள் ஏலம் விடபட்டது

    கரூர்

    உலகெங்கும் வாழுகிற நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்கள் தனித்து கடைப்பிடிக்கிற நோன்பு பிள்ளையார் நோன்பு ஆகும். அதன்படி நேற்று கரூா் நகரத்தாா் சங்கம் சார்பில் கரூாில் பிள்ளையர் நோன்பு விழா நடைபெற்றது. இதையடுத்து விநாயகர் முன்பு உப்பு, மஞ்சள், தேங்காய், பழம், கற்கண்டு, சர்க்கரை, பொம்மை, குழந்தை சட்டை, பள்ளி புத்தகப்பை, மணமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து விநாயகர் முன்பு பூஜையில் வைக்கப்பட்ட மங்களப் பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஒரு கிலோ உப்பு ரூ.9,001-க்கும், ஒரு தேங்காய் ரூ.2,001-க்கும், ஒரு ஜோடி மணமாலை ரூ.25 ஆயிரத்து 500க்கும், பணப்பை ரூ.10 ஆயிரத்திற்கும், சிறிய குபேரன் சாமி சிலை ரூ.9 ஆயிரத்திற்கும், ஒரு குத்துவிளக்கு ரூ.10 ஆயிரத்து 500க்கும், ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.1,501-க்கும், ஒரு எலுமிச்சைப்பழம் ரூ. 1,700க்கும் உள்பட 18 வகையான மங்களப்பொருட்கள் மொத்தம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு 9 வகைப்பலகாரங்களுடன் அன்னதானம் நடைபெற்றது.


    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் விழா நடைபெற்றது
    • மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் தனது நிதியிலிருந்து ரூ.7லட்சம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளிக்கு வழங்கினார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கம் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட மனப்பட்டி தொடக்கப்பள்ளி, குருவாண்டான் தெரு தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன் தனது நிதியிலிருந்து ரூ.7லட்சம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளிக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் கவுன்சிலர் பூபதி, நெப்புகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஒன்றிய கழகச் செயலாளர் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் சிலையை தமிழகத்தில் நிறுவி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என சீமான் பேசினார்
    • தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது என்ற உண்மையை உல குக்கு முதன்முதலாக அறி–வித்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் ஆவார்

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்த் தேசியக் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ம.சோ.விக்டர் தொகுத்து வழங்கிய பிரான்சிசு ஓயிட் எல்லீசின் யாப்பிலக்கண விளக்கவுரை நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 200 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் கலெக்டராக பணியாற்றிய பிரான் சிசு ஒயிட் எல்லிசு என்ற ஆங்கிலேயரைப் பற்றி, தமிழ்நாட்டில் அறிந்திருப்ப–வர்கள் ஒரு சிலரே. 1809ம் ஆண்டில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின்ஆட்சித் தலைவராகப் பணி–யாற்றியவர் தான் எல்லி–சுப் பெருமகனார். தமிழில் மட்டுமல்லாது, தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அதன் விளை–வாக தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது என்ற உண்மையை உல–குக்கு முதன்முதலாக அறி–வித்தவர். மிகக்குறுகிய ஆண்டுக–ளில் தமிழைக் கற்று தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆய்வு செய்து விளக்கவுரை–யையும் பதிவு செய்தவர். தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் தொன்னூல் விளக்கம் போன்ற நூல்களை முழுவ–துமாகக் கற்று உள்வாங்கிக் கொண்டவர். மிக குறுகிய தன் வாழ்நாளில், ஏராளமான தமிழ் ஒலைச் சுவடிகளை சென்னைக் கோட்டையில் சேர்த்து வைத்து அங்கு அச்சுக்கூடம் ஒன்றையும் அங்கு நிறுவியவர். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, தேம்பாவணி, திருக்காவலூர், கலம்பகம் போன்ற நூல்களுக்கு விளக்கவுரை எழுதியவர். திருவள்ளுவரின் ஓலைச் சுவடி–களை எடுத்து அதனை முதன் முதலில் அச்சு வடி–வில் கொண்டு வந்தவர் எல்லீசு ஆவார். அவ்வாறு பன்முகத்திறமை–களைக் கொண்டிருந்த எல்லிசு தனது 41வது வய–தில் ராமநாதபுரத்தில் மறைந்தார். தமிழ்ப் பகைவர்கள் அவருக்கு உண–வில் விஷம்  வைத்து கொன்று விட்டதாக கூறப்ப–டு–கிறது. 10 ஆண்டு–களே பணி–யிலிருந்த எல்லிசு தமிழ் மகனாக வாழ்ந்தி–ருந்தார். அர–சாங்கக் கோப்புகளில் கூட, எல்லீசன் என்று தமிழிலேயே கையொப்பமிட்டார். திரா–விடம் என்ற சொல்லை எல்லிசு தன் பதிவுகளில் பயன்படுத்தவே இல்லை. பிராமணர்கள் வழியில் கால்டுவெல் திராவிடம், திராவிடர் என்ற சொற்களை அறிமுகம் செய்து, தமிழர் வரலாற்றில் குழப்பத்தைத் தோற்றுவித்து விட்டார். எல்லிசின் அரிய ஆய்வுகள், மறைக்கப்பட்டன, மறுக்கப்பட்டன. தமிழை, தமிழரை அடிமைப்படுத்த நினைத்த தமிழ்ப் பகைவர்கள், கால்டுவெல்லைத் தூக்கி நிறுத்தி விளம்பரம் செய்தனர். எல்லீசு காலத்துக்குப் பின்னர், ஜி.யூ. போப் பையர் எல்லிசின் பதி–வுகள் சிலவற்றையும் பல ஓலைச் சுவடிகளையும் தன்னுடன் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று, லண்டன் அருங்காட்சியகத்தில் சேர்த்தார். அவை, இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் எல்லிசு தம் கைப்பட எழுதிய குறிப்புகள், 153 பக்கங்களில் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. கறுப்பு மையி–னால் பழைய ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் விளக்கவு–ரைகளோடு அக்குறிப்பு–கள் உள்ளன. அக்குறிப்புகள் இரண்டு பகுதிகளாக உள்ளன. இரண்டு பகுதிகளிலும் தமிழ்ச் செய்யுள் அமைப்பு முறை–களை எல்லீசு விளக்கி–யுள்ளார். நேர்அசை, நிரையசை, தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்றவாறு, அவர் செய்யுட்களை ஆய்வு செய்துள்ளார். யாப்பிலக்கணத்தை முற்றிலும் கற்றுத் தேர்ந்திருந்தார் என்பது அவருடைய விளக்க–வுரை–களால் தெளிவாகி–ன்றன. இன்று, தமிழைப் படித்த–வர்களுக்கும் கிட்டாத, செய்யுள் இலக்கணப் புலமை எல்லீசுக்கு இருந்ததை அவருடைய விளக்கவுரைகள் கூறுகின்றன. உச்சத்தில் வைத்துப் பாராட்டப்ப வேண்டியவர் எவ்வாறு மறக்கப்பட்டார். எனவே தமிழகத்தில் பிரான்சிசு ஒயிட் எல்லீசு சிலையை நிறுவி, தமிழக அரசு அவருக்கு ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி–னார்.


    • அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள அனுமன் சுவாமி கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அஞ்சலக வீதியில் உள்ள காளிங்க நர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அனுமன் சுவாமிக்கு வெண்ணை, சந்தனம், பால், பன்னீர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை இராம நாம பாராயணம் பாடப்பட்டது. பின்னர் அனுமன் சுவாமிக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பூர் பல்லடம் சாலை இந்திராநகரில் அமைந்துள்ளஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்று 5008வடமாலை சாற்றப்பட்டது .இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கணித பாடத்தை சிறப்பாக கற்றுக் கொண்டால் அனைத்து சாதனைகளை நிகழ்த்த முடியும்
    • அரசு பள்ளியில் தேசிய கணித தின விழா நடைபெற்றது.

    அரியலூர் :

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய கணித தின விழா நடைபெற்றது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இருக்கும் பாடங்களிலேயே எளிமையான பாடம் கணித பாடம். அதனை சிறப்பாக கற்றுக் கொண்டால் அனைத்து சாதனைகளையும் நிகழ்த்த முடியும். கணிதத்தை ஆர்வமுடன் கற்க வேண்டும் என்றார். தொடர்ந்து, கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி கணித பேராசிரியர் கண்ணன் பேசுகையில், தேசிய கணித தினமானது சீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்த தின விழா தேசிய கணித தினமாக கொண்டாடுகின்றோம். எந்தவித வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் ராமானுஜன் கணிதத்தின் மீது இருந்த ஆர்வத்தால் பல புதிய கண்டுப்பிடிப்புகளை கண்டறிந்தார். உலகிற்கு கணித பெருமைகளை விளக்கிய தமிழர் ஆவார். நீங்களும் அவரைப் போன்று கணிதத்தில் ஆர்வம் கொண்டு படித்து பல புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மன் ராஜதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, கல்வி ஆர்வலர் கருணாநிதி, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, கோகிலா மற்றும் இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


    விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் அல்காலித் அறிக்கை

    கன்னியாகுமரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குமரி மாவட்டம் அரு மனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 25-வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து சமூக நல்லிணக்க மாநாடு நடை பெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய்வசந்த், செல்லக்குமார், தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன், ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர் துரை வைகோ, எஸ்.ஆர்.எம். கல்வி குழும தலை வர் ரவி பச்சமுத்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி, மாநில தலைவர் முபாரக், பெங்களூர் டாக்டர் ராபர்ட் கிறிஸ்டோபர், நடிகரும் டைரக்டருமான தியாகராஜன், நடிகர் பிரசாந்த், இந்திய குடியரசு கட்சி தமிழக தலைவர் சூசை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் மாவட்ட முக்கிய பிரமுகர்கள், இந்நாள், முன்னாள் பேராயர்கள் பங்கேற்கிறார்கள்.

    மாநாட்டில் பங்கேற்ப தற்காக சென்னையில் இருந்து திருமாவளவன் திருவனந்தபுரம் வருகிறார்.அங்கிருந்து இன்று மாலை கார் மூலம் அருமனை வருகிறார். அவருக்கு கட்சி யின் சார்பில் களியக்கா விளையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படு கிறது. இந்த நிகழ்ச்சியில் மதசார்பற்ற சக்திகள், ஜனநாயக சக்திகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5 மினாராக்கள், அலங்கார வாசல் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலம்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 466-ம் ஆண்டு கந்தூரி விழா நேற்று பாய்மரம் ஏற்றப்பட்ட நிலையில் நாளை (24-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    விழாவை முன்னிட்டு தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் நாகூர் தர்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.

    இதனை கண்டு முஸ்லிம்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 2-ந் தேதி சந்தன கூடு ஊர்வலமும், தொடர்ந்து 3-ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    • மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் மார்கழி அஷ்டமி சப்பர விழா நடந்தது. உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோவில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாக சோமநாதர் சுவாமியும், மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும், சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளினர். கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும், பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • நிகழ்ச்சியில் 5, 10, 15 கிலோ பக்கெட் நெய், 250 கிராம் பால்கோவா பாக்ஸ் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.
    • மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    முளகுமூடு பால் பதனிடும் நிலையத்தில் விற்பனை, முகவர் தின விழா நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின் சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசுரெத்தி னம் முன்னிலை வகித்தார். நிலைய பணியா ளர் தனிஸ்லாஸ் வரவேற்று பேசினார். மேலாண்மை இயக்குனர் ஜெரால்டு ஜஸ்டின் அறி முக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஊரம்பு பாத்திமா டிரேடர்ஸ் நிர்வாகி வர்கீஸ் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் 5, 10, 15 கிலோ பக்கெட் நெய், 250 கிராம் பால்கோவா பாக்ஸ் போன் றவை அறிமுகப்படுத்தப்பட் டது. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை முக வர்கள் பலர் கலந்து கொண்ட னர். முடிவில், நிலைய பணி யாளர் சாலமோன் ஜோஸ் நன்றி கூறினார்.

    • குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.
    • வருகிற 20-ந் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள அய்ப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.

    மேல் சாந்தி கவுதம், குமார், மது சர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கொடியேற்றி வைத்தனர். வருகிற 20-ந் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. 21-ந் தேதி பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் அய்யப்ப சுவாமிக்கு பஜனை விழாவும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 25-ந் தேதி மண்டல பூஜை, சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா வுக்கான ஏற்பாடுகளை அம்மன்நகர் அய்யப்பன் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
    • 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, வாழப்பாடி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    வாழப்பாடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் சக்ரவர்த்தி, பேளூர் நகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    சிங்கிபுரம் ராம்கோ நிறுவன பணியாளர்கள் மணிவேல், முனியசாமி, வடிவேல், துளி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் ஆசிரியர் ராஜசேகரன், உதயா அறக்கட்டளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர், 250 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பரிசு மற்றும் மங்கலப்பொருட்கள் வழங்கினர்.

    ×