search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229393"

    • புனித செபஸ்தியார் ஆலய நூற்றாண்டு விழா நடைபெற்றது
    • சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    திருச்சி:

    திருச்சி சோமரசம்பேட்டை புனித செபஸ்தியார் ஆலயம் திருச்சியில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஆலயம் 1922 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கீழ் வயலூர், எட்டரை அல்லித்துறை, மேல சவேரியார்புரம், இனியானூர் மற்றும் புங்கனூர் கிராமங்களில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களுக்கு பங்கு ஆலயமாக விளங்குகின்றது.

    இந்தப் புனித செபஸ்தியார் ஆலயத்தின் தற்போதைய பங்குத்தந்தை எட்வர்ட் ராஜா ஏற்பாட்டின் படி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு ஆலயத்தை புனிதப்படுத்தி சிறப்பு திருப்பலி ஆற்றினார். தமிழகம் முழுவதும் இருந்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் வருகை புரிந்து புனித செபஸ்தியாரை வழிபட்டுச் சென்றனர். 

    • வெங்கடேஸ்வரா பள்ளியில் பிஐஎஸ் கிளை தொடக்க விழா நடைபெற்றது
    • புதுக்கோட்டை திருக்கோகர்ணம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் மதுரை இந்திய தர நிர்ணய அமைவனமும் இணைந்து நடத்திய புதுக்கோட்டை பிஐஎஸ் தர நிர்ணய சங்கத்தின் கிளை துவக்க விழா நடைபெற்றது.

    பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி விழாவினை தலைமையேற்க மாணவர்கள் நர்மதா, ஹரினிபிரியா, சுந்தர், முகமது சாஃபிக் மற்றும் ஆசிரியர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தனர்.

    இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மதுரை கிளை மேலாளர்கள் சிவகுமார் மற்றும் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இந்திய தர நிர்யணத்தின் செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் மேம்பாட்டிற்கான ஒரு கருவி "பிஐஎஸ் கேர் ஆப்" ஆகியவை பற்றி விளக்கி கூறினர்.

    அப்போது அவர்கள் பேசும்போது "பொதுவாக கடைக்குச் சென்று ஒரு பொருளை வாங்கும்போது அந்தப் பொருள் தரமானதாக உள்ளதா என்பதை சரிபார் த்து வாங்கவேண்டும். சந்தையில் ஏராளமான தரமற்ற பொருட்கள் விற்கப்படும் நிலையில் வாங்கும் பொருளில் இந்திய தர நிர்யண முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்கவேண்டியது அவசியம் என்று கூறினர். மேலும் பொருள்களின் தர நிர்ணயம் பற்றிய மாணவர்களுக்கான வினாடிவினா போட்டியினை நடத்தி ரொக்கப்பரிசு வழங்கினாரகள். பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிஐஎஸ் கிளப்பின் மாணவர் தலைவர்களாக நர்மதா, ஹரினிபிரியா, சுந்தர், முகமது சாஃபிக் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இந்த அமைப்பின் புதிய உறுப்பினர்களை வாழ்த்தி பள்ளியின் முதல்வர் பேசும்போது, மாணவர் கள், பெற்றோர்களுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பொருள்கள் வாங்கும்போது தரமான ஐஎஸ்ஐ முத்திரை உள்ள பொருட்களை வாங்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த விழாவில் துணைமுதல்வர் குமாரவேல், ஆசிரியர;கள் கமல்ராஜ், துர் காதேவி, அபிராமசுந்தரி, ராஜா, உதயகுமார் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து க்கொண்டனர்.

    • துணை சுகாதார நிலையம் திறப்பு விழா கொண்டாட்டம் நடைபெற்றது
    • முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் இருந்தது. இதை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கடந்த மாதம் அரியலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவிலூர் துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இநநிலையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து கோவிலூர் கிராம மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர்.

    • சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.
    • மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

    இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

    இன்று மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நலம் காக்கும் நாயகி அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாகம் ஆரம்பம், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகள், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

    • புனித அமல அன்னை ஆலய பெருவிழா நடைபெற்றது
    • தேர் பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்

    திருச்சி:

    திருச்சி ஏர்போர்ட் அடுத்துள்ள செம்பட்டு புனித அமல அன்னை ஆலய பெருவிழா மிக சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் நடைபெற்றது. முன்னதாக கடந்த 3-ந்தேதி அன்னையின் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து விழாவையொட்டி அமல அன்னையின் நவநாள் திருப்பலி மற்றும் குணமளிக்கும் ஜெப வழிபாடு, நற்கருணை ஆராதனை ஆகியவை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கு இறைமக்கள் அனைவரும் பக்தியோடு கலந்துகொண்ட அன்னையின் வழியாக இறைவனுக்கு நன்றி சொல்லி அவர்களின் குடும்பம் மற்றும் அனைவருக்காகவும் ஜெபித்தனர்.

    7-ந்தேதி அன்னையின் அலங்கார தேர் பவனியும், தொடர்ந்து 8-ந்தேதி அன்னையின் பெருவிழா திருப்பலியும் நடைபெற்றது. கடந்த 16 ஆண்டுகாளாக இந்த பங்கு பெருவிழாவை, மத நல்லிணக்க விழாவாகவும், மதங்கள் கடந்து, மனித நேயம் காப்போம் என்ற உயரிய, உன்னதமான சிந்தனையுடன் ஒற்றுமையை வலியுறுத்தியும் கொண்டாடி வருகிறார்கள்.

    மத நல்லிணக்க விழா ஏற்பாடுகளை புனித அமல அன்னை ஆலய பங்கு இளைஞர், இளம்பெண்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம், அன்பியங்கள், பக்த சபை மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் செய்திருந்தனர். ஆவூர் பங்கு பணியாளர் சூசைராஜ் அன்னையின் பெருவிழா திருப்பலி நிறைவேற்றி ஜெபித்தார்.

    தமிழக புனித நார்பர்ட் துறவற சபை அதிபர் மரிய சூசை மற்றும் பல அருள் பணியாளர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலி நடத்தினர். பங்கு பணியாளர் ஆரோக்கிய செல்வன் மற்றும் உதவி பங்கு பணியாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    நல்லிணக்க விழாவில் திருச்சி மாநகராட்சி 65-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாவதி, கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் மற்றும் முன்னாள் மறைமாவட்ட தலைவர் செல்வம், கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் மற்றும் மறைமாவட்ட தலைவர் சற்குணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    • கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது
    • குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் மழையூர் மேம்படுத்தப்பட்ட வட்டார சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து 120 கர்ப்பிணிகள் பங்கேற்றனா்.

    இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கலந்து கொண்டு சீர்வரிசை வழங்கி அதனுடன் சேர்த்து தனது சொந்த செலவில் புடவைகளை சீராக வழங்கி கர்ப்பிணி பெண்களை மகிழ்வித்தார். இந்த வளைகாப்பில் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் அலுவலர்கள் மாலை அணிவித்து சந்தனம், குங்குமம் கொடுத்து வளை யல் அணிவித்தனர்.

    இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது உடல்களை பரிசோதித்துக்கொள்ள மருத்து வமுகாம்களும் நடத்தப்பட்டது.‌ சமூக நலத்துறை சார்பில் கர்ப்ப காலங்களில் பெண்கள் உ ண்ணக்கூடிய உணவு வகைகள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும் கண்காட்சி வைத்து கர்ப்பிணிகளுக்கு விளக்கப்பட்டது.

    பின்னா் மருத்துவமனையை ஆய்வு செய்த எம்எல்ஏ முத்துராஜா நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் முகமது பஜ்ரூல்,சுகாதார மேற்பாா்வையாளா் துரை மாணிக்கம், கவுன்சிலா்கள் திருப்பதி, சுரேஷ் ஊாரட்சி மன்ற தலைவா்கள் கலைச்செல்வி தா்மராஜ், ரெத்தினம், சிவகாமி ராஜமாணிக்கம், திமுக பிரமுகா்கள் பாிமளம், சந்திர சேகா், கணேசன், மணி கண்டன் மற்றும் செவிலி யா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

    • உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது
    • ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் உள்ள பந்துவா கோட்டையில் கிராம மக்களுக்கு மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் ஜுல் பிகார் அலி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஸ்கார்ப் இந்திய களப்பணியாளர் கவிதா மனநலம் பற்றியும், மனநலம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பதையும், அதனை தடுப்பது பற்றியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவம் எடுத்துக் கொள்வது பற்றியும், மாற்றுத்திறனாளி அட்டை பெற்று தருதல், உதவித்தொகை பெறுவது பற்றியும் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்கள் பெற்றுச் சென்றனர்.

    • கைசிக ஏகாதசி சிறப்பு இசை விழா நடைபெற உள்ளது
    • ஸ்ரீரங்கத்தில் இன்று மாலை நடக்கிறது

    திருச்சி:

    திருச்சி துறையூர் ஸ்ரீ ரங்கா நுண்கலை மையம் சார்பில் கைசிகம் சங்கீத ஆராதனை மற்றும் கை சிக ஏகாதசி சிறப்பு இசை விழா இன்று( ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி முளு பாகல் மடத்தில் நடைபெறுகிறது. இதில் சேவா பாரதி தென் தமிழ்நாடு மாவட்டச் செயலாளரும் ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி ஆசிரியருமான கே. முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    விழாவில் வாய்ப்பாட்டு வித்வான் டாக்டர் ஆர். காஷ்யப் மகேஷ், வயலின் வித்வான் ஸ்ரீரங்கம் ஜெ. ஆனந்த், மிருதங்க வித்வான் சேலம் கே. சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு இசை விருந்து அளிக்கிறார்கள்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் நகர நல சங்க மக்கள் செய்தி தொடர்பாளர் ரோட்டேரியன் கே. சீனிவாசன் கூறும் போது, இருமுடி கட்டி விரதம் இருந்து பிரம்மச்சாரி ஐயப்பனை காண செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ரங்கநாதரை வழிபட வருகின்றார்கள். இவ்வாறு வருகை தரும் பக்த கோடிகள் ரங்கநாதன் அருளுடன் இனிமையான இசையையும் கேட்டு மகிழ்கிறார்கள். இன்று நடைபெறும் ஏகாதசி சிறப்பு இசை விழாவிலும் திரளான ஐயப்ப பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • படுகர் இன மொழியில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி,

    ஊட்டி அசெம்பிளி தியேட்டரில் குறும்பட விழா தொடங்கியது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் போதை பழக்கத்தில் இருந்து மாணவர் விடுபடும் கதை கொண்ட குறும்படத்தை அமைச்சரும், கலெக்டரும் பார்த்தனர். குறும்பட விழா 3 நாட்கள் நடக்கிறது. தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு குறும்படம் ஒரு வாய்ப்பாகும். குறிப்பாக ஊட்டியில் குறும்பட தயாரிப்பாளர்கள் மூலம் படுகர் இன மொழியில் குறும்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விழாவில் அசெம்பிளி ரூம்ஸ் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ஜாம்புவானோடை தர்காவின் 721-ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடைபெறுகிறது.
    • தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்தும் துப்புர பணிகளும் நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள் பட்ட ஜாம் புவானோடை தர்கா 721 ம் ஆண்டு பெரிய கந்திரி விழா நடை பெறுவதை முன்னிட்டு தர்கா பகுதியில் துப்புரப் பணிகள் மருந்து அடித்தல் மற்றும் அனைத்துசாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் தலைமையில் சாலை ஓரங்களில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் சாக்கடை போன்ற அனைத்து துப்புர பணிகளும் நடைபெற்றது.

    கந்திரி விழாவை முன்னிட்டு வருகிற 4-ந் தேதி சந்தனக்கூடு விழா மற்றும் 8-ந் தேதி அன்று புனித கொடி இறக்கும் விழா ஜாம் புவா னோடை தர்காவில் நடைபெறுவதை ஒட்டி அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும் என பாரம்பரிய தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் கூறினார்.

    • பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலி சோடா அறிமுக விழா நடைபெற உள்ளது
    • விக்கிரமராஜா 4-ந்தேதி தொடங்கிவைக்கிறார்

    திருச்சி.

    மதுரையில் பேஞ்ஜோஸ் குளிர்பானத்தின் மற்றொரு அறிமுகமாக பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலி சோடா அறிமுக விழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைக்கிறார்.

    திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு 25 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குளிர்பானங்கள் முதலில் கண்ணாடி பாட்டிலிலும், 2017-ல் பெட் பாட்டிலிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது மற்றொரு அறிமுகமாக பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலி சோடா குளிர்பானங்கள் அறிமுக விழா மதுரை சிக்கந்தர் சாவடி, அலங்காநல்லூர் மெயின்ரோடு, ஜெயசுதா மஹால் 4-வது மாடியில் நாளை மறுநாள் (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவிற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு தலைமை தாங்குகிறார். மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா முன்னிலை வகிக்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவரும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளன தேசிய முதன்மை துணைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா முதல் விற்பனையை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக கிருஷ்ணா பேவரேஜஸ் உரிமையாளர் ஜானகி ரவிச்சந்திரன், ஹரிபிரசாத் ஆகியோர் வரவேற்று பேசுகிறார்கள். புதிய அறிமுகமாகும் கோலிசோடா பெட் பாட்டில் முதல் விற்பனையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல் தலைவர் டி.செல்லமுத்து முதல் விற்பனையை தொடங்கிவைக்க அதனை கருப்பு ராஜா ஜெயசுதா பெற்றுக்கொள்கிறார்.

    அதபோல் கோலிசோடா கண்ணாடி பாட்டில் முதல் விற்பனையை வீரையா வேளார் பெற்றுக்கொள்கிறார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவரும் வி.ஜெ.ஆர்.எண்டர் பிரைசஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.கிருஷ்ணன், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களுக்கு ஏரியா வாரியாக ஏஜெண்டுகள் தேவை என்றும், தரமான குளிர்பானங்களை வழங்கிவரும் எங்களது நிறுவனத்திற்கு தொடர்ந்து நல்லாதரவு தர வேண்டுகிறோம் என்றார். நிறைவில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மொத்த விற்பனையாளர் வி.கே.ஆர்.தாமோதரன் நன்றிகூறுகிறார்.

    • அரசு பள்ளியில் அரசியலமைப்பு வார விழா நடந்தது
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அரியலூர்:

    அரசியலமைப்பு வார விழாவை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார. ஊராட்சித் தலைவர் அம்பிகாமாரிமுத்து துணைத் தலைவர் பழனியம்மாள், மேலாண்மை குழுத் தலைவர் அகிலா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ×