search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழிப்பு"

    போலீசார் 2 பேரல்களில் வைக்கப் பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊரல்களை கொட்டி அழித்தனர்.

    விழுப்புரம்:

    சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர். சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கவுரி சங்கர் மற்றும் போலீ சார் போத்துவாய் கஞ்சூர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவது குறித்து சோத னை மேற்கொண்டனர்.

    அப்போது மலைப்பகுதி யில் சாராயம் காய்ச்சுவ தற்காக 2 பேரல்களில் சாராய ஊரல்கள் வைக்கப் பட்டி ருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. உடனே போலீசார் 2 பேரல்களில் வைக்கப் பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊரல்களை கொட்டி அழித்தனர்.

    இது குறித்து சாராயம் காய்ச்சுவதற்கு ஊரல் வைத்திருந்தது யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை பகுதியில் குரும்பாலூர், குரும்பாலூர் ஏரிக்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பதாகவும் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராய பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மேற்பார்வையில் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு செய்தனர்.

    கரியாலூர் 5 சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் குரும்பாலூர் மற்றும் ஏரிக்கரை பகுதியில் சாராய ரெய்டு செய்தனர்.

    அப்போது 4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அருணாசலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.
    • குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 1.92 லட்சம் எக்டரில் சாகுபடி பரப்பு உள்ளது. இவற்றில் பிரதானமாக தென்னை, கரும்பு, நெல், பல்வேறு வகையான காய்கறி வகைகள், பயிறு வகைகள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றன.ஆனால்விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விளைநிலங்கள் தரிசாக உள்ளன.

    இதனை நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.குறிப்பாக ரோட்டை ஒட்டிய விளைநிலங்களில், தொழிற்சாலைகள், வணிகக்கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு விற்கப்படுகிறது.சிலர் விவசாயத்தை கைவிட்டு கோழிப்பண்ணை மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே கிராமப்புற இளைஞர்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபடும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

    தண்ணீர் பற்றாக்குறை, உர விலை உயர்வு, பருவ மழை பொய்த்தல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற பல காரணங்களால் சிலர் விவசாயத்தை கைவிடுகின்றனர்.அதிலும் பலர் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.இதன் காரணமாக ஆண்டுதோறும் பல 100 ஏக்கரில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாய காரணங்களைத்தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது.விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அப்பகுதியில் 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய உறல்களை அழித்து அப்புறப்படுத்தினர்.
    • கரியக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலை குன்னூர் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 பேரல் கள்ளச்சாராய ஊறல்களை மதுவிலக்கு தடுப்பு பிரிவு மற்றும் கரியக்கோயில் போலீஸார் அழித்து அப்புறப்படுத்தினர்.

    கல்வராயன்மலை கருமந்துறை அடுத்த குன்னூர் சேத்தூர் பகுதியில் சாராயம் தயாரிப்பதற்காக சாராய ஊறல்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீஸார் மற்றும் கரியக்கோயில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து போலீசார் நேற்று சேத்தூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்பகுதியில் 5 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய உறல்களை அழித்து அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து கரியக்கோயில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×