search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
    • நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் 15 எண்ணிக்கையிலான 1,2,5,7,10, மற்றும் 15,16, 19,22,32 ஆகிய வார்டுகளின் தெருக்களில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.

    நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 5-வது வார்டு நகராட்சி உறுப்பினர் பால சுப்பிரமணியன் என்ற கண்ணன், இளைநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன், முருகம்மாள் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன் கார் ஏற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    கடையநல்லூர்:

    செங்கோட்டை தாலுகா அச்சன்புதூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 62). இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), உதயமூர்த்தி (38) உள்பட 3 மகன்கள் உள்ளனர்.

    கார் விபத்தில் பலி

    சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று காலையில் முருகம்மாள் தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் அச்சன்புதூர்-சிவராம்பேட்டை சாலையில் சென்றார்.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகம்மாள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உதயமூர்த்தி பலத்த காயம் அடைந்தார்.

    சொத்து தகராறில் கொலை

    இதுகுறித்து இலத்தூர் போலீசார் நடத்திய விசாரணையில், அது விபத்து இல்லை என்பதும், சொத்து தகராறில் முருகம்மாளை அவரது மூத்த மகன் மோகன் காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. மோகனுக்கும், அவரது தாய் முருகம்மாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் முருகம்மாளை காரை ஏற்றி கொல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் ஒருவரின் காரை வாங்கி கொண்டு நெல்லைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். முருகம்மாள் தனது இளையமகனுடன் சென்று கொண்டிருந்த நேரத்தில் அச்சன்புதூர் காட்டுப்பகுதியில் வைத்து காரால் இடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    கேரளா தப்பியோட்டம்

    இதையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது மோகன் கேரளாவிற்கு தப்பிச்சென்றது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து கேரளாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.

    • உதவி தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.
    • போதுமான அளவு குளோரின் மருந்து கலந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலக துணை இயக்குனரிடம் கலந்து ஆலோசனை செய்து மக்களைத்தேடி மருத்துவம் வாகனங்கள் மூலம் கிருஷ்ணாபுரம் மற்றும் மேலக கடையநல்லூர் பகுதிகளில் தனித்தனியே மருத்துவ குழுக்கள் அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு மருத்துவ உதவி தேவைப்படு பவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ பணியாளர்கள் மூலம் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு பள்ளிகளிலேயே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பொறியியல் பிரிவு மூலமாக பொதுமக்களுக்கு குடிநீரில் போதுமான அளவு குளோரின் மருந்து கலந்திட உத்தரவிடப்பட்டு உறுதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரப் பிரிவு பணியாளர்கள் மற்றும் டி.பி.சி. பணியாளர்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு நகராட்சி மேலக்கடையநல்லூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாகவும் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் நகர் எங்கும் முதிர் கொசுக்களை ஒழிக்க புகை மருந்தும், வாறுகால்களில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தும், அனைத்து வார்டுகளிலும் தங்கு தடையின்றி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    மேலும் பொதுமக்கள் காய்ச்சல் கண்ட விவரத்தினை நகராட்சி பொது சுகாதார பிரிவிலும், கிருஷ்ணாபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேலக்கடைய நல்லூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தெரிவித்து மருத்துவ உதவிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சுபாசை, போலீசார் சோதனை செய்தனர்.
    • சுபாசிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை:

    கடையநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே தனிப்பிரிவு காவலர்கள் மஜித், வேலாயுதம் ஆகியோர் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    அதில் அந்த வாலிபர் மேலகடையநல்லூர் மலம்பேட்டை தெருவை சேர்ந்த முருகையா என்பவரது மகன் சுபாஷ்(வயது 21) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை கடையநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ராமகணேஷ் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

    • ஆஸ்பத்திரிக்கு சென்ற காமாக்காள் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • திருட்டு தொடர்பாக காமாக்காள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி காமாக்காள்(வயது 60). இவர்களது மருமகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    6 பவுன் திருட்டு

    இதனால் அவரை ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்த 7-ந்தேதி காமாக்காள் தனது வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று மதியம் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்துகிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் வைக்கப்பட்டுள்ள பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக காமாக்காள் சொக்கம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.
    • இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென்புறம் தினசரி மார்க்கெட் மற்றும் முப்புடாதி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த இடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போலீசிடம் அனுமதி கேட்டு மனு வழங்கப்பட்டது. ஆனால் போலீசார் பள்ளி மாணவிகள் பாதுகாப்பு கருதி அனுமதி வழங்கவில்லை.

    இந்நிலையில் இன்று இந்து முன்னணி தொழிற்சங்கம் சார்பில் அந்த இடத்தில் போலீஸ் தடையை மீறி சங்கம் அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் இருபுறமும் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டங்களில், உள்ளாட்சி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிற்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நகராட்சி பெண் ஊழியர்கள் புது பானையில் புத்தரிசி, பனைவெல்லம் போட்டு பொங்கல் இட்டனர்.

    இதில் பொறியாளர் லாதா, இளநிலை பொறியாளர் ரவிச்சந்நிரன், சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா, மேலாளர் சண்முகவேலு, தேர்தல் பிரிவு மாரியப்பன் , ஸ்டீபன், நகர் மன்ற உறுப்பினர்கள் முகைதீன் கனி, முருகன் ராமகிருஷ்ணன், அனைத்து பணியாளர்கள் மற்றும் அரசு ஒப்பந்தக்காரர்கள், பொதுமக்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றினார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடையநல்லூரில் நகர தி.மு.க. சார்பில் மெகராஜ் நகர் , மேலக்கடையநல்லூர் பார்க், ரஹ்மானியாபுரம் 4-வது தெரு, கிருஷ்ணாபுரம் பஸ் நிலையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் பெட்டி முருகையா, கவுன்சிலர்கள் முகையதீன்கனி, முருகன், வரவேற்றனர். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    • நயினாரகரத்தில் மார்கழி பஜனை சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
    • பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    செங்கோட்டை:

    கடையநல்லூர் அருகில் உள்ள நயினாரகரத்தில் மார்கழி பஜனை நடைபெற்று வருகிறது. சுமார் 37 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கும் பஜனை அதிகாலை 5 மணிக்கே கன்னி விநாயகர் கோவிலில் ஆரம்பித்து சேனை விநாயகர் கோவில் தெரு, பாக்கிய விநாயகர் கோவில் தெரு, குலசேகரநாதர் மற்றும் வெங்கடாஜலபதி கோவில் தெரு வழியாக கருப்பா நதிக்கரையில் வீற்றிருக்கும் குலசேகர அம்மன் கோவில் வரை சென்று, சேனை விநாயகர் கோவில் வந்து முடிவடைகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து நாட்களிலும் பஜனையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பொங்கலன்று பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த மார்கழி பஜனையை திராவிட சுப்பு மற்றும் கோமதி ராமன் வழி நடத்துகின்றனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
    • கடையநல்லூரில் 2 இடங்களில் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என மனு வழங்கினார்.

    கடையநல்லூர்:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து அவரை கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது கடையநல்லூரில் விளையாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களின் நலன் கருதி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடையநல்லூரில் 2 இடங்களில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும், நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    • நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
    • 2 தீர்மானங்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது.

    நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேர்தல் பிரிவு மாரியப்பன் 40 தீர்மானங்களையும் வாசித்தார். 2 தீர்மானங்களை உறுப்பினர்கள் எதிர்த்ததால் தற்காலிகமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டதாக நகர மன்ற தலைவர் அறிவித்தார். தொடர்ந்து மற்ற அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர் மகாலிங்கம் பேசுகையில், கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கிணறுகள் எத்தனை? பொறம்போக்கு இடங்கள் எவை? என்பதை கண்டறிந்து அதனை பாதுகாக்க வேண்டும். சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை உடனடியாக அகற்ற வேண்டும், தினசரி கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.

    எஸ்.டி.பி. கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் யாசர் கான் பேசுகையில், சமீபத்தில் 50 சதவீதம் மட்டுமே வீட்டு வரியை உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பல்வேறு வீடுகளில் 100 முதல் 200 சதவீதம் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றது. எனவே வீட்டு வரி உயர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றார். பா.ஜ.க. உறுப்பினர் சங்கர நாராயணன் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க அனுமதிக்க வேண்டும் என பேசினார்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சந்தியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த சிந்தாமேனி புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் காசி பாண்டி. இவருக்கு முத்துபிரகாஷ்(வயது 17) என்ற மகனும், சந்தியா(16) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காசிபாண்டியை அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் காசிபாண்டி தனது 2 குழந்தைகளையும் வளர்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் சந்தியா துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.

    இதனால் மனவேதனையில் இருந்து வந்த சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×