search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229890"

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுகாதார துறை மூலம் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏற்காடு வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன் தலைமை வகித்தார்.

    ஏற்காடு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி மற்றும் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் டாக்டர் விஜயகுமார் பரிசோதனைகளை மேற்கொண்டார்.

    முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் சிறு உபாதைகளுக்கும் மருந்துகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்காடு வட்டார மருத்துவமனை மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் முகாமில் கலந்துகொண்ட பணியாளர்களுக்கு தோல் வியாதி குறித்து விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை ஏற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வகுமார் செய்திருந்தார். முகாமில் 70-க்கும் மேற்ட்ட 100 நாள் பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.

    • சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.
    • கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.

    நாமக்கல்:

    கோடை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்க ளுக்கும், சுற்றுலா தலங்க ளுக்கும் செல்ல கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம், நாமக்கல் வழியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது.

    கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரெயில் (எண்.07389) இன்று காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29-ந் தேதி அதி காலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடை யும்.

    மறு மார்க்கத்தில் 29-ந் தேதி மதியம் 12.10 மணிக்கு இந்த ரெயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30-ந் தேதி மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த ரெயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணி பெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, பிரூர், அர்சி கெரே, எஸ்எம்விடி பெங்க ளூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரெயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.

    இந்த சிறப்பு ரெயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.

    காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரெயில் 29-ந் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து, 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்து 5 மணிக்கு புறப்படும்.

    சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரெயில்:

    கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இன்று மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் (எண்.06205), மறுநாள் மாலை 5.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் கன்னூ ரில் இருந்து 29-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் (எண்.06206), மறுநாள் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.அர்சிகெரே வில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் தும்கூர், சிக் பனா வர், எஸ்எம்விடி பெங்க ளூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கா ரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வட கரா மற்றும் தலச்சேரி வழியாக கண்ணூரை சென்றடையும்.

    அர்சிகெரேயில் வரும் இந்த ரெயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு இன்று மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்கு வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் நாளை கண்ணூரில் இருந்து அர்சி கெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    • வாழப்பாடி பகுதி கோவில்க ளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபா டுகல் நடைபெற்றன.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்க ளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபா டுகல் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர், சென்றா யப்பெருமாள், பிங்கள விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிர மணியர், செல்வமுத்து மாரி யம்மன், திரெளதியம்மன், வன்னிமரத்து விநாயகர், வேப்பிலைக்குட்டை ஓம்சக்தி சித்தர் பீடம், ஓம்மலை சாய்பாபா கோயில் மற்றும் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    • பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
    • பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளை யம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளை யம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம் மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்க ளில் பங்குனி மாத பவுர்ண மியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது.
    • இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    நாமக்கல்:

    கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளுக்கு முன் கடைபிடிக்கும் தவக்காலம், பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் திருநாளுடன் தொடங்கியது. இந்த தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, குருத்தோலை ஞாயிறு திருநாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

    ஜெருசலேம் நகரில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து, ஒலிவ மரக்கிளை களைக் கையில் ஏந்தி 'தாவிது மகனுக்கு ஓசன்னா, ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்' என ஆர்ப்பரித்துக் கூறி பவனி வந்தனர்.

    அவற்றை நினைவு கூறும் வகையில், இந்த குருத் தோலை பவனியானது, ஆண்டு தோறும் கொண்டா டப்படுகிறது. இந்த குருத் தோலை ஞாயிறு திருப் பலியின் மூலம் புனித வார கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த புனித வாரத்தில் வரும் வியாழக் கிழமை (6-ந் தேதி) புனித வியாழனாக கடைப்பிடிக்கப் படுகிறது.

    மறுநாள் புனித வெள்ளி திருநாளன்று, முழு நாளும் நற்கருணை ஆராதனை நடக்கும். தொடர்ந்து, இறுதி சிலுவை பாதை நடக்கும். வரும், 8-ந் தேதி இரவு திருவிழிப்பு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் விசுவாசிகள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு அனைத்தும் நடக்கும். அதையடுத்து, உயிர்ப்பு பெருவிழா, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    9-ந் தேதி, ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப் படும். புனித வெள்ளி திரு நாளன்று, உலக மக்களுக் காகப் பாவங்களைச் சுமந்து உயிர் விட்ட இயேசுநாதர், 3-ம் நாள் உயிர்த்தெழும் திருநாளே, ஈஸ்டர் பெரு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவால யத்தில் கிறிஸ்தவர்கள், பங்கு தந்தை செல்வம் தலைமையில், குருத்தோலை களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    தேவாலய வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம், துறையூர் சாலை வழியாக சென்று, மீண்டும் தேவா லயத்தை அடைந்தது. தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    அதேபோல், நாமக்கல் கணேசபுரம் சி.எஸ்.ஐ. சர்ச், தமிழ் பாப்திஸ்து திருச்சபை, ஏ.ஜி. சர்ஜ், மோகனூர் அடுத்த பேட்டப்பாளையம் புனித செசிலீ ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில், குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, சிறப்பு பிரார்த் தனை நடந்தது. அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

    • கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும்.

    சேலம்:

    ெரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ெரயில்வே நிர்வாகம் சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சேலம், கரூர், திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஹூப்ளி- தஞ்சாவூர் சிறப்பு ெரயில் (வண்டி எண் 07325) வருகிற 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் ஹூப்ளி ெரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் காலை 9.25 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு கரூர், திருச்சி வழியாக மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் தஞ்சாவூர்- ஹூப்ளி சிறப்பு ெரயில் (வண்டி எண் 07326) வருகிற 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைதோறும் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன், திருச்சி கோட்டை, கரூர் வழியாக இரவு 11.45 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் இங்கிருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

    இந்த தகவலை சேலம்

    ரெயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • இதையடுத்து அமாவாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம்:

    பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 21-ந்தேதி அமாவாசை , 22-ந்தேதி யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இதையடுத்து அமா வாசை, யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன்ம லைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை இயக்கப்ப டுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமாவாசை, யுகாதி தினத்தில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் மாதேஸ்வரன் மலைக்கு செல்வார்கள்.

    இதனால் பக்தர்களின் வசதிக்காக வருகிற 20-ந்தேதி முதல் 23-ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரி, மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், தருமபுரியில் இருந்து மேச்சேரி மேட்டூர் வழியாகவும், சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது, என்றார்.

    • உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    சேலம்:

    கர்நாடக மாநிலம் உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07325) வருகிற 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17, 24-ந்தேதி ஆகிய 5 நாட்கள் இரவு 8.25 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.

    மறுமார்க்கமாக தஞ்சாவூர்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.

    இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி போர்ட், திருச்சி சந்திப்பு, பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    • மாசி மாத வளர்பிறை கிருத்திகை முன்னிட்டு பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு மாசி மாத வளர்பிறை கிருத்திகை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்க ளில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராத

    னைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூரில்‌ மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி அடியார்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.
    • நடராஜ பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடும், இரவு 7 மணிக்கு ‌‌பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி அடியார்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சிவகாமித்தாயார் உடனுறை நடராஜ பெருமான் மற்றும் நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு ஆராதனை வழிபாடும், இரவு 7 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடல்கள் பாராயணம் நடைபெற்றது. 10 மணிக்கு 2-ம் கால வழிபாடும்,12 லிங்கோத்பவர் சிறப்பு வழிபாடும், அதிகாலை 2 மணிக்கு 3-ம் கால வழிபாடும் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு சிவகாமி தாயார் உடனுறை நவராஜ பெருமான் பள்ளியரை வழிபாடும், 6 மணிக்கு 4-ம் கால வழிபாடும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் தொடக்கப்பட்டுள்ளது.
    • சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சேலம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது:-

    பவுர்ணமி மற்றும் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மூலமாக சேலத்திலிருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும், சேலத்திலிருந்து காளிப்பட்டிக்கும், ராசிபுரத்தி லிருந்து காளிப்பட்டிக்கும், திருச்செங்கோட்டி லிருந்து காளிப்பட்டிக்கும், சங்ககிரியிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடி யிலிருந்து பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கபிலர்மலைக்கும், திருச்செங்கோட்டிலிருந்து கபிலர்மலைக்கும், வேலூரிலிருந்து கபிலர்மலைக்கும், சேலத்திலிருந்து வடலூ ருக்கும், சேலத்தி லிருந்து திருவண்ணாமலைக்கும் ஆகிய இடங்களில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படவுள்ளது. ஆகவே பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து பயணம் செய்திடும்படி கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை ஸ்ரீ மகாபகவதி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக 8-ம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. சிறப்பு அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து விநாயகர், பகவதிஅம்மன், மற்றும் முருகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், விநாயகர், முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×