என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் பலி"

    • எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
    • பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த பெரியபுலியூர் அருகேயுள்ள கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் பிரதீப் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.

    இவர் கடந்த 16-ம் தேதி, கல்லூரி விடுமுறை என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், தங்களுக்கு சொந்தமான தறிகுடோனின் மேற்கூரையில் மழையால் பழுதான சிமெண்ட் அட்டையை சரி செய்வதற்காக குடோன் மேலே ஏறியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிமெண்ட் அட்டை உடைந்து விழுந்ததில், பிரதீப் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் பிரதீப்பை மீட்டு நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரதீப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை வேலுசாமி அளித்த புகாரின் பேரில், கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலியானார்.
    • கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்துவாய் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.அவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் திவாகர் (வயது 19). இவர் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு மாலையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார்.

    அப்போது அதே கல்லூரியை சேர்ந்த பஸ் ஒன்று கல்லூரி வளாகத்திற்கு உள்ளே நுழைந்த போது மாணவர் திவாகர் எதிர்பாராத விதமாக பஸ் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் திவாகரன் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    • குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார்.
    • தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கி இறந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டனர்.

    களக்காடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிப்பட்டி மேச்சேரியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 22).

    இவர் களக்காடு அருகே வடுகச்சிமதிலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் படித்து வந்தார். நேற்று மாலை இவர் தனது நண்பர்களுடன் வடுகச்சிமதிலை அடுத்த ஆலங்குளத்தில் உள்ள ஒரு குளத்திற்கு குளிக்க சென்றார்.

    அப்போது குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது ரஞ்சித்குமார் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். உடனே அவரது நண்பர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் ரஞ்சித்குமாரை மீட்க முடியவில்லை.

    இதுபற்றி நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து சுமார் 20 அடி ஆழமுள்ள அந்த குளத்தில் மூழ்கி இறந்த ரஞ்சித் குமாரின் உடலை மீட்டனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    சென்னை, அயனாவரம், ஹவுசிங் போர்டு பெரியார் சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மனைவி துர்கா, மகன்கள் ஜீவா, நித்தீஷ் (வயது10) மற்றும் உறவினர்கள் 30 பேருடன் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அவர்கள் பெரியபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். சாமி தரிசனம் முடிந்தவுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    அப்போது விடுதி அறையின் அருகே சிறுவன் நித்தீஸ் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அங்கிருந்த இரும்பு கதவு சிறுவன் நித்தீஷ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பலியானான்.

    இது குறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த வழக்கில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி பலியான நித்தீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவன் சாவில் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    திருவள்ளூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

    • படகு சவாரி சென்ற போது திடீரென ஜெனிட்டோ படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார்.
    • போலீசார், மீனவர்கள், மீட்பு துறையினர் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாத்திமா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி. இவரது மகன் ஜெனிட்டோ (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ஊருக்கு வந்திருந்தார். நேற்று நண்பர்களுடன் புதிய துறைமுகம் அருகே உள்ள உப்பாற்று ஓடைக்கு குளிக்க சென்றார். பின்னர் நேற்று இரவு அவர்கள் படகு சவாரி சென்றனர்.

    உப்பாற்று ஓடையானது மிகவும் ஆழம் கொண்டது. மேலும் இது கடலில் சென்று சேருகிறது. படகு சவாரி சென்ற போது திடீரென ஜெனிட்டோ படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார், மீனவர்கள், மீட்பு துறையினர் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது ஜெனிட்டோ சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • கிருஷ்ணகிரி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் திருப்பதி (வயது 19). இவர் டிப்ளமோ கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

    திருப்பதி பொங்கல் பண்டிகையை கொண்டாட கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலமரத்துபட்டியில் உள்ள தனது மாமா சின்னசாமி என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரிஹரன் (10) என்ற பள்ளி மாணவனுடன் செம்மங்குளிகோட்டையில் உள்ள சின்னசாமியின் விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரிஹரன் இருவரும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீச்சல் பழக முயன்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர்.
    • மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் நீலமேகம் (வயது 64) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் நேற்று தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பொங்கல் விடுமுறை முடிந்து தனது மருமகளை சென்னையில் விடுவதற்காக பவானியில் இருந்து சென்னை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் சென்ற போது எதிரில் வந்த கார் மோதியது. இதில் நீலமேகம், இவரது மனைவி சுதாலட்சுமி (48), விக்னேஷ் (35), இவரது மனைவி உமாமகேஸ்வரி (33), விக்னேஷ் மகள் சஹானா (6), எதிரே வந்த காரில் இருந்த விஸ்வா, இவரது நண்பர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (20) சின்னகள்ளி ப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் கிருஷ்ணராஜ்(20), அரும்பட்டு சமத்துவபுரம் பழனி மகன் முபின்ராஜ் (21), குமாரசாமி மகன் ஆகாஷ் (20), விழுப்புரம் ஆஸ்பத்திரி சாலை ரவிசங்கர் மகன் பிரசாந்த் (22) மற்றும் சாலையோரம் மாடு மேய்த்துக் கொண்டி ருந்த ஏமப்பேர் காலனியைச் சேர்ந்த முனியன் மகன் கோவிந்தன் ஆகிய 12 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பிரசாந்த் என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். விபத்தில் பலியான பிரசாந்த் விழுப்புரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நீலமேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 40).

    இவர் கோவை உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்க துகள்கள் இருந்தால் அதனை பிரித்து எடுத்து விற்பனை செய்கிறார்.

    கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தங்க துகள்கள் சேகரிக்க செல்லவில்லை என தெரிகிறது.

    இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக பாலனின் மகன் விக்னேஷ் (13)நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார்.

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் இன்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியது. இதில் விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழுதிகை மேடு டோல்கேட் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென ரோந்து வாகனம் மோதியது.
    • இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பெரியபாளையம்:

    செங்குன்றம் அடுத்த நாராவாரிக்குப்பம், சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மாரநாத சுவிசேஷ்(வயது18). இவர் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் வீட்டில் இருந்து கல்லூரி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை பஸ் நிறுத்தம் அருகே செங்குன்றம்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவர் மாரநாத சுவிசேஷ் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மாணவர் மாரநாத சுவிசேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், போலீஸ்காரர் வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து வாகனத்தில் மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் பணியில் இருந்தனர். வழுதிகை மேடு டோல்கேட் அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென ரோந்து வாகனம் மோதியது. இதில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் ஷாகித்தியன். இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடையநல்லூரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒலக்கூர் போலீசார் விபத்தில் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சவுண்ட் சிஸ்டத்தில் விடுமுறை நாட்களில் உதவியாளராக செல்வது வழக்கம்
    • தந்தை ஹரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளையைச் சேர்ந்தவர் ஹரி கோபாலன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர் அருகில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவர் பிள்ளையார் விளையில் உள்ள ஒரு சவுண்ட் சிஸ்டத்தில் விடுமுறை நாட்களில் உதவியாளராக செல்வது வழக்கம். அது போல் நேற்று அவர் பிள்ளையார்விளையில் நடைபெற்ற திருமண விழா முடிந்து சவுண்ட் சிஸ்டத்தை அவிழ்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் வயிற்றில் கம்பி குத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரின் தந்தை ஹரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
    • போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் தினேஷ் (வயது 18). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று அவருடைய மோட்டார் சைக்கிளில் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த அவர்கள் குடும்பத்தினர் தினேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரில் அய்யனார் கோவில் அருகில் சாலை ஓரத்தில் மோட்டார் சைக்கிள் உடன் அடிபட்டு கீழே மயங்கி நிலையில் கிடந்தது கண்டு உடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து மணலூர்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×