search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230617"

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு நோட்டு விநியோகம் நிறுத்தப்பட்டது.
    • நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சேலம்:

    அரசு, அரசு உதவி ெபறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் சார்பில் 14 வகையான இலவச திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன்படி புதிய கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

    சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன.

    இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த 13-ம் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால், நோட்டு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் பாடங்களை நடத்திய பிறகும் அவற்றை குறிப்பெடுக்க நோட்டுகள் வழங்காததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி ஆணையரகம் முன்கூட்டியே மேற்கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு காகித நிறுவனத்தில் தயாராகும் நோட்டு புத்தகங்களை பள்ளிகளுக்கு வாங்குவதற்கும், உரிய வழிகாட்டுதல் அளிக்காததால், இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவர்கள் பாட அம்சங்களை குறிப்பெடுத்துக்கொள்ள நோட்டு புத்தகங்கள் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • 749 மையங்களில் 30 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு திட்டம் தொடக்கம் தொடங்கியது.
    • தியாகராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக 749 மையங்களில் 29 ஆயிரத்து 991 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கற்றுத்தரும் பணி தொடங்கியுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறி னார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார்.

    திட்டத்தைத் தொடங்கி வைத்து, கற்போருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசியதாவது:-

    விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ங்களை முன்னுரிமை பெறும் மாவட்டங்கள் என 2019-ம் ஆண்டு அறிவித்து ஒவ்வொரு துறையிலும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அரசு நிறை வேற்றி வருகிறது.

    இதன்படி சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் சார்பில் முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் 2019-2020 ஆண்டில் 615 மையங்களில் தலா 40 பேருக்கும், 2020-2021 ஆண்டில் 1124 மையங்களில் தலா 40 பேருக்கும் அடிப்படை எழுத்தறிவு 6 மாதங்கள் தன்னார்வலர்கள் மூலம் இரவு நேரங்களில் கற்றுத் தரப்பட்டு, இவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்ப ட்டது.

    தற்போது 3-வது இறுதி கட்ட எழுத்தறிவுத் திட்டம் ஜூன் மாதம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்களில் தொடங்க ப்பட்டுள்ளது. இதில் 29,991 பேருக்கு எழுத்தறிவு 6 மாதங்கள் கற்றுத்தரப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை உரு வாகும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர் கற்பகம், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம், நாமக்கல்லில் அரசு பள்ளிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
    • இப்பள்ளிகளில் 1,2,3-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் 8 வயது வரையிலான குழந்தைகள் எண்ணையும், எழுத்தையும் நன்கு கற்றறிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு சமீபத்தில் இந்த திட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு மாவட்ட வாரியாக பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும், நாமக்கல் மாவட்டத்தில் 915 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 1,2,3 -ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு இதற்கான புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து தனித்தனியே பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    • திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 3.23 லட்சம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மூலம் புத்தகம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்,

    வருகிற 13-ந் தேதி ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. புதிய கல்வியாண்டை வரவேற்கும் விதமாக பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து வகுப்புக்கும் அட்மிஷன் துவங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 3.23 லட்சம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தாலுகா, பள்ளி வாரியாக பிரிக்கும் பணி, ரெயில் நிலையம் அடுத்த தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது.

    1 முதல் 5-ம்வகுப்புகள் வரையிலான பாடப்புத்தகங்கள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரையிலான பாடப்புத்தகங்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் வழங்கப்பட்டது. ஆட்டோக்கள் மூலம் புத்தகங்களை பள்ளிக்கு அவர்கள் எடுத்துச்சென்றனர். இன்று மாலைக்குள் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும், புத்தகங்கள் சென்று சேர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ், ஆங்கிலம், முக்கிய பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தருவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மூலம் புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஒவ்வொரு பள்ளி வகுப்பறையில் ஏற்கனவே உள்ள மாணவர் எண்ணிக்கை புதிதாக பள்ளியில் சேரும் மாணவர் தோரய எண்ணிக்கை கணக்கிடப்பட்டு புத்தகங்கள் தலைமை ஆசிரியர் வசம் வழங்கப்பட்டுள்ளது.

    ×