search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • முகமது ஆரோன் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை கைகளால் தாக்கி விட்டு மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினர். இதில் தலை, காது உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த முகமது ஆரோன் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்பசாமி (25), செல்வகணேஷ் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 வாலிபர்களை பிடிப்பதற்காக தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்த மனீஸ்வரன்(20), மகாராஜன்(22) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் இவர்கள் பெயர் இருப்ப தாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மாரிமுத்துவை கைது செய்தனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெயமணி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாலமுருகனுடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை பார்ப்பவர் மாரிமுத்து (21). இவர் அடிக்கடி பாலமுருகன் வீட்டுக்கு வந்து குழந்தையை கொஞ்சுவது போல் நோட்டமிட்டு கொண்டு இருப்பாராம். இதனை ஜெயமணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து ஜெயமணியிடம் அத்துமீறி நடக்க முயன்றார். ஆனால் ஜெயமணி வீட்டின் வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார்.

    இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் ஜெயமணிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு மாரிமுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    கரூர்:

    குளித்தலை அருகே உள்ள கணேசபுரம், குமாரமங்கலம் மற்றும் சுங்ககேட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு சென்ற போலீசார் கணேசபுரம் பகுதியில் மது விற்ற மணிவேல் (வயது 48), குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அண்ணாவி (43), சிவகங்கை மாவட்ட பகுதியைச் சேர்ந்த பிரகாசம் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    • கள்ளசாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மரக்காணம் எக்கியார் குப்பத்தில் கள்ள சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழ்நாடு முழு வதும் உள்ள போலீசார் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கல்லாநத்தம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்து வந்த மணி மகன் ராமச்ச ந்திரன் (வயது 38) என்பவ ரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும், தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் கீதா (34), ராஜா இவரது மனைவி சத்யா( 30 )ஆகியோரிடம் இருந்து 40 லிட்டர் சாராயமும், பைத்தந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பால கிருஷ்ணன் வயது 34 என்பவரிடமிருந்து 110 லிட்டர் சாராயமும் நாககு ப்பம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் சின்னதுரை (வயது 34) என்பவரிடமிருந்து 10 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்து 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கறம்பக்குடியில் மது விற்ற 4 பேர் கைது செய்யபட்டார்
    • அவர்களிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த நிலையில் கறம்பக்குடி சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சீனி கடை முக்கம், அம்பு கோவில் முக்கம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த கறம்பக்குடியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 37), கண்டியன் தெருவை சேர்ந்த அண்ணாதுரை (51), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (39), குழந்திரான் பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் (52) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

    • அரியலூர் பகுதிகளில் கத்தி முனையில் நகை, பணம் பறித்த 3 பேர் அதிரடி கைது செய்யபட்டார்
    • போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 26). இவர் கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் வண்ணாங்குட்டை டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சதீஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேல் (குற்றப்பிரிவு) தலைமையிலான போலீசார், அன்று பிற்பகல் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் பதில் அளித்ததையடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் அரியலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த நித்தியானந்தம் (26), பூனைக்கன்னித் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (24) என்பது தெரியவந்தது.

    இதில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரிடம் பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பதும், கடந்த 7.4.2023 அன்று அரியலூர் பல்லேரி கரை அருகே நடந்துச் சென்ற செல்வியிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரிந்தது. இதே போல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி போன்ற பல்வேறு இடங்களில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர்.
    • கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னை:

    மடிப்பாக்கம் சீனிவாச நகர் சம்மந்தர் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் விபசாரம் நடப்பதாக சிந்தாதரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்தில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண்களை விபசாரத்தில் ஈடுபட வைத்த 4 பேரில் 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசில் சிக்கிய அர்ஜூன், பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அங்கிருந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண்ணையும் மீட்டனர். கைதான 2 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட பெண்ணை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    • மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்,
    • பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள, கே புதூர் பகுதியில் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்பொழுது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் 4 பேர் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்,

    போலீசாரின் விசாரணையில் அவர்கள் 4 பேரும் கே.புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல், மதியழகன், கோவிந்தசாமி மற்றும் குமார் என்பது தெரியவந்தது, அவர்களிடமிருந்து பணம் 520 ரூபாய், சீட்டு கட்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, பரத்வாஜ் தெரு சந்திப்பில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, எண்ணூர் தகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பிரிண்டிங் எந்திரங்களை கைப்பற்றினர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை எண்ணூரை சேர்ந்த கதிர் என்பவர் செய்து வருவதாகவும். அவரிடம் தான் வேலை செய்து வருவதாகவும் நிஜாமுதீன் தெரிவித்தார். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டியில் மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியில் டி.எஸ்.பி சபியு ல்லா உத்தரவி ன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொ)நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்ன எலந்தம்பட்டி ரோட்டு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 65), இவரது மகன் பாண்டியன் (31) ஆகியோர் மது, சாரா யம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 20 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று புதுப்பே ட்டை பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கலா(55) வீட்டுதோட்டத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்து வந்தார். இதை பார்த்த அப்பகுதியில் ரோந்து சென்ற பண்ருட்டி போலீசார் கலாவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    ×