search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சேலத்தில் இருந்து குப்புச்சாமி பணத்தை பையில் வைத்து கொண்டு வருவதை நோட்டமிட்டு அதே பஸ்சில் 3பேரும் ஏறியுள்ளனர்.
    • நேற்று மதியம் 4மணி அளவில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு இரவு 7மணிக்கு கொள்ளை கும்பலை பிடித்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி . இவர் சேலத்தில் நகைகளை அடகு வைத்து விட்டு ரூ.1.50 லட்சத்தை பையில் வைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டார். சேலத்தில் இருந்து திருப்பூர் செல்லும் பஸ்சில் ஏறினார். மண்ணரை வந்ததும் பஸ்சில் இருந்து இறங்கிய போது , ரூ.1.50 லட்சம் பணம் வைத்திருந்த கைப்பையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே இது குறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் ராஜ சேகரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் , போலீஸ்காரர்கள் சரவணன், பாஸ்கர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    தனிப்படை போலீசார் குப்புசாமியிடம் பணத்தை கொள்ளையடித்த நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குப்புச்சாமி வந்த பஸ், எந்தெந்த பஸ் நிறுத்தத்தில் நின்றது, அங்கு இறங்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். பஸ் நிறுத்தம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது மண்ணரைக்கு முன்பாக கருமாரம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் 2 பெண், ஒரு ஆண் ஆகியோர் இறங்கியதும் அவர்கள் பஸ் நிறுத்தத்தில் இருந்து தெரு வழியாக சென்றதுடன், பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதிக்கு வந்திறங்கியதும் தெரியவந்தது. அங்கிருந்து வீரபாண்டி கிருஷ்ணாநகருக்கு மற்றொரு ஆட்டோவில் ஏறி சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெங்களூரை சேர்ந்த வாணி, வைதேகி மற்றும் சாய் என்பதும், திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கியிருந்து பிச்சை எடுப்பது போல் நடித்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஓடும் பஸ்சில் பயணிகளிடம் கைவரிசை காட்டியுள்ளனர்.

    சேலத்தில் இருந்து குப்புச்சாமி பணத்தை பையில் வைத்து கொண்டு வருவதை நோட்டமிட்டு அதே பஸ்சில் 3பேரும் ஏறியுள்ளனர். அப்போது குப்புச்சாமி அருகே நின்று கொண்டு இடிப்பதாக கூறி குப்புச்சாமியிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்துள்ளனர். தற்போது போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர். 3பேரிடம் இருந்து ரூ.60 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நேற்று மதியம் 4மணி அளவில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு இரவு 7மணிக்கு கொள்ளை கும்பலை பிடித்துள்ளனர். 3 மணி நேரத்தில் பிடித்த தனிப்படை போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.

    • குடிபோதை ஆசாமியை பஸ்சை விட்டு இறங்கச் சொன்னபோது, அந்த ஆசாமி கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
    • பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கண்டக்டர் பேச்சிமுத்துவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்து கழக டிப்போவில் கண்டக்டராக பணிபுரிபவர் பேச்சிமுத்து(வயது 59). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் டவுன் பஸ்சில் கண்டக்டர் ஆக பணிபுரிந்தார். பஸ் பல்லடத்தை அடுத்த தெற்கு பாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, குடிபோதையில் பயணி ஒருவர் ஏறி உள்ளார். அவரிடம் பயணச்சீட்டு கேட்டபோது, கண்டக்டர் பேச்சிமுத்துவை அவர் திட்டி உள்ளார்.

    இதையடுத்து விசில் அடித்து பஸ்சை நிறுத்திய கண்டக்டர், குடிபோதை ஆசாமியை பஸ்சை விட்டு இறங்கச் சொன்னபோது, அந்த ஆசாமி கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கண்டக்டர் பேச்சிமுத்துவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார், கண்டக்டரை தாக்கிய பல்லடம் அருகே உள்ள சேட பாளையத்தை சேர்ந்த பெடரல் மார்க் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யபட்டார்
    • தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் பசுபதிபாளையம் அருணாசலம் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது25). இவர் கரூர் கொளந்தாகவுண்டனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியை காட்டி அருண்குமாரிடம் ரூ.200ஐ பறித்து சென்றனர். பின்னர் இதுகுறித்து அருண்குமார் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் கத்தியை காட்டி பணம் பறித்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், வேல்முருகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, சந்தோஷை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும் தப்பியோடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மது விற்றவர் கைது செய்யபட்டார்
    • அவரிடமிருந்து 9 மது பாட்டில்கள் மற்றும் ரூ.700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாமல் செயல்படும் மதுபான கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் டாஸ்மாக் கடை பூட்டி இருக்கும் நேரத்தில் உணவகங்கள், பெட்டிக்கடை மற்றும் அனுமதியில்லாமல் செயல்படும் பார்களில் மது பாட்டில்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விராலிமலை ஒன்றியம் மாத்தூர், ஆவூர், பேராம்பூர் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட மதுபானக்கூடங்கள் உடனடியாக இழுத்து மூடப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடை அருகேயும் உணவகங்கள் மற்றும் பெட்டிக்கடைகளில் மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது பேராம்பூர் குளத்துக்கரை அருகே மறைவான இடத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்த கந்தர்வகோட்டை தாலுகா, மட்டங்காடு கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மகன் அருண்பாண்டியன் (வயது 33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்கள் மற்றும் ரூ.700 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தும், ரஞ்சித்தும் சேர்ந்து புதிதாக இறைச்சி கடை தொடங்கி உள்ளார்கள்.
    • பரந்தாமன் ஆலந்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார்.

    சென்னை:

    ஆலந்தூர் லஸ்கர் தெருவை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 40). பா.ஜனதா பட்டியல் அணி மாநிலச் செயலாளராக இருக்கிறார். அந்த பகுதியில் பல வருடங்களாக இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தும், ரஞ்சித்தும் சேர்ந்து புதிதாக இறைச்சி கடை தொடங்கி உள்ளார்கள். அந்த கடையில் சரியாக வியாபாரம் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் நள்ளிரவில் பரந்தாமனின் வீடு புகுந்து அவரை தாக்க முயன்று உள்ளார்கள்.

    இதுபற்றி பரந்தாமன் ஆலந்தூர் போலீசில் புகார் செய்து உள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்கள் வீடு புகுந்த கேமரா ஆதாரங்களையும் கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.

    • தட்சிணாமூர்த்தி 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுக்கப்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பெரிய நெல்லிக்காய் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 63). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது பெண் குழந்தையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் போக்சோ சட்ட த்தில் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தி கைது செய்தனர்.

    • போலீசார் சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
    • போலீசார் கைது செய்து ரூ.7190-யை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீசார் பாகலூர் ஹவுசிங்போர்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைவான பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று சூதாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது34), தினஷே் (32), கோவிந்தசாமி (38), ஸ்ரீதர் (33), ரவி (38), முனியப்பா (32) ஆகிய 6 பேர் சூதாடியது தெரியவந்தது. 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.7190-யை பறிமுதல் செய்தனர்.

    • மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும்.
    • கைது செய்த 8 பேரை போலீசார் விடுவித்தனர்.

    சீர்காழி:

    மத்திய அரசின் நிதியை நேரடியாக கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கடந்த வாரம் புத்தூரில் சாலைமறியல் போரா ட்டத்தில் ஈடுப்பட்டபோது 9 ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் கைது செய்து,

    அன்று மாலை 8பேரை விடுவித்தனர்.

    இதனிடையே ஊராட்சி தலைவர் நேதாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் புளிய ந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி மீது போட ப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவரை விடுவிக்கக்கோரியும், போலீசாரை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு சாமுவே ல்ராஜ் கண்டன உரையாற்றினார்.

    ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருட்டுத்தனமாக பதுக்கி ைவக்கப்பட்டிருந்த 187 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 31 பேர் கைதாகினர்.
    • தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனை ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் பகுதியில் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற செல்லூர் மீனாட்சிபுரம் ஜீவா நகரை சேர்ந்த காமராஜை(57) கைது செய்தார். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற பணம் ரூ.4 ஆயிரத்து 169-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
    • ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மாரிகுண்டாம்பட்டி பகுதியில் உள்ள புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மாரிச்சாமி(48) என்பவது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு தடைசெய்யப்பட்ட ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அங்கு வைக்கப்பட்டிருந்த 457 புகையிலை பாக்கெட்டுகள், ரூ.46 ஆயிரத்து 870 ரொக்கம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த மாரிச்சாமி, புகையிலை பாக்கெட்டுகளை வாங்கி செல்வதற்காக வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராமசாமி(40), சாத்தூர் நடுவப்பட்டியை சேர்ந்த மனோகரன்(40) ஆகியோரை கைது செய்தனர்.

    • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் ஜோடி இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.
    • தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை ரெயில் பாதுாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாலிபர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடலை சூட்கேசில் வைத்து அங்குள்ள வனப்பகுதியில் வீசி சென்றனர். இந்த கொலை தொடர்பாக திரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காதல் ஜோடி இந்த கொலையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    கதிஜாதுல் பர்கனா (18) என்ற இளம் பெண்ணுடன் காதலன் முகமது சிபில் (22) என்பவர் சேர்ந்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதாக போலீசார் அவர்கள் இருவரையும் தேடிவந்தனர். தேடப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை ரெயில் பாதுாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எழும்பூர் ரெயில்வே போலீசார் டாடாநகர் செல்ல இருந்த ரெயிலில் கண்காணித்த போது இருவரும் பிடிபட்டனர். எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இருவரையும் கைது செய்து கேரள போலீசாரிடம் இன்று ஒப்படைத்தனர்.

    • பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    • 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் ைகது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அன்பில்நகரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த தகர செட்டில் பாதுகாப்பின்றி சாக்குமூடைகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 15 கிலோ இரண்டு சாக்கு மூடைகள், ஒரு 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பதுக்கிவைத்திருந்த ராஜிவ்காந்தியை(38) ைகது செய்தனர்.

    சிவகங்கை நகர் பஸ் நிலையத்தில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர் போலீசார் பஸ்நிலையப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி விற்ற சகாய குளோரி, சிவசக்கரவர்த்தி, நாகவேல், துரைப்பாண்டியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கேரள லாட்டரிகள், ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ×