search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • ஆட்டோ டிரைவரிடம் பணத்தை பறித்த ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

    திருச்சி:

    திருச்சி காஜாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 27) ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்து பாலக்கரை பகுதியை சேர்ந்த பிரபு (23), பாலக்கரை சந்தியாப்பர் பாளையத்தை சேர்ந்த ராபர்ட் வின்சிலி ஆகிய 2 ரவுடிகள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இது குறித்து மாரிமுத்து பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு, ராபர்ட் வின்சிலி ஆசிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது.




    • ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த டிரைவர் கைது செய்யபட்டார்
    • இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் ரங்கசாமி (வயது29). டிராக்டர் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் காமராசவல்லி கிராமத்தை சேர்ந்த சேகர் மகள் தமிழ்ச்செல்வி (21) என்பவரை ரங்கசாமி குடும்பத்தினர் நேரில் சென்று திருமணத்திற்கு பெண் கேட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வியிடம் தனக்கு திருமணம் நடந்ததை கூறாமல் மறைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழ்செல்வியை அழைத்துச் சென்று அவசர அவசரமாக கடந்த 22-ம் தேதி திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில் ரங்கசாமிக்கு திருமணமானது தமிழ்ச்செல்விக்கு தெரியவந்தது. இதைப்பற்றி தமிழ்ச்செல்வி ரங்கசாமியிடம் கேட்டபோது தகாத வார்த்தைகள் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தமிழ்ச்செல்வி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார். மேலும் ரங்கசாமியின் முதல் மனைவிக்கும், ரங்கசாமிக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிடம் வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்,

    இரும்புலிக்குறிச்சியைச் சேர்ந்தவர் ராசாங்கம் மகன் பசுபதி(எ) தமிழரசன். விவசாயியான இவர், அப்பகுதி முருகன் கோயில் முன்பு நின்று கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த 2 பேர், தமிழரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில், இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயகுமார் (36), மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் செல்வம்(34) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி.
    • சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.

    ஐதராபாத்:

    டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாரதா என்ற பெண்ணின் கொலை, நாட்டையே உலுக்கியது.

    அவருடன் சேர்ந்து வாழ்ந்த சமையற்கலை நிபுணர் அப்தாப் பூனவல்லா என்பவர், சாரதாவை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் ஆங்காங்கே வீசினார்.

    இந்த கொலையை நினைவுபடுத்தும்வகையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அங்குள்ள முசி ஆற்றங்கரையில் நடைபாதையில் ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு பெண்ணின் தலை கைப்பற்றப்பட்டது.

    அவர் யார்? அவரை கொலை செய்தது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்தும், காணாமல் போனவர்கள் பட்டியலை ஒப்பிட்டும் கொலையாளியை நெருங்கினர்.

    அவர் பெயர் சந்திரமோகன் (வயது 48). பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார். ஐதராபாத்தில் சைதன்யபுரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எர்ரம் அனுராதா ரெட்டி (55). வட்டிக்கு கடன் கொடுத்து வந்தார். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாகவும் பணியாற்றி வந்தார். சைதன்யபுரியில், சந்திரமோகனுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது திடுக்கிட்டனர். அனுராதா ரெட்டியின் தலையற்ற உடல், பாலிதீன் கவரில் சுற்றப்பட்டு, ஒரு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. அப்புறப்படுத்த தயார்நிலையில் இருப்பது தெரிய வந்தது.

    அனுராதா ரெட்டியின் துண்டிக்கப்பட்ட 2 கால்கள், 2 கைகள் ஆகியவை பிரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்தன. வாசனை திரவிய பாட்டில்கள், பினாயில், டெட்டால், கல் உடைக்கும் கருவி ஆகியவையும் பிரிட்ஜில் இருந்தன.

    கைதான சந்திரமோகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை நடந்தது எப்படி என்பது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ருபேஷ் கூறியதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து அனுராதா ரெட்டியிடம் சிறிது சிறிதாக ரூ.7 லட்சம்வரை சந்திரமோகன் கடன் வாங்கி இருந்தார். அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    அந்த பணத்தை திருப்பித்தருமாறு அனுராதா ரெட்டி வற்புறுத்தி வந்தார். சந்திரமோகனால் கொடுக்க முடியவில்லை. எனவே, அனுராதா ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    உடலை அப்புறப்படுத்துவது எப்படி என்று 'கூகுள்' பார்த்து தெரிந்து கொண்டார். உடலை துண்டு போட என்னென்ன கருவிகள் தேவைப்படும் என்றும் ஆய்வு செய்தார்.

    கடந்த 15-ந் தேதி அனுராதா ரெட்டி வீட்டுக்கு சென்ற சந்திரமோகன், அவரது நெஞ்சிலும், வயிற்றிலும் குத்தி கொலை செய்தார். பின்னர், அனுராதாவின் தலையை துண்டித்தார். உடலை 6 துண்டுகளாக வெட்டினார்.

    டெல்லி சாரதா கொலையில், உடல் பாகங்கள் இரவு நேரங்களில் நகரம் முழுவதும் வீசப்பட்டதுபோல், நாள்தோறும் ஒரு பாகத்தை வீசி எறிய சந்திரமோகன் திட்டமிட்டார்.

    முதலில், கடந்த 17-ந்தேதி, தலையை மட்டும் முசி ஆற்றங்கரையில் வீசிவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    மற்ற உடல் பாகங்களை பிரிட்ஜ்க்குள் வைத்திருந்தார். அதிலிருந்து துர்நாற்றம் வரக்கூடாது என்பதற்காக, தினந்தோறும் வாசனை திரவியங்களை அடித்து வந்தார்.

    இன்னும் ஒருபடி மேலே சென்று, அனுராதா ரெட்டியின் செல்போனை எடுத்து, அப்பெண்ணே அவருடைய நண்பர்களுக்கு செய்தி அனுப்புவதுபோல், நாள்தோறும் செய்தி அனுப்பி வந்தார். இதன்மூலம், அனுராதா உயிருடன் இருப்பதுபோல் நம்ப வைத்தார்.

    சந்திரமோகன் கொலை செய்தது, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கோ, அவருடன் வசிக்கும் அவருடைய தாயாருக்கோ கூட தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மரக்காணத்தில் சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • புஷ்பா வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம மரக்காணத்தில்கரி பாளையம் பகுதியில் வசிப்பவர் லோகநாதன். இவருடைய மனைவி புஷ்பா ( வயது 52). இவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் கள்ளச்சாராய விற்பது மரக்காணம் போலீசாருக்கு தெரிய வந்தது. அந்தத் தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் கரி பாளையம் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் புஷ்பா தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து அவர் வைத்திருந்த 10 சாராய பாக்கெட் டுகளை பறிமுதல் செய்தனர். அவரை சாராய வழக்கில் கைது செய்து திண்டிவனம் சிறையில் அடைத்தனர்.

    • ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார்.
    • மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு 17 வயது ஆகிறது.

    இந்நிலையில் ராஜேஸ்வரிக்கும் வயநாட்டை சேர்ந்த சுனீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் சுனீஸ், அடிக்கடி ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்து சென்றார்.

    இதுபற்றி அக்கம்பக்கத்தினர், ராஜேஸ்வரியின் மூத்த மகனிடம் கூறினர். அவர் தாயாரிடம் இதுபற்றி கேட்டார். இதில் தாய்க்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சம்பவதன்றும் சுனீஸ் ராஜேஸ்வரி வீட்டிற்கு வந்தார். அவரை ராஜேஸ்வரியின் மூத்த மகன் திட்டி வெளியே செல்லுமாறு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜேஸ்வரி, மகன் என்றும் பாராமல் அவரை இரும்பு கம்பியால் தாக்கினார். அவருடன் சேர்ந்து சுனீசும், தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து சிறுவன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தாக்கியதாக அவரது தாயார் ராஜேஸ்வரி, கள்ளக்காதலன் சுனீஸ் உள்பட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • துறையூரில் திருட்டு வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்
    • அந்தோணிராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 32). இவர் கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த கோபிநாத் மீண்டும் கோவை செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது பேருந்து இல்லாததால் பயணிகள் காத்திருப்போர் பகுதியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் கோபிநாத் அசந்து இருந்த நேரத்தில் இவரது பையில் இருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.இது தொடர்பாக கோபிநாத் அளித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் செல்போன்களை திருடியவர் துறையூர் அருகே உள்ள சிங்களாந்தபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெகன் (27) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜெகனை கைது செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.இதேபோன்று துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (51). இவர் சம்பவத்தன்று தனது நண்பருடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரின் பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு ஓடியுள்ளார். இதையடுத்து நண்பரின் உதவியுடன் பர்ஸ் திருடிய நபரை மடக்கி பிடித்து துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பர்ஸ் திருடிய நபர் மயிலாடுதுறையை சேர்ந்த அந்தோணிராஜ் (34) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்தோணிராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆசிரியையிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது செய்யபட்டார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் நஞ்சைபுகளூரைச் சேர்ந்தவர் நிர்மலா (வயது 40). இவர் காட்டம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியை நிர்மலா கரூர் பேருந்து நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பெண் ஆசிரியை பர்சில் இருந்த ஆயிரம் ரூபாயை எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்து ஆசிரியை சத்தம் போடவும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து திருட முயன்ற பெண்னை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்ட அந்த பெண் சேலத்தை சேர்ந்த கவிதா(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவிதாவை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கோம்பை அணைமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் சதீஸ்குமார் (28). கூலித்தொழிலாளி. இவர்மீது தேனி, கோம்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    மேலும் அடிக்கடி இரட்டை மாட்டுவண்டி பந்தயமும் நடத்தி வந்துள்ளார். இதனால் சதீஸ்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அவர் அரண்மனைத்தெரு குளம் அருகே மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சதீஸ்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் மாட்டு வண்டியில் இருந்த அச்சாணிக்கட்டை, உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் இரும்புக்கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு கடுமையாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் 9 பேர் கொண்ட கும்பல் சதீஸ்குமாரை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து கக்கன்ஜி காலனியை சேர்ந்த மணிகண்டன், திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரவீண், தீபக், கிராம சாவடி தெருவை சேர்ந்த புகழேந்தி ஆகிய 4 பேரை கைது செய்து சூர்யா உள்பட மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

    • மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவரிடமிருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை:

    விராலிமலை ஒன்றியம், மாத்தூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளவர் மூர்த்தி (வயது 37). இவரது பெட்டிக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் நேற்று அப்பகுதியில் கண்காணித்தனர். அப்போது மூர்த்தி அவரது பெட்டிக்கடையில் வைத்து மது பாட்டிலை விற்பனை செய்து தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கந்தர்வகோட்டை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலாடிபட்டியில் மதுவிற்ற உரியம்பட்டியை சேர்ந்த தங்கையன் மகன்கள் வரதராஜ் (வயது 27), முனியராஜ் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 44 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    • அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
    • இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு நிசர்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(வயது 42). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இளம்பெண்கள் 2 பேர் கணக்காளர் மற்றும் மேலாளராக பணி செய்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் ஓட்டலின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தங்கி வேலை செய்கின்றனர். இந்த நிலையில் இளம்பெண்கள் 2 பேரும் ஓட்டலில் உள்ள குளியல் அறையில் தனித்தனியே குளித்தனர்.

    அப்போது குளியல் அறையின் ஜன்னல் வழியாக செல்போனில் மர்மநபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், உடனடியாக வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது தான் ஓட்டல் உரிமையாளர் ரகுராம் செல்போனில் வீடியோ எடுத்தது தெரிந்தது. அதை அழிக்குமாறு அந்த பெண் ரகுராமிடம் கூறினார். அப்போது அவர் வீடியோவை அழிக்க வேண்டும் என்றால், தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கூறி உள்ளார்.

    இதையடுத்து அவர் ஓட்டலில் வேலை செய்த 2 பெண்களையும் மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண்கள் 2 பேரும் இதுதொடர்பாக எச்.ஏ.எல். போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரகுராமை கைது செய்தனர்.

    • கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள்.

    கோவை:

    கொண்டாட்டம்....குத்தாட்டம்....குதூகலம் என்பது இருக்கட்டும்... ஆனால் அதில் எல்லை மீறும்போது தொல்லை தானே. என்னதான் நண்பர்கள், சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தினாலும், கவனமாக இருக்க வேண்டும் அல்லவா...? உற்சாக மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் பிரச்சினை தானே. அது பற்றி பார்க்கலாம்:-

    கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள். இதனை மாணவி தடுத்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டாள்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ×