search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • ராமநாதபுரம் ஊராட்சி, அண்ணா நகர் பகுதி வார்டு எண்.3-ல் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் போஸ், திருச்சி மாவட்ட செயலாளர் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குயிலி பேரவை திண்டுக்கல் செயலாளர் நில செங்கொடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி மன்றம் அண்ணா நகர் பகுதி வார்டு எண்.3-ல் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அப்போது கோரிக்கை களை வலியுறுத்தி அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.
    • மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    திருவாரூர்:

    செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான நிலையில், தமிழகம் முழுவதும் சட்டவிரோத சாராய விற்பனை குறித்து போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள், வெளி மாநில சாராயம், வெளி மாநில மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் திருவாரூர் மாவட்டம் வடுவூர் வீரமணி (35), சிவக்குமார் (38) ஆகிய இருவரும் வயலில் ஊறல் வைத்து சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது.

    உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் சாராயம் காய்ச்சிய ஊறல்களை அழித்தனர்.

    தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் வலங்கைமான் வரதராஜன், பெரும்படுகை சிங்காரவேல், வடபாதிமங்கலம் முருகானந்தம், நன்னிலம் ஜெயபரணி, சேது பாண்டியன் உட்பட மாவட்ட முழுவதும் 44 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து மாவட்ட முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் மற்றும் வெளிமாநில மது பாட்டில்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    • பண்ருட்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • போலீசார் நேற்று இரவு முழுவதும் காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளசாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து பண்ருட்டி பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் பணருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் பகுதிகளில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில் திருவாமூர் அய்யனார் கோவில் தெரு சரவணன் (வயது 40) எனதிரிமங்கலம் மாரியம்மன் கோவில் தெரு லிங்கநாதன் (49), காமாட்சி பேட்டை டேங்க் தெரு, கலியன் (70), வேலன்குப்பம் வடக்குதெரு விக்ரமன் (25), புதுப்பாளையம் கோவில் தெரு சதாசிவம் (55), கானஞ்சாவடி தெற்கு தெரு ஏழுமலை (36) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இவர்களை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

     அவினாசி :

    அவினாசி அருகே கஞ்சா வைத்திருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி மங்கலம் ரோடு கருணை பாளையம் பிரிவு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சயிராப் குமார் (25 ) என்பதும் அவர் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைதானார்.
    • பழிவாங்கும் நோக்கத்தில் கொலை செய்தது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம், ராம மூர்த்தி நகரை சேர்ந்தவர் விஜயராஜன். இவரது மகன் ஆனந்தக்குமார் (வயது18). இவர் பால் கறந்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று பள்ளம் மீனாட்சி தியேட்டர் கிருதுமால் நதி பாலம் வழியாக பைக்கில் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மக்கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்து ஆனந்தகுமார் உயிருக்கு போராடினார். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. மர்ம நபர்கள் வெட்டி யதில் ஆனந்தகுமார் சிறிது நேரத்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்த குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் இந்த கொலை யில் தொடர்புடைய கொலையாளிகளை தேடி வந்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா வில் மற்றொரு கும்பலுடன், ஆனந்த குமாருக்கு தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததும், அவரை பழி வாங்கும் நோக்கத்தில் கொலை செய்ததும் தெரிய வந்தது.

    இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் கீரைத்துறை மேலத்தோப்பு 3-வது தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் பேபி சரவணன் மற்றும் லட்சுமணன், பிரவீன், ராஜ்குமார், முத்துராம லிங்கம், பீடி ரமேஷ் உள்பட 6-க்கும் மேற்பட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதில் வாலிபர் பேபி சரவணனை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    விருதுநகர்

    திருத்தங்கல் கே.கே.நகரை சேர்ந்தவர் சிவபெருமான் (வயது43). இவர் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரிகள், மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இவரிடம் இருந்து 150 பட்டாசு திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    நாகர்கோவில் :

    திருவட்டார் தாலுகா திற்பரப்பு நக்கீரண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 36). இவர் மீது குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நேற்று இரவு கண்ணமங்கலம் போலீசார் சாராய சோதனைக்கு சென்றனர். போலீஸ்காரர் அன்பழகன் (வயது 32). படவேடு சாலையில் சோதனை நடத்தினார்.

    அதன் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் 4 பேர் குடிபோதையில் கலாட்டா செய்து கொண்டிருந்தனர். இதனை அன்பழகன் தட்டி கேட்டார்.

    கலாட்டா செய்யாமல் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். அப்போது அன்பழகனுக்கும் போதையில் இருந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் 4 பேர் சேர்ந்து போலீஸ்காரர் அன்பழகனை தாக்கினர்.

    இது குறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    போலீஸ்காரரை தாக்கிய 4 பேரையும் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் அவர்கள் குப்பம் கிராமம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் அய்யப்பன் (25), பழனி (36), முருகன் (25) மற்றும் உறவினர் சரணவன் என தெரியவந்தது.

    போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    போலீஸ்காரரை ராணுவவீரர்கள் மது போதையில் தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்
    • உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 62) என்பவர் அப்பகுதியில் மதுவிற்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • ஜெயங்கொண்டத்தில் மது விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டத்தில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் ரமேஷ் (வயது 39), சீனிவாசா நகர் சீனிவாசன் மகன் கோபி (38) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட, கரடிவாவியைச் சேர்ந்த ரவி (30),கார்த்தி (36),ஸ்ரீதர் (24), அம்மாசை (24), வடிவேல் (34) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ. 5,340 பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • 150 கிராம் எடை உள்ள கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் பெருமாநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்டேல் குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் எடை உள்ள 10 பாக்கெட் கஞ்சா சாக்லெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×