search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொ ண்டனர்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதிகளில் கஞ்சா விற்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீ. கூட்டு ரோட்டில் இருந்து சின்னசேலம் செல்லும் சர்வீஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பு ரோஸ் (வயது 25), வேல்முருகன் மகன் நவீன் ராஜ் (18) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர்.
    • கலவரம் விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தங்கள் பலத்தை பயன்படுத்தி கும்பலை கலைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த, வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • திருமணத்துக்காக நண்பர்கள் தங்க வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்
    • இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒருவருக்கு குமாரபுரம் நாலு வழிச்சாலையில் மாடி வீடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் திருமணத்துக்காக நண்பர்கள் தங்க வேண்டும் என்று வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். வீட்டின் உரிமையாளர் அந்தப் பக்கம் சென்ற போது ஆண்களும் பெண்களும் நடமாடியதை கண்டு சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தார். அப்போது பெண் ஒருவர் அரைகுறை ஆடையோடு சில ஆண்களோடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.

    இதையடுத்து இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஆல்வின் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த வாலிபர்களை தேடிய போது வழக்கில் சம்பந்தப்பட்ட வள்ளியூர் ஹரி ராமராஜா (வயது 30), சுசீந்திரம் மகேஷ் (43) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட னர்.

    • புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    கே.புதுப்பட்டி பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சிறப்பு காவல் படை குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஏம்பல் பகுதியில் உள்ள மதகம் கிராமத்தை சேர்ந்த குமார் (வயது 44), இரும்பநாட்டை சேர்ந்த ஐயாசாமி (77), கொங்கன் தெருவை சேர்ந்த பாண்டியன் (47) ஆகியோர் தங்களது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மேற்பனைக்காடு பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம் (44), மாங்காடு பூச்சிக்கடை பகுதியை சேர்ந்த தர்மராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • அகரம்சீகூர் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற அண்ணன்-தம்பி அதிரடி கைது செய்யப்பட்டனர்
    • அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகேயுள்ள லெப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அப்துல்சமது மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோரது வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தத்தை கேட்டது. இதனையடுத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.அப்போது அந்த வீட்டின் உள்ளே 2 பேர் பீரோவை உடைத்து பொருட்களை திருடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணனின் மகன்கள் முருகன் (வயது 35), சிவா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து சகோதரர்களான 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பலத்த காயங்களுடன் இருந்ததால் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ்குமார் திண்டுக்கல் பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றித்திரிவதாக செக்கானூரணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றிதிரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    திருமங்கலம்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் தார்ப்பாய் முருகன் கோஷ்டியை சேர்ந்த கும்பலுக்கும் இடையே கடந்த 1998-ல் மோதல் ஏற்பட்டது. இதில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரமேஷ் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ்குமார் என்பவரை போலீசார் தேடிவந்தனர். இவர் போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

    கடந்த 22 ஆண்டுகளாக அவரை போலீசார் தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இந்தநிலையில் ரமேஷ்குமார் திண்டுக்கல் பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றித்திரிவதாக செக்கானூரணி போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவசக்தி தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பிச்சைக்காரர் வேடத்தில் சுற்றிதிரிந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    அவரை செக்கானூரணி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ரமேஷ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசில் சிக்கிவிடாமல் இருக்க பிச்சைக்காரர் வேடத்தில் ரமேஷ்குமார் சுற்றி திரிந்துள்ளார்.

    விசாரணைக்கு பின் அவரை மதுரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வாலிபர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியை 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்த செக்கானூரணி போலீசாரை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் பாராட்டினார்.

    • ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் தண்டலை பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக ஜெயங்கொண்டம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தரசு புதுத்தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் மதிவாணன் (வயது27) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மதிவாணனை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மதிவாணனை சிறையில் அடைத்தனர்.

    • விவசாய தோட்டங்களுக்குள் கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
    • விவசாய கூலி தொழிலாளிகள் இருவர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அம்பாசமுத்திரம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு சொந்தமான தோட்டத்தை அதே ஊரை சேர்ந்த தர்மர் என்பவர் குத்தகைக்கு எடுத்து கரும்பு பயிரிட்டுள்ளார்.

    அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கரடி, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க தர்மர் தனது தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக தெரிகிறது.

    தர்மரின் தோட்டத்துக்கு அம்பாசமுத்திரம் புதூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளிகளான மணி(வயது70), ஆசை பாண்டி(35) ஆகிய இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்றுள்ளனர். அதன் பிறகு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வர வில்லை.

    இதனால் அவர்கள் இருவரையும் தேடி அவர்களது உறவினர்கள் தர்மரின் தோட்டத்துக்கு நேற்று சென்றனர். அப்போது அங்கு மணி, ஆசைபாண்டி ஆகிய இருவரும் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்தனர். இருவரது உடலும் அழுகிய நிலையில் இருந்ததால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.

    வேலைக்கு சென்றவர்கள் மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்ததை பார்த்த இருவரது குடும்பத்தினரும் கதறி அழுதனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாய கூலி தொழிலாளிகள் இருவர் மின்வேலியில் சிக்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதில் தர்மர் தனது கரும்பு தோட்டத்தில் அனுமதியின்றி மின்வேலி அமைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தர்மரை போலீசார் கைது செய்தனர்.

    • அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த சுமார் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் ஆரணி, சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சந்தோஷ்சிவம்(வயது20), நரேஷ்(வயது19) என்பது தெரியவந்தது.

    மேலும், ஆரணி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வாலிபர் விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த சுமார் 300 கிராம் எடை கொண்ட கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சின்னக்கிளாம்பாக்கம் கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்(வயது21) என்பது தெரிய வந்தது. மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் மூன்று வாலிபர்களையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    • பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
    • 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை பரவை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் குடும்பத்தினருடன் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பயணித்து வந்த அரசு பஸ் மண்டேலா நகர் பகுதியில் வந்தபோது, அந்த நபரின் மனைவி அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போயி ருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர், உடனே பஸ்சில் இருந்து இறங்கி அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் செல்வக்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விமலா நகை திருடியது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்.

    பஸ்சில் பயணித்து வந்தவர்களில் யாரோ தான் நகையை திருடிவிட்டு சென்றிருக்கவேண்டும் என்று கருதிய போலீசார், பஸ் நிறுத்தப்பட்ட நிறுத்தங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள், மண்டேலா நகர் பஸ் நிறுத்தத்தில் அவச ரமாக இறங்கிச்செல்வது அதில் பதிவாகியிருந்தது.

    அந்த நபர்கள் தான், பெண்ணிடம் நகைகளை திருடியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் நகையை பறி கொடுத்தவரும், அந்த 2 நபர்களும் பஸ்சில் தங்களின் அருகில் நின்றி ருந்ததாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி யதில் அவர்கள் அப்பன் திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம் பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது48), அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த பாண்டித்துரை(42) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெண்ணிடம் ஓடும் பஸ்சில் நகை திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ்(21) அமல்ராஜ் (22) இருவரும் பனியன் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர் அருகருகே வசிக்கும் இவர்கள் நண்பர்களாகவும் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் பிரகாசிற்கு வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக இருவரும் சென்று புதிய மோட்டார் சைக்கிளை வாங்கி வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை தனது உபயோகத்திற்காக அமல்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தனக்கு வேலை இருப்பதா கவும் வெளியில் செல்ல வேண்டி இருப்பதா கவும் கூறி பிரகாஷ் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷின் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகே இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இதற்குள் பிரகாஷின் மோட்டார் சைக்கிள் பாதி எரிந்து சாம்பல் ஆனது . இது குறித்து பிரகாஷ் கொடுத்த புகார் என் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கண்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிள் கேட்டு கொடுக்காத காரணத்தால் அமல்ராஜ் மோட்டார் சைக்கிள் தீ வைத்தது தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அமல்ராஜ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோழிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மர்மநபர்கள் 2 பேர் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்

    கரூர்:

    கரூர் புகழூர் காகித ஆலை- புன்னம் சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கொங்கு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கார்த்தியின் தந்தை சுப்பிரமணி தோட்டத்தில் கட்டில் போட்டு உறங்கி கொண்டிருந்தார். கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த கோழிகளை மர்மநபர்கள் 2 பேர் திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோழிகளை திருடியது வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காந்தி நகர் 5-வது தெருவை சேர்ந்த சூர்யா (19), திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (18) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிமிருந்த கோழிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×