search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொப்பூர்:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடத்தூரான் கொட்டாய் அருகே நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இன்று அதிகாலையில் பொதுமக்கள் நடந்து சென்றனர்.

    அப்போது அங்கு ஒரு பெண் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் முகத்தில் கைபையை வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனே அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் முகத்தில் வைக்கப்பட்டிருந்த கைபையை எடுத்து சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த பெண் தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதி கோல்டன் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்பவரின் மகள் ஹர்ஷா (வயது23) என்பதும், இவர் ஓசூரில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் என்பதும், அவரை மர்ம நபர் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உடலை இந்த வனப்பகுதியில் வீசி சென்றுள்ளனர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

    இதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும், அவரை யாராவது கற்பழித்து விட்டு கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசி சென்றனரா? அல்லது காதல் விவகாரத்தில் ஹர்ஷாவை யாராவது கொலை செய்து உடலை வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.
    • காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே அச்சிபாலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசா (வயது24). இவர் தளியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் கணேசன் (25). உறவினர்களான இருவருக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணேசன், அவரது நண்பர்கள் கீச்சானகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமு (28), வேணு (18), விஜய் (23) ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனிவாசா வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது கணேசன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனிவாசாவை வெட்டி மிரட்டினார்.

    இதில் காயம் அடைந்த சீனிவாசா ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து சீனிவாசா தளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன், ராமு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார்
    • போலீசார்,அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் அரசு பானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சிலால் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடங்களில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுனாமி தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் அழகுவேல் (44) என்பவர் வீட்டில் சோதனை இட்டபோது அவரது வீட்டில் 19 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    • போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 110 ஆண்கள், 39 பெண்கள் உட்பட, 149 பேரை கைது செய்தனர்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி ஊராட்சிக்கு உட்பட்ட மரிக்கம்பள்ளி கிராமத்தில், 30 பேருக்கு பிரித்து வழங்குவதற்காக, 1.25 ஏக்கர் நிலம் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் கடந்த, 1984-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இது பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.

    இதையடுத்து நிலத்தின் உரிமையாளர்கள், தங்களுக்கு அந்த நிலத்தை திரும்ப தரும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் ஆதிதிராவிடத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட நிலங்களை பயனாளிகளுக்கு பிரித்து தருமாறு கோரி மரிக்கம்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் மாதேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் ஆகியோர் தலைமையில், ஏராளமானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு, 38 ஆண்டுகள் ஆன நிலையிலும், தங்கள் நிலங்களை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவில்லை எனக் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    தனி தாசில்தார், மற்றும் வருவாய் துறை அலுவலர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். அவர்களை கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது போலீசாரை மீறி சம்பந்தப்பட்ட நிலத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செல்ல முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 110 ஆண்கள், 39 பெண்கள் உட்பட, 149 போரை கைது செய்தனர்.

    • கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட தாலுகா போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அப்போது விசாரணை செய்ததில் பவானி அருகே உள்ள சொக்காரம்மன் நகரை சேர்ந்த வின்சன் (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடத்தி சென்ற குட்கா பொருள் மற்றும் காரின் மதிப்பு ரூ.3,68,104 ஆகும். 

    • அவர் பின்னால் 17 வயது மகன், பருக் ஆகிய 2 பேர் துரத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது 32). கூலி தொழிலாளி. அதேபோல் காட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தர் அப்துல் மாலிக். இவருடைய மகன்கள் 17 வயது மகன், பருக் (20). இரு குடும்பத்தி னரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

    சம்பவத்தன்று செல்வம் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் 17 வயது மகன், பருக் ஆகிய 2 பேர் துரத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இந்நிலையில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பருக், சாத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சாத்து கொடுத்த புகாரின் பேரில் செல்வம் (32), மாது (50), நிர்மல் ஸ்ரீ (21) ஆகியோரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    குனியமுத்தூர்,

    கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (வயது42). இவர் கரும்புகடை பாரதி நகரில் பழைய மின்சாதன பொருட்கள் குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கரும்பு கடையை சேர்ந்த அப்பாஸ் (23) என்பவர் வேலை பார்த்தார்.

    இதையடுத்து அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் வழக்கம்போல காலையில் குடோனை திறப்பதற்கு அமீர்அப்பாஸ் சென்றார். பின்னர் குடோனை திறந்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் குடோன் திறந்து இருப்பதை கண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் உள்ளே இருந்த 5 கிலோ செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்று விட்டு வந்த அமீர்அப்பாஸ், அந்த வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 வாலிபர்களையும் மடக்கி பிடித்து கரும்புகடை போலீசில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இவரது குடோனில் வேலை பார்த்த அப்பாஸ் (23) என்பவர், அவரது நண்பர்களான அனீஸ் ரகுமான் (22), மன்சூர் ரகுமான் (24), தவூபிக் (17) ஆகியோர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று குடோனில் இருந்த பொருட்களை திருட முயன்றதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதில் அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    • வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள பகுதிகளில் ஒருவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வத்திராயிருப்பு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முக நாதன் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சரவணன் என்பவரது வீட்டில் நாட்டுக்குழல் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்தது. போலீசாரின் விசாரணையில் சரவணன், கூமாபட்டியை சேர்ந்த தனது நண்பர் வனராஜூடன் சேர்ந்து பூப்பாறையை சேர்ந்த விஜேசிடம் துப்பாக்கியை வாங்கியதும், தோட்டாக்களை திண்டுக்கல்லை சேர்ந்த நிகில் என்பவரிடம் வாங்கியதும் தெரியவந்தது. நாட்டு துப்பாக்கியை தோட்டாக்களுடன் பறிமுதல் செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்

    சிவகங்கை

    திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாஷ் மற்றும் போலீசார் சைனாபுரம், டி.புதூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெட்டி கடையில் விற்பனை செய்த சைனாபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (46), டி.புதூர் பகுதியை சேர்ந்த மெஹாராஜிபேகம் (38) ஆகிய இருவரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பெரிய கோட்டை புதைகுழி பகுதி அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த ஆறுமுகம், புயல் ராமன், நேதாஜி, செல்வம், அழகன் ஆகிய 5பேர் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த சீட்டு கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா சேந்தமங்கலம்பாதூர், திருநாவலூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்க்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டனர். அப்போது சேந்தமகலத்தில் ஒரு வீட்டிற்கு பின்னால் லலிதா (வயது 47) என்பவர் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்து வந்தார்.

    இதேபோல பாதூரில் பாக்கியலட்சுமி (39), என்பவரும், திருநாவலூரில் மங்கவரத்தாள் (55) என்பவரும் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • சாராயம் தயாரிக்க வயலில் ஊறல் போட்ட விவசாயி கைது செய்யப்பட்டு உள்ளார்
    • 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் அங்கேயே தரையில் கொட்டி அழித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 59) தனது வயலில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செல்வராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார், அதனை அதே இடத்தில் தரையில் ஊற்றி அழித்தனர்.

    • 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர்.
    • கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    போரூர்:

    சென்னை, மதுரவாயலை அடுத்த நெற்குன்றம், ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ் (வயது23). ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. நேற்று இரவு 8.30மணி அளவில் ராஜேஷ், மதுரவாயல் கந்தசாமி நகர் 5-வது தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே 4 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மர்ம கும்பல் ராஜேசை வழிமறித்து திடீரென சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டி சென்ற கும்பல் ராஜேசை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும்,கோயம்பேடு துணை கமிஷனர் குமார், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொலையுண்ட ராஜேசுக்கும், திருவள்ளூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சுரேஷ் என்பவருக்கும் இடையே கடந்த 6 மாதத்துக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நெற்குன்றம் பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் தங்கையின் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது சுரேசை, ராஜேஷ் சரமாரியாக அடித்து உதைத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜேசை தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×