search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • சுமார் 16 வினாடிகள் கொண்ட வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.

    சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கி, இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என வாக்குவாதம்.
    • இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கோடாலி தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் இவரது வீட்டின் பின்புறம் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு மண் எடுக்கும் பொழுது மண்ணிற்கான முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாத முற்றியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் ராஜேந்தி ரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளனராம். இதில் சுயநினைவிழந்து கீழே விழுந்த ராஜேந்திரன் அசைவற்று கிடந்துள்ளார்.

    இதனை அடுத்து பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அவரது ஊழியர்கள் பின்னர் டிராக்டரை ஏற்றி விபத்து நடந்தது போல் உருவகத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    விவசாயி ராஜேந்திரன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலின் பின் பகுதிக்கு சென்ற போது தான் உடல் நசுங்கி கொடூரமாக ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    தகவல் இந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் பாஸ்கரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது பணியாளர்களை கைது செய்ய வேண்டும் என ராஜேந்திரன் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் திரளான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரிப்பு செய்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரை திருவெண்காடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தபோது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
    • அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த மணிமாறன் (வயது 34) பாக்கெட் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புதுவை சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.
    • இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு (வயது22). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவரிடம் கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65) மற்றும் அவரது மகன் விவேக் (35), ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள வங்கியில் நகை அடமானம் வைத்துள்ளோம்.

    அதனை மீட்க பணம் வேண்டும் என கேட்டனர். சம்பவத்தன்று வங்கிக்கு சென்ற விசு அவர்களின் நகையை ரூ.68 ஆயிரம் கொடுத்து மீட்டு கொடுத்தார். பின்னர் தந்தை, மகன் இருவரும் நகைகளை மீண்டும் விசுவிடம் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    இதனை தொடர்ந்து விசு அவர்கள் கொடுத்த நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார். அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு என்பது தெரியவந்தது. ஒரிஜினல் நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட நகையை கொடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த விசு இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.640 பறிமுதல் செய்யப்பட்டது.
    • அவர்களிடம் இருந்து ரூ.5,800 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர்.

    அந்த வகையில் கஞ்சா வைத்திருந்ததாக ஊத்தங்கரை பாரதிபுரம் ஜீவித்குமார் (21), வரமலைகுண்டா வெங்கடேசன் (42), ஓசூர் தேர்பேட்டை நாகராஜ் (22), சூளகிரி தாலுகா அகரம் வெங்கடேஷ் (45), ஓசூர் சிப்காட் அரசு (24), சின்ன பேளகொண்டப்பள்ளி நாகராஜ் (52), மிடுதேப்பள்ளி கரிசித்தப்பா (45), கிருஷ்ணேபாளையம் தொட்டி தாமரை செல்வன் (20), போச்சம்பள்ளி சேகர் (29) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.5,800 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே போல தடை செய்யப்பட்ட குட்கா விற்ற ஊத்தங்கரை தாலுகா செங்கல்நீர்பட்டி சட்டமுத்து (50), சிங்காரப்பேட்டை சதாத் அலி (71), கூர்சம்பட்டி மாதப்பன் (52), கிருஷ்ணகிரி லைன்கொல்லை ராமசாமி (78), காவேரிப்பட்டணம் அருள்குமார் (47) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.640 பறிமுதல் செய்யப்பட்டது. அதே போல கனகமுட்லு பகுதியில் லாட்டரி விற்ற பெரிய மோட்டூரை சேர்ந்த முருகன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.

    • பனையூர்-செண்பகபுரம் சாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • மாடசாமி மது விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையிலான போலீசார் பனையூர்-செண்பகபுரம் சாலையில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த சங்குபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மாடசாமி(வயது 50) என்பதும், மோட்டார் சைக்கிளில் பதுக்கிவைத்து மதுபாட்டி ல்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 20 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    • மேல கடையநல்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் ரவி வசித்து வருகிறார்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது ரவி திருடியது தெரியவந்தது.

    நெல்லை:

    திருவண்ணாமலை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 36). தற்போது இவர் மேல கடையநல்லூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் அய்யப்பன்(45) என்பவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றுவிட்டார். வீட்டுமுன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டுபோனதை அறிந்த அய்யப்பன் கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி சி.சி.டி.வி. காமிரா க்களை ஆய்வு செய்தபோது ரவி திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • தருமபுரி டவுன் பஸ் நிலையம் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • கைதான கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகர போலீஸ் எல்லைக்குட்பட்ட குமாரசாமிப்பேட்டை, குள்ளனூர், கோவிந்தசாமி கவுண்டர் தெரு, ஏ.கொல்லஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து கதவை உடைத்து தங்க நகைகள் மட்டும் திருட்டு போனது.

    இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும் செல்போன் தகவல்கள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். 4 திருட்டு சம்பவங்களும் ஒரே மாதிரி இருப்பதால் அதன் அடிப்படையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை வலை வீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் மட்டுமே என்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கண்காணித்து தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து தருமபுரி டவுன் பஸ் நிலையம் அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அவனிடம் மேற்க்கொ ண்ட விசாரணையில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கார்த்திக் (வயது29) என்பதும், தருமபுரி பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், புழல் சிறையிலிருந்து கடந்த 3-ம் தேதி ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது.

    மேலும் கார்த்திக் மீது சென்னை மாநகரத்தில் 35-க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் இருப்பதும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனிடமிருந்து தருமபுரி பகுதியில் திருடிய 37 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருட்டு சம்பவ ங்களுக்கு பயன்படுத்தி பல்சர் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றையும் கைப்பற்றினர். இதையடுத்து கைதான கார்த்திக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் பாராட்டி வெகுமதி வழங்கினார். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை அவர் பார்வையிட்டார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயசங்கர், பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தபோது, பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது
    • இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும்டி.எஸ்.பி. டீம் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில் இருந்தனர்.அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணன் (35) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடம்இருந்து 310 கிராம் கஞ்சா பொட்டல ங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கொடுவாய் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.
    • காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

    காங்கயம்:

    காங்கயத்தை அடுத்த கொடுவாய் பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஊதியூா் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கொடுவாய் பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட திருப்பூா் பகுதியை சோ்ந்த மணிகண்டன் (50), லோகநாதன் (61), ஆறுமுகம் (50), வாசுதேவன் (63), பிரபாகரன் (41), சரவணகுமாா் (38) உள்பட 13 பேரை கைது செய்த போலீசாா், அவா்களிடமிருந்த ரூ.1.80 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 

    • கீழ்புத்துப்பட்டு அகதி முகாமிற்கு கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணிக்காக வந்தனர்.
    • குருகுலசிங்கத்தை கண்ட இன்ஸ்பெக்டர் ராபின்சன், நீ எவ்வாறு இங்கு வந்தாய்? கேட்டுள்ளார். அப்போது குருகுலசிங்கம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    வானூர்:

    இலங்கையைச் சேர்ந்தவர் குருகுலசிங்கம் (வயது 46). இவர் தனது மனைவி, மகன், மகளுடன் கடந்த 2006-ம் ஆண்டு ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திற்கு அகதியாக வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு அகதி முகாமிற்கு குடும்பத்துடன் வந்தார்.

    இங்கு பல்வேறு இடங்களில் பணி தேடினார். எங்கும் வேலை கிடைக்காததால், நானும், எனது மகனும் வெளிநாடு சென்று பணி செய்ய இருக்கிறோம். அதனால் எங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்தார். இதனை அடுத்து கடந்த ஏப்ரல் 23-ந்தேதி குருகுலசிங்கம், அவரது மகன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சென்ற அவருக்கும், அவரது மகனுக்கும் பாஸ்போர்ட் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இதனை அடுத்து இருவரும் இலங்கையில் உள்ள மீனவருடன் சேர்ந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். குருகுலசிங்கத்திற்கு மீனவர் ரூ,50 ஆயிரம் கூலி பாக்கி வைத்துள்ளார்.

    இதையடுத்து, எனக்கு பணம் வேண்டாம், என்னை தமிழ்நாட்டில் இறக்கு விடு என்று குருகுலசிங்கம் மீனவரிடம் கேட்டுள்ளார். இதற்கு மீனவர் ஓப்புக் கொண்டார். இதனால் மகனை அங்கேயே விட்டு விட்டு மீனவரின் போட்டில் ஏறி ராமேஸ்வரம் வந்துள்ளார். அங்கிருந்து பஸ் ஏறி கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு முகாமிற்கு குருகுலசிங்கம் வந்தடைந்தார்.

    கீழ்புத்துப்பட்டு அகதி முகாமிற்கு கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் ரோந்து பணிக்காக வந்தனர். அங்கு குருகுலசிங்கத்தை கண்ட இன்ஸ்பெக்டர் ராபின்சன், நீ எவ்வாறு இங்கு வந்தாய்? கேட்டுள்ளார். அப்போது குருகுலசிங்கம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    • இருதரப்பினர் மோதலில் 2 பேர் கைது செய்யபட்டனர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் உடையார்பாளையம்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் மூர்த்தியான் தெருவை சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் திருமாவளவன் (வயது 23). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தமிழரசனுக்கும்(21) இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழரசன், அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருமாவளவன், அவரது உறவினர் ஜோதிமணி ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், ஜோதிமணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×