search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கணேசன் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் ஓடி வந்து பிடித்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 48). இவர் நேற்று தென்காசி பழைய பஸ் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கணேசனின் செல்போனை பறித்துக்கொ ண்டு தப்பியோட முயன்றார்.

    உடனே கணேசன் கத்தி கூச்சலிடவே, அந்த நபரை அக்கம்பக்கத்தில் நின்ற பயணிகள் ஓடி வந்து பிடித்தனர். அதற்குள் அந்த நபர், திருடிய செல்போனை அங்கு நின்று கொண்டிருந்த அவரது கூட்டாளிகள் 2 பேரிடம் கொடுத்துவிட்டார். இதுதொடர்பாக கணேசன் தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் தென்காசி எஸ்.கே.பி. தெருவை சேர்ந்த முகமது அலி(வயது 34) என்பதும், திருடிய செல்போனை தென்காசி டி.என்.எச்.பி. காலனியை சேர்ந்த சுடலைகுமார்(30), புதுமனை 1-வது தெருவை சேர்ந்த ரசாக் முகமது ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • மைக்கேல் ஞானசேகர் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடை கதவு உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    சங்கரன்கோவில் கக்கன்நகரை சேர்ந்தவர் மைக்கேல் ஞானசேகர். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற மைக்கேல் மறுநாள் காலை கடைக்கு சென்று பார்த்தார். அப்போது கடை கதவு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் வேலுசாமி(வயது 32) என்பவர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணம் திருடியது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.காமிராக்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • 42 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
    • ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் சித்திரை திருவிழா நடந்தது. இதனை பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் வந்திருந்தனர்.

    இந்த நிலையில் வழிப்பறி கும்பல் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடலாம் என்று கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் திருடுபோனது.

    மதுரை எஸ்.ஆலங்குளம், கமலேசுவரன் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி அங்கம்மாள் (60). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக போலீஸ் சூப்பிரண்டு பங்களா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அவரிடம் இருந்து 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியது.

    தல்லாகுளம் இந்திரா நகரை சேர்ந்த சேகர் மனைவி சங்கரேசுவரி (62). இவர் ரேஸ்கோர்ஸ் சாலை நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அவரிடம் 7 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    புதூர் மண்மலை மேடை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் கலெக்டர் பங்களா அருகே நின்று கொண்டி ருந்தார். அடையாளம் தெரியாத மர்மகும்பல் அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பியது.

    மதுரை ஜவகர்புரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி சுந்தரி (60). இவர் டி.ஆர்.ஓ. காலனியில் நின்று கொண்டி ருந்தார். அவரிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. சென்னை பனப்பாக்கம், நாராயணன் மனைவி சீதம்மாள்(74). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடம் மர்மகும்பல் 4 பவுன் நகைைய பறித்து தப்பியது.

    ஆத்திகுளம் கனகவேல் நகர் ராமலிங்கம் மனைவி சண்முகவடிவு. இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்தார். அவரிடமும் மர்ம கும்பல், 5 பவுன் நகையை பறித்து தப்பியது. ஆனையூர் செந்தூர் நகர் சோனைமுத்து மனைவி நாகம்மாள்(70). இவர் தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு வந்திருந்தபோது 3 பேர் 3 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    மதுரை வசந்தநகர் கல்யாணசுந்தரம் மனைவி ராமதிலகம் (53). இவரிடம் மர்ம கும்பல் 9 பவுன் நகையை பறித்து தப்பியது. மதுரை அருகே உள்ள திருமால்புரம் இந்திரா நகர் இதயதுல்லா மனைவி ராஜாத்தி (64). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக, தமுக்கம் பஸ் நிறுத்தம் வந்தார். அவரிடம் 2 பவுன் நகை பறிக்கப்பட்டது.

    இவ்வாறு மதுரை மாநகரில் 9 பெண்களிடம் 42 பவுன் நகைகள் பறிக்கப்பட்டன. இதில்ெ ெதாடர்புடைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக அந்தந்த பகுதிகளில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    இதில் குற்றவாளிள் பற்றிய விவரம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் குமுளிபேட்டை பாபு மனைவி வில்டா (62), மேற்குவங்காள மாநிலம் கல்கத்தா ராபின் நகரை சேர்ந்த ரவிபிரசாத் மனைவி லதா (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பிக்பாக்கெட் அடித்தவர் கைது

    தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தில் தேவன் (37). இவர் சித்திரை திருவிழா பார்ப்பதற்காக யானைக்கல் பாலம் பகுதியில் நின்று கொண்டி ருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு வாலிபர் செந்தில்தேவனிடம் செல்போன், பவர் பேங்க், ப்ளூடூத் ஆகியவற்றை அபேஸ் செய்து தப்ப முயன்றார். செந்தில் தேவன் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விளக்குத்தாண் போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் செல்லூர் மேலதோப்பை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை சுண்ணாம்பு காளவாசலை சேர்ந்தவர் பால்பாண்டி (43). இவர் எம்.கே.புரம் பகுதியில் நடந்து சென்றார். சத்துணவு கூடம் ரோட்டில் 3 பேர் கும்பல் பால்பாண்டியை வழிமறித்து கத்தி முனையில் ரூ.10 ஆயிரத்தை பறித்து தப்பியது. இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமறைவான ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.
    • ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    திருவொற்றியூர்:

    புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஈஷா என்கிற ஈஸ்வரன்(வயது33). யுவராஜ் என்கிற எலி யுவராஜ் (38). ரவுடிகளான இவர்கள் மீது கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    வடசென்னை பகுதியில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பு, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஷெட்டுகளில் மாமுல் வசூலிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூரில் வக்கீலான காமேஷ் என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஈஷா, யுவராஜ் ஆகியோர் கோர்ட்டில் சரண்அடைந்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து தலைமறைவான ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் ரம்யா பாரதி உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் தனிப்படை போலீசார் சென்னையில் இருந்து பெங்களூருக்கு விரைந்து சென்றனர்.

    இன்று அதிகாலை ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்து உள்ளே புகுந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரும் அங்குள்ள சுவரை தாண்டிக்குதித்து தப்பி செல்ல முயன்றனர். இதில் அவர்களது காலில் முறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கைதான ஈஷாவும், யுவ ராஜும் பெங்களூரில் பதுங்கி இருந்தபடி சென்னையில் இருக்கும் தொழில்திபர்களை சாட்டி லைட் போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பணம் வாங்குவது, கொலை திட்டம் தீட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை சென்னையில் உள்ள தங்களது கூட்டாளிகள் மூலம் அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    அவர்களை சென்னை அழைத்து வந்து யார்? யாரை? மிரட்டி பணம் பறித்தனர், கூட்டாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காலில் முறிவு ஏற்பட்டு இருப்பதால் ரவுடிகள் ஈஷா, யுவராஜ் ஆகிய இருவரையும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர். அவர்களுக்கு காலில் மாவுகட்டுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலங்குடி வடகாடு முக்கத்தில் கஞ்சா விற்று கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அம்மன் நகரை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • திருச்சிக்கு தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த 4 பேர் கைது
    • 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

    திருச்சி, 

    பெங்களூரிலிருந்து திருச்சிக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட பொருளாதர குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் (லால்குடி பொறுப்பு) சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், முத்துசாமி, முதல் நிலை காவலர் செயலரசு,காவலர்கள் தமிழரசன், பாண்டிய ராஜன், பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மூன்று கார்களை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் ஒரு டன் எடையுள்ள ரூ.6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் நடுத்தெருவைச் சேர்ந்த இளையராஜா (வயது 41), தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ் (34), ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபால் சிங் (36), கர்நாடக மாநிலம் பெங்களூர் மகடி ரோட்டைச் சேர்ந்த அமீர் சிங் (38) ஆகியோர் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.பின்னர் காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்ற சமயபுரம்போ லீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் கடத்தி வரப்பட்ட ரூ. 6 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இளையராஜா நடத்திவரும் ஹரன் டீக்கடையில் வைத்து பல்வேறு பகுதிகளுக்கு இவர்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதில் மணிராஜ் மீது ஏற்கனவே சிறுகனூர் காவல் நிலையத்தில் குட்கா கடத்தியதாக வழக்கு உள்ளது.

    • க.பரமத்தி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த விசுவநாதபுரி அருகே தண்ணீர்பந்தல் பிரிவு பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விசுவநாதபுரி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சிலம்பன் மகன் நாகராஜன் என்பவர் மது விற்பனைக்காக 6 பாட்டில்கள் பதுக்கி இருந்தது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த க.பரமத்தி போலீசார், நாகராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காரைக்கால் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருவகாகவும், அவரை கண்காணித்து கைது செய்யும்படியும் சிலர் ரோந்துபோலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
    • போலீசார் விசாரித்தபோது ,அந்த குறிப்பிட்ட வாலிபர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், காரைக்கால் பஸ் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர், வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை கண்காணித்து கைது செய்யும்படி ரோந்து  போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி, போலீசார், குறிப்பிட்ட வாலிபரை கண்காணித்தபோது, அவர், பஸ் ஏற மற்றும் இறங்க வரும் பெண்களை பார்த்து கண்ணடிப்பதும், தொடர்ந்து சென்று இடிப்பதுமாக இருந்தார். பலமுறை இந்த தகாத செயலை உறுதி செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் அங்குள்ள சில சாட்சிகள் முன்னிலையில் கைது செய்தனர்.

    • களக்காடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் பாலாமடை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் சண்முகசிகா (வயது43). இவர் களக்காடு யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 1 ஆண்டுக்கு முன் சண்முகசிகா தச்சநல்லூர் அருகே உள்ள மேலகரையை சேர்ந்த இசக்கியம்மாளிடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்ததாகவும், இந்த கடனை அவர் திரும்ப கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் களக்காடு வேளாண்மை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சண்முகசிகா கலந்து கொண்டார். உணவு இடைவேளையின் போது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த சண்முகசிகாவை, இசக்கியம்மாளின் மகனான அம்பை ரகுமான் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (36), அவரது நண்பர் விக்னேஷ் ஆகியோர் காரில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினர்.

    அவர் ஏறமறுத்த போது எனினும் அவரை காரில் ஏற்றி மேலகரைக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து கத்தி முனையில் அவரை பணத்தை திருப்பி தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். பின்னர் அவரை விடுவித்தனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரது நண்பர் விக்னேஷை தேடி வருகின்றனர்.

    • பாண்டீஸ்வரன் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது பாண்டீஸ்வரனுக்கு அந்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது.
    • பாண்டீஸ்வரன் அந்த வாலிபரை போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் கோட்டை கருப்பன் மகன் பாண்டீஸ்வரன் (வயது40). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் நகைக்கு பாலீஸ் போட்டு தருவதாக கூறி உள்ளார்.

    இதனால் அவரை பாண்டீஸ்வரன் வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது பாண்டீஸ்வரனுக்கு அந்த இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது. நகைக்கு பாலீஸ் போட வேண்டாம் என கூறி திருப்பி அனுப்பி விட்டார். இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மேஜை மீது வைத்திருந்த பணத்தை காணவில்லை. இதையடுத்து பக்கத்து தெருவில் இருந்த அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது பணத்தை அவர் திருடியது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து பாண்டீஸ்வரன் அந்த வாலிபரை போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பீகார் மாநிலம் சத்தீஸ்கர் அருகே உள்ள லட்சுமிபரையைச் சேர்ந்த புத்தேவ் மகன் சன்னிகுமார் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து சரவணகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வருகிறார். தினமும் பணி முடிந்த பிறகு கடையநல்லூரில் இருந்து அவர் வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம்.

    அதேபோல் நேற்றிரவு 8 மணிக்கு கடையநல்லூர் அட்டைக்குளம் அருகே மாணவி நடந்து சென்றார். அப்போது மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் லாரியில் இருந்து இறங்கிய சேலத்தை சேர்ந்த டிரைவர் சரவணகுமார் என்பவர் திடீரென சாலையில் சென்ற மாணவியின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து சரவணகுமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து மாணவியை மீட்டனர். கடையநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்றனர். அவர் மீது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதற்கிடையே பொதுமக்கள் நடந்து செல்லும் சாலையில் அட்டை குளம் அருகே நிறுத்தப்படும் வாகனங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இங்கே எந்த வாகனங்களையும் நிறுத்தக்கூடாது என பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    • கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இவர்களிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

    தொப்பூர் அருகே உள்ள கோம்பை கிராமத்தை சேர்ந்த சரவணன், அரூர் கிளம்பாறை அருகே உள்ள அங்கமுத்து, ஏரியூர் அருகே உள்ள சிலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், பென்னாகரம் அருகே உள்ள அஜன் நெல்லி கிராமத்தை சேர்ந்த அன்பு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 140 கிராம் கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×