search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • 3 பேர் மீன் கடையில் மது போதையில் வந்து தகராறு செய்து சதீஷை தாக்கினர்.
    • அருண், முனியப்பன் 2 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் சதீஷ் (வயது 32). இவர் கன்னண்ட அள்ளி பகுதியில் மீன் கடை நடத்தி வந்தார்.

    அப்போது பில்லகொ ட்டாய் கிராமத்தை சேர்ந்த முனியப்பன் (வயது 22), அருண் (22), சசி (33) ஆகிய 3 பேரும் இவரது கடையில் மது போதையில் வந்து தகராறு செய்து சதீஷை தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் அருண், முனியப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கிருஷ்ணகிரி சிறையில் அடைத்தனர்.

    இதில் தலைமறை வாகியுள்ள சசியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    • சிறுமியை வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி (வயது 32) என்பவர் மிஸ்காடு மூலம் பழகி, காதலிப்பது போல் ஏமாற்றி உள்ளார்.

    மணப்பாறை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த 1-ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டுச்சென்ற சிறுமி இரவு நீண்ட ஆகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம், தோழிகள், உறவினர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் தாய் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். மேலும் சிறுமியிடம் பேசிய நபர்கள் யார் என்பது தொடர்பாக அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் சம்மந்தப்பட்ட நபர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெங்களூருக்கு விரைந்தனர். இதையடுத்து ரெயில் நிலையத்தில் சிறுமியை இருவர் அனுப்பி வைக்க இருந்த நிலையில் அவர்கள் இருவரையும் பிடித்த போலீசார், சிறுமியையும் மீட்டு மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரிக்க தொடங்கினர்.

    மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய நபர் ஒருவரை வேலூரில் போலீசார் பிடித்து மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. சிறுமியை வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி (வயது 32) என்பவர் மிஸ்காடு மூலம் பழகி, காதலிப்பது போல் ஏமாற்றி உள்ளார்.

    அதன்பேரில் கடந்த 1-ந்தேதி மணப்பாறைக்கு வந்த முபாரக் அலி, சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார்.

    பெங்களூருக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர் அந்த சிறுமியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் தனது பெற்றோரிடம் அந்த சிறுமியை அழைத்து சென்ற முபாரக் அலி, அவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது பெற்றோர், உடனே அந்த சிறுமியை விட்டு விட்டு வருமாறு கூறியுள்ளனர்.

    இதையடுத்து அவர் அந்த சிறுமியை தனது நண்பர்களான வேலூரைச் சேர்ந்த நியாஸ் (32), சதாம் உசேன் (28) ஆகியோரிடம் விட்டு விட்டு அவர்களுக்கு விருந்தாக்கினார். பின்னர் அவர் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நியாஸ் மற்றும் சதாம்உசேன் ஆகியோரும் அந்த சிறுமியை மிரட்டியும், பணிய வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இந்த நிலையில்தான் 3 நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே பதிவு செய்த மாயமான வழக்கை சிறுமியை கடத்திச் செல்லுதல், வன்கொடுமை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கை மாற்றம் செய்து 3 பேரையும் இன்று காலை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

    சிறுமியை திருமண ஆசைகாட்டி 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

    இந்த சம்பவத்தில் ஆரம்பத்தில் இருந்தே குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் முகத்தில் துணி வைத்து மறைத்து தான் அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மதுரையில் ரெயில் பயணிகளிடம் செல்போன் பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மதுரை

    மதுரை மேலப்பொன்ன கரம் 2-வது தெருவைச் சேர்ந்த சிவ பெருமாள் மகன் விக்னேஷ் (வயது24). இவர் நேற்று இரவு சென்னை செல்வதற்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நண்பர் ரஞ்சித்துடன் சென்னை சென்று கொண்டிருந்தார்.

    முன் பதிவில்லாத பெட்டியில் ஏறிய இருவரும் கூட்டம் அதிகமாக இருந்ததால் கழிவறை அருகில் உள்ள கதவு அருகே நின்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் மதுரா கோர்ட்ஸ் பாலத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது விக்னேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்த போது தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் திடீரென்று ரெயில் பெட்டியில் ஏறி விக்னேஷ் மற்றும் மற்றொரு பயணி யான மணிகண்டனிடம் இருந்து செல்போன்களை பறித்து கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். உதவி ஆய்வாளர் சையது குலாம், காவலர்கள் பழனிக்குமார், பாலகிருஷ்ணன், சஞ்சய், செந்தில், செந்தில்குமார், திருமுருகன் ஆகியோர் சம்பவஇடத்திற்கு சென்று விசாரித்துக் கொண்டிருந்த போது தத்தனேரி ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழ் தண்டவாள கிழக்கு பக்கமுள்ள ஆவின் பாலகம் அருகில் நின்று கொண்டிருந்த விக்னேஷ் என்ற குட்டி புலி (25) அஜய் குகன் (21), பரமேஸ்வரன் (29), சீனிவாசன் (19) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். செல்போன் களும் பறிமுதல் செய்யப் பட்டது. கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த பட்ட 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • நர்சை அடித்து கொன்ற கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முனியாண்டி புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரும், ரம்யா (22) என்ற பெண்ணும் காதலித்து கடந்த திருமணம் செய்து கொண்டனர். திருப்பரங் குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் ரம்யா நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை ரம்யா வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், கணவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார், கர்ப்பிணியாக இருந்த ரம்யா நடத்தை தொடர்பாக அவதூறாக பேசினார். மேலும் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசிய தாகவும் கூறப்படுகிறது. இதனை ரம்யா தட்டி கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் உருட்டு கட்டையால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக ரம்யா வின் தந்தை செல்வம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சதீஷ்குமார், அவரது தந்தை செல்வம் (55), தாய் பஞ்சவர்ணம் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர், அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வாடிக்கையாளர் போல்பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர்.
    • பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வாடிக்கையாளர் போல்பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஜித் (24) என்பதும், வடபழனி நூறடி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தபடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • ஜீவிதாவை மாமியார் சுந்தரம்மாள், மணிகண்டனின் தம்பி ஹரி ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • போலீசார் ஹரி மற்றும் சுந்தரம்மாள் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் ஜீவிதா (வயது 24) இவருக்கும், மாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33) என்பவருக்கும் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    மேலும் ஜீவிதாவை மாமியார் சுந்தரம்மாள், மணிகண்டனின் தம்பி ஹரி ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஜீவிதா பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஹரி மற்றும் சுந்தரம்மாள் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    • 178 குரோஸ் பட்டாசு திரி பறிமுதல்; 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    விருதுநகர்

    சிவகாசி தாயில்பட்டி டி.ராமலிங்கபுரம் பகுதியில் அனுமதி இன்றி பட்டாசு திரி தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வெம்பக்கோட்டை போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது பாலமுருகன் (வயது 35) என்பவரது வீட்டில் 48 குரோஸ் பட்டாசு திரிகளும், உமாராஜ் (58) வீட்டில் 36 குரோஸ் பட்டாசு திரிகளும், வீரராஜ் (50) வீட்டில் 50 குரோஸ் பட்டாசு திரிகளும், செல்வராஜ் (61) வீட்டில் 44 குரோஸ் பட்டாசு திரிகளும் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பட்டாசு திரிகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    வாலிபர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் சேர்ந்தவர் கண்ணன் என்ற அன்பழகன் (வயது 31). இவர் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனால் சிறையில் இருந்தவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார். அன்பழகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரது மனைவிக்கும் சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாமினில் வெளியே வந்த அன்பழகன் கனகராஜன் மனைவியை சந்திக்க முயற்சித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தனது அத்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனை வீடு புகுந்து கனகராஜ் மற்றும் அவரது மகன் கணேஷ் ராஜ் ஆகியோர் அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது பற்றி சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்திருந்தனர். இதை தொடர்ந்து கனகராஜின் மகன் கணேஷ் ராஜையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர்.
    • இளவரசன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.லாரி டிரைவர். இவர் நேற்று இரவு பனப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 23 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் தனியார் அரிசி ஆலைக்கு லாரியை ஓட்டிச்சென்றார்.

    அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் டிரைவர் ஆனந்தனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த இளவரசன், ஈக்காடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், வீரராகவபுரம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிந்தது.

    இதையடுத்து இளவரசன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தரகம்பட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் அவர்கயிடமிருந்த மதுபானங்களை பறிமுதல் செய்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் கடவூர் தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சி அரசக்கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் லோகநாதன் (வயது31). இவர் விராலிப்பட்டி பகுதியில் உள்ள நான்கு ரோடு அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சேகர் மகன் சிவக்குமார்(32) தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி அரசு மதுபானக்கடை அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அந்த பகுதிகளை ஆய்வு செய்து லோகநாதன், சிவக்குமார் ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    இலுப்பூர் அருகே கல்லிகுளம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக சிறப்புப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்த தங்கவேல் (வயது 29), செல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (35), மாரிமுத்து (28), பிலிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் (47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு அட்டைகள், ரூ.1,560, செல்போன் 3, மோட்டார் சைக்கிள், டேபிள், சேர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    • வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை எம்.கே.புரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது23). இவர் பி.ஏ. படித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்தநிலையில் மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கடந்த 4-ந்தேதி இரவு சூர்ய பிரகாஷ் தனது நண்பர்களுடன் சென்றார்.

    அவர்கள் மதிச்சியம் அம்பலத்தார் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 10 பேர் கும்பல், இளம்பெண்களை கிண்டல் செய்துள்ளது. இதனை கண்ட சூர்ய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வைகை ஆற்றின் வடகரை ஆர்.ஆர்.மண்டபம் பகுதியில் வைத்து 10 பேர் கும்பல் சூர்யபிரகாசை சரமாரியாக தாக்கியது. அவர்கள் கைக்குட்டையால் அவரது கழுத்தை நெரித்தனர். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சூர்யபிரகாஷ் மயங்கி விழுந்தார். இதனால் அச்சமடைந்த 10 பேர் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

    இதையடுத்து சூர்ய பிரகாசை அவரது நண்பர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக மதிச்சியம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிளை கண்டுபிடிக்க சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சூர்ய பிரகாசை தாக்கியவர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை தேடி வருகின்றனர். கொலையுண்ட சூர்ய பிரகாஷ், ராஜரத்தினத்திற்கு ஒரே மகன் ஆவார்.

    ×