search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • போலீசார் பெல்லுஅள்ளி அண்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • பிளாஸ்டிக் பையில் 1½ கிலோ கஞ்சா மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது சின்னஏரி அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அதேபகுதியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருப்பதி மகன் விஜி (வயது26) என்பவர் பிளாஸ்டிக் பையில் 1½ கிலோ கஞ்சா மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் மாரண்ட அள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் பெல்லுஅள்ளி அண்ணாநகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்ததில் பெல்லுஅள்ளி அண்ணாநகரைச் சேர்ந்த ஜெகநாதன் (62) என்பவர் பையில் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • குப்பம்மாள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்
    • விறகு கட்டையால் மூதாட்டியை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்.

    மாரண்டஅள்ளி, 

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சென்னப்பன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குப்பம்மாள் (வயது. 60) இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை குப்பம்மாள் ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டின் முன்பு கட்டியிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் என் வீட்டின் முன்பு எதற்கு ஆடுகளை கட்டுகிறாய் என மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார், மேலும் அருகில் இருந்த விறகு கட்டையால் மூதாட்டியை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி தருமபுரிகிளை சிறையில் அடைத்தனர்.

    • 2 பேர் தினேசை கத்தி முனையில்மி ரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
    • விஜயகுமார், மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 23). இவர் கடந்த 1-ந் தேதி இரவு பழையபேட்டை கோட்டை பகுதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தினேசை கத்தி முனையில்மி ரட்டி பணம் பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த தினேஷ்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றது கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்த மார்கோ என்கிற விஜயகுமார் (வயது 61), அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (25) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான மார்கோ, அவரது மகன் குல்பி ஆகிய 2 பேரும் ரவுடிகள் ஆவார்கள். மார்கோ மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசில் 2 கொலை வழக்குகள் நிலுவையில்உ ள்ளன. அதே போல குல்பி மீது 2 கொலை வழக்குகள், 3 அடிதடி வழக்குகள்நி லுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
    • சிலையை விற்பனைக்காக கொடுத்தவர் மற்றும் இது தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கடைத்தெருவில் கண்ணன் (வயது 53) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் சூர்யபிரகாஷ் (23).

    இந்த நிலையில் இவரது வீட்டில் பழங்கால ஐம்பொன் சிலைகள் மற்றும் 1000 ஆண்டுகள் பழமையான செப்பு நாணயங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கண்ணன் வீட்டிற்கு சிலை வாங்க செல்வது போல் உள்ளே சென்றனர்.

    பின்னர், வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் 1000 ஆண்டுகள் பழமையான தன்வந்திரி ஐம்பொன் சிலை, 1 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் 1000 ஆண்டுகள் பழமையான 750 கிராம் எடை உள்ள 2 செப்பு நாணயங்கள், ஒரு காலச்சக்கரம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

    இவை அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர். பின்னர், சூரியபிரகாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கோவிலை சேர்ந்த ஒருவரிடம் சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கியதும், விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மன்னார்குடியில் சிலையை விற்பனைக்காக கொடுத்தவர் மற்றும் இது தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

    • பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
    • அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள பவளத்தானுர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.

    அவர்க பாப்பம்பாடி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கார்த்திக் ராஜா (23), பாரகல்லூர் பகுதியை சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (22) என தெரியவந்தது. அவர்களிடம் 14 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலம் இருப்ப தும் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2 பேரை யும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கைப்பற்றினர்.

    • மது விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் பகுதியில் மது விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்த சேட்டு மனைவி கவிதா (வயது 46), பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன் மனைவி ஈஸ்வரி (50) ஆகியோர் தங்களது வீட்டின் பின்புறம் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் தா.பழூர் அருகே உள்ள கோடாலி செல்லும் பிரிவு சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அமிர்தராயக்கோட்டை காலனி தெருவை சேர்ந்த விஜயகுமார் (33) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது 45 மதுபாட்டில்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மளிகை கடையில் புகையிலை விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
    • கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் வி.கைகாட்டி அருகே உள்ள காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து, கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அங்குள்ள பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டுப்பிரிங்கியம் பாலக்கரையை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் தனது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்று தலைமறைவாகி விட்டனர்.
    • 3 பேரை பிடித்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    பத்மநாபபுரம் ஆர்.சி. தெருவில் பரலோக மாதா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு கடந்த 29-ந்தேதி நள்ளிரவில் வந்த மர்ம திருடர்கள் ஆலய வலதுபுற கதவை உடைத்து உள்ளே புகுந்து மாதா சொரூபத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்து சென்று தலைமறைவாகி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து ஊர் தலைவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தி கைரேகை நிபுணர்கள், கைரேகைகளை பதிவு செய்தனர்.

    பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மர்ம நபர்களை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீஸ் படையினர் கடந்த 4 நாட்களாக கொள்ளை யர்களை பிடிக்க கன்னியா குமரி மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 3 பேர் மீது சந்தேகம் கொண்ட தனிப்படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனையிட்டு விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக மாறி மாறி பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் தனிப்படையினர் அவர்களை பிடித்து சென்று தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணை அடிப்படை யில் 3 பேரும் சேர்ந்து மாதா சொரூபத்தில் கிடந்த செயினை திருடியதை ஒப்புக்கொண்டனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் களக்காடு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சதீஷ் (26), தென்காசி வேதகோவில் தெருவை சேர்ந்த நவீன் ஆண்டனி ராஜா (24), ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த வினித் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் திருச்செந்தூர், களக்காடு, சுசீந்திரம், தக்கலை ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

    தொடர்ந்து மாதா சொரூபத்திலிருந்து திருடிய 7 பவுன் தங்கச் செயினை போலீசார் அவர்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    • மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர்.
    • பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் போலீசார் நேற்று மாலை மேட்டூர் அருகே உள்ள மாதையன்கொட்டாய் மேல்வாய்க்கால் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட் டனர். அப்போது மேட்டூர் பொன்நகரை சேர்ந்த அர்ஜூனன் மகன் மாதேஷ் (வயது 29), எடப்பாடி கலர்காட்டை சேர்ந்த கோபி மகன் தீபக்குமார் (22) ஆகியோர் பொதுமக்கள் தங்களை பார்த்து அச்சப்பட வேண்டும் என்பதற்காக பஸ் கண்ணாடிகளை உடைக்க லாம் என சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்களால் பொது சொத்துக்கு பங்கம் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரை யும் போலீசார் கைது செய்தனர்.

    • பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த கோபால் மகன் வடிவேல் (வயது 27). கூலித் தொழிலாளி. இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களாக பழனியில் தங்கி இருந்தார். நேற்று காலை அடிவாரம் பகுதியில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் வடிவேல் உயிரிழந்தார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் அழகாபுரியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் மாரிமுத்து (27), வீரமணி மகன் சுரேஷ் (29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்ததை ஒத்துக் கொண்டனர்.

    சுரேஷ் மற்றும் மாரிமுத்து ஆகியோர் அடிவாரம் பகுதியில் குதிரை வண்டி ஓட்டி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வடிவேல் இவர்களது நண்பர் ஆவார். இவர்கள் 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதன்படி கடந்த வாரம் மது குடித்துக் கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நேற்று காலையிலும் அவர்கள் மது குடித்தபோது தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வடிவேல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து மற்றும் சுரேஷ் அவரை விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பூங்கோடை வாய்க்கால் மேட்டு பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் கண்கானிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நொய்யல் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த மகுடேஸ்வரன் (வயது48) என்பவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல் மூலிமங்கலம் பிரிவு பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கூடலூர் பகுதியை சேர்ந்த அங்குசாமி(34) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டம் வதஸ்மாவில் உள்ள மருந்தகக் கல்லூரியில் படித்து வரும் முன்னாள் காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை கல்லூரி வளாகத்தில் மறைத்து வைத்துவிட்டு தப்பிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கைது செய்யப்பட்ட நபரும், கொலையுண்ட பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

    இந்நிலையில், அந்த பெண் மற்றொரு ஆண் நண்பருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தனது முன்னாள் காதலியான மாணவியை கொலை செய்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி, நோட்புக் கொடுப்பதாக கூறி முன்னாள் காதலியை கல்லூரி வளாகத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மாணவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

    மாணவன் கடைசியாக மாணவியுடன் பேசிக்கொண்டிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து போலீசார் மாணவனை கைது செய்தனர். மேலும், அதே கல்லூரி வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஆய்வகத்தில் இருந்து மாணவியின் உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    ×