search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை நடுரோட்டில் சரமாரி தாக்கி வேட்டியை உருவி, விரட்டு அடிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்துக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து போலீ சாரின் கவனத்துக்கு வந்தது. அதன் அடிப்படை யில் தெப்பக்குளம் போலீ சார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தாக்கப்பட்டவர் மதுரை காமராஜர் சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (வயது 27) என தெரியவந்தது.நுங்கு வியாபாரியான இவர் சம்பவத்தன்று வியா பாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் அனுப்பானடி பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் நின்றிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது தவறுதலாக லேசாக உரசியுள்ளது.

    உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த போஸ் மகன் செந்தில்குமார் (20), சகோதரர்கள் அருண்குமார் (23), செல்வகுமார் மற்றும் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அழகன் மகன் கார்த்திக் பிரபு (23), முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் தீபக்ராஜா (23) ஆகியோர் சுந்தரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு தரக்குறைவாக பேசியுள்ளனர்.

    மேலும் சுந்தரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி, அவரது வேட்டியை உருவி விரட்டி அடித்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை நகரில் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சாலையோரத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் ரவுடிகளால் தாக்கப்பட்டு பணம் பறிக்கும் சம்பவம் சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வியாபாரிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திருமங்கலம் அருகே 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட வாகைக்குளம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அறிவழகன் என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 135 மது பாட்டில்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த சின்னசாமி என்பவரிடம் 200 மது பாட்டில்கள் இருந்தன.

    மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் காமராஜ் நகர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தனர்.
    • கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பட்டு அன்புக்கரசன் மற்றும் போலீசார் காமராஜ் நகர் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தனர்.

    அங்கு கஞ்சா கலக்கப்பட்ட சாக்லேட்டுகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதை விற்றதாக ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்த ஜாஜாடிகிஷோர் பேகேரா (32) என்வெரை போலீசார் கைது செய்தனர்.

    அவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். அவரிடம் இருந்து ரூ.1,400 மதிப்புள்ள 700 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • கோவில் திருவிழாவில் திருடிய 2 பேர் சிக்கினர்.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே அத்திப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இங்கு சாமி கும்பிடுவதற்காக அழகன்ராஜ் (வயது 63) என்பவர் நடந்த வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார்.

    சுதாரிக் கொண்ட அழகன்ராஜ் அங்கிருந்தவர்கள் உதவி யுடன் அந்த நபரை பிடித்து சாப்டூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த பிச்சைபாண்டி (51) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதே திருவிழாவிற்கு வந்திருந்த மாரியப்பன் (47) என்பவரிடம் ரூ.5 ஆயிரத்தை வழிப்பறி செய்து ஒரு வாலிபர் தப்பி செல்ல முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படை த்தனர். விசாரணையில் அவர் உசிலம்பட்டி அருகே உள்ள அய்யன்கோ வில்பட்டியை சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    தேன்கனிக் கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மல்லேசா (27), பெட்டமுகிலாளம் அருகே உள்ள கோட்டையூர்கொல்லை என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணம் பறித்த வாலிபர் கைது செய்யபட்டார்
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பூமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). இவர் கரூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுந்தரம் (24) என்பவர், ரவியின் சட்டைப்பையில் இருந்த பணத்தை திருடி உள்ளார். இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சட்டவிரோதமாக மது விற்ற 77 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

    கரூர்:

    மே தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் விடுமுறை என்பதால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா என போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 641 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக தென்னிலை அருகில் வால்நாய்க்கன்பட்டியில் 3 பேரிடமிருந்து 1 ஆயிரத்து 216 மது பாட்டில்களும், ஆம்னி காரும் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி. சுந்தரவதனம் தெரிவித்தார். இது தொடர்பாக, 04324 296299 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.
    • போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    போரூர்:

    போரூர், உதயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். மருந்து கம்பெனி ஒன்றில் ஆலோசகராக உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.

    இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளை நடந்த வீட்டில் கிடைத்த கைரேகை பதிவை ஆய்வு செய்தபோது கைவரிசை காட்டி தப்பியது பிரபல கொள்ளையனான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (26) என்பது தெரிந்தது. அவனை ஒரே நாளில் போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே மாங்காடு, போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். இந்த நிலையில் அவன் மீண்டும் கைவரிசை காட்டியபோது கைரேகை பதிவால் ஒரே நாளில் சிக்கிக்கொண்டான். கொள்ளையன் சூர்யாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவியின் தாயாருக்கும், அவரது 2-வது கணவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
    • மாணவி, தனக்கு பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவரத்தை தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    கோவை:

    கோவை வடவள்ளி பகுதியில் வசிப்பவர் 17 வயது சிறுமி. இவர் டிப்ளமோ படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அப்போது மாணவிக்கு 2 வயதாக இருந்தது. கைக்குழந்தையுடன் தவித்த அவரது தாயார் பெயிண்டர் ஒருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    அதன்பிறகு சிறுமி தனது தாயார் மற்றும் அவரது 2-வது கணவர் பராமரிப்பிலேயே வளர்த்து வந்தார். பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு சென்று வந்த நிலையில் மாணவியின் மீது வளர்ப்பு தந்தையான பெயிண்டர் சபலம் கொண்டார்.

    மனைவி வெளியில் சென்று இருந்த நேரத்தில் மகள் முறை கொண்டவர் என்பதையும் மறந்து அந்த மாணவிக்கு அவர் செக்ஸ் தொல்லை கொடுத்தார். பல நாட்கள் இவ்வாறு மாணவியை அவர் சித்ரவதைக்கு உள்ளாக்கினார். இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி வெளியில் சொல்லாமல் தவித்து வந்தார்.

    இந்தநிலையில் மாணவியின் தாயாருக்கும், அவரது 2-வது கணவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக் கொண்டு பெயிண்டர் வெளியே சென்றார். அந்த சமயம் மாணவி, தனக்கு பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவரத்தை தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெயிண்டரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • பெரம்பலூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யபட்டனர்
    • காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

    பெரம்பலூர:

    பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி சூரியா நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ரஞ்சித் (வயது 22). இவரது நண்பர் சின்னசாமி மகன் ராஜ்குமார் (28). இவர்கள் 2 பேரும் நேற்று காலை எசனையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் காயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த ரஞ்சித்தின் தம்பி ராம்கி (20), தாயார் ராஜேஸ்வரி, ராஜ்குமாரின் தாயார் கனகா ஆகியோர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றனர்.

    அப்போது, அங்கு தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வரும் காவலாளி சின்ராஜ் (53), காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து வெளியே காத்திருக்குமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகியோர் சின்ராஜை தாக்கியுள்ளனர். இதனை தட்டி கேட்ட தற்காலிக ஒப்பந்த ஊழியர்களின் கண்காணிப்பாளர் அசோக் (28), காவலாளிகள் சுரேஷ்குமார் (37), வினோத்குமார் (42), துப்புரவு பணியாளர்கள் கவுரி (31), சங்கீதா (32) ஆகியோரையும் மேற்கண்ட 3 பேரும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று ராம்கி, ரஞ்சித், ராஜ்குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். பின்னர் இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • மதுபானம் விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
    • அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள பென்னக்கோணம் பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு விற்கப்படுவதாக பெரம்பலூர் மதுவிலக்கு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மது விலக்கு சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையில் போலிசார் பென்னக்கோணம் பகுதியில் ரோந்து பணியினை மேற்கொண்டனர். அப்போது பென்னக்கோணத்தில் வேலு மகன் பெரியசாமி (வயது 82) வீட்டில் சட்டவிரோதமாக அரசு மதுபானபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

    அங்கு மதுபாட்டில்களை வைத்து விற்றுக்கொண்டு இருந்த பெரியசாமியை மது விலக்கு போலிசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிமிருந்து சுமார் 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 228 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்து சட்டவிரோதமாக விற்பனை செய்த பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார்.
    • சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கவுந்தப்பாடி அருகே ஈஞ்சரம்மேடு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சம்பவத்தன்று இந்த கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அந்த 35 வயது பெண் தனது மகனை அழைத்து கொண்டு சென்றார். வீட்டில் 7 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன், சிவக்குமார், வாசுதேவன் மற்றும் அந்த சிறுமியின் உறவினர் குணசேகரன் ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுமியிடம் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி சிறுமியை மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    கோவில் திருவிழாவுக்கு சென்று வீட்டு சிறுமியின் தாய் வீடு திரும்பி உள்ளார். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் அழுதவாறு கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மோகன், சிவக்குமார் வாசுதேவன் மற்றும் குணசேகரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×