search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • மின்வாரிய அதிகாரிகள் வெங்கல் போலீசில் புகார் செய்தனர்.
    • மின்கம்பி திருட்டில் தி.மு.க.பிரமுகர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள கீழானூர் துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் உயர் மின் அழுத்த மின் வயர்களை மாற்றும் பணி நடந்து வந்தது. இதற்காக அப்பகுதியில் ஏராளமான மின்கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் அந்த மின்கம்பிகள் திருடு போனது. இதன் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் வெங்கல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த மின்கம்பி திருட்டு தொடர்பாக மொத்தம் 12 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். இதில் ஒருவர் தி.மு.க.பிரமுகர் ஆவார். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்கம்பி திருட்டில் தி.மு.க.பிரமுகர் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • க.பரமத்தி அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது

    கரூர்:

    க.பரமத்தி ஒன்றியம் விசுவநாதபுரி அருகே அணியாபுரம் அமராவதி ஆற்றங்கரையோர பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக வந்த தகவலின் பேரில் க.பரமத்தி சப் இன்ஸ்பெக்டர் உதய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, சேவல் சண்டை போட்டியில் ஈடுபட்ட விசுவநாதபுரி கிழக்குதெரு பழனிச்சாமி மகன் ஜெயபாரதி( வயது 30), திருக்காம்புலியூர் ரவி மகன் பிரகாஷ் (31) ஆகிய 2 பேரை க.பரமத்தி போலீசார் கைது செய்தனர்.

    • திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யர் தோட்டம் பகுதியில் சோதனையிட்டனர்.
    • போலீசாரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த திங்களூர் அருகே அய்யர் தோட்டம் பகுதியில் உள்ள காசுக்காரன்பாளையம் கிரே நகரில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திங்களூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து திங்களூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அய்யர் தோட்டம் பகுதியில் சோதனையிட்டனர்.

    அப்போது அங்கு தனிமையில் ஒரு ஓட்டு வீடு மட்டும் இருந்தது. அந்த வீட்டிற்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அந்த வீட்டிற்கு முன்பு பட்டாசுகள், வெடிப்பொருட்கள் தயாரிக்கும் மூலப் பொருட்கள் இருந்தன. வீட்டுக்குள் 5 பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் 5 பேரும் தப்பியோட முயன்றனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெருந்துறை வி. மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்கிற சண்முகம் (37). அவரது மனைவி விஜயலட்சுமி (35). காசுக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த மவுலீஸ்வரன், சகுந்தலா மணி (42), திங்களூர், பாண்டியம் பாளையம் பகுதியை சேர்ந்த திவாகர் (29), அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (44) என தெரிய வந்தது.

    இதில் இளங்கோ என்கிற சண்முகம் இந்த வெடிப்பொருள் தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். அவர் போலீஸ் வரும்போது வீட்டில் இல்லாததால் தலைமறைவாகிவிட்டார். விசாரணையில் இளங்கோ அரசு உரிமம் பெறாமல் பட்டாசு தயாரித்து வந்தது தெரிய வந்தது. இளங்கோ வெளியே இருந்து பட்டாசு மூல பொருட்களை வாங்கி வந்து இங்கே வீட்டில் தயார் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    • கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    நந்திவரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கோவிந்தராஜபுரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருபவர் ஹைதர் அலி (வயது 54), இவரது கடையில் சில தினங்களுக்கு முன்பு பிரியாணி கேட்டு 8 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனை தட்டி கேட்ட கடை உரிமையாளர் ஹைதர் அலியை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் நந்திவரம் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 29), அஸ்வின் (29), சுரேஷ் (29) மற்றும் சென்னை தரமணி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (30), பிரகாஷ் (26), ஆகியோரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் தலைமறாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நல்லதம்பி டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது.

    ஊட்டி,

    ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 30). இவர் அங்கு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் நல்லதம்பியின் சகோதரி விபத்தில் சிக்கியதால், அவரை பார்ப்பதற்காக பெற்றோருடன் உடுமலைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லதம்பி உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரூ.2 லட்சம் நகைகள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் திருட்டு போனது. இதுகுறித்து அவர் புதுமந்து போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஊட்டி தலைகுந்தாவை சேர்ந்த டிரைவர் சாகுல் ஹமீது என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சப் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
    • 68 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை,

    கோவையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி அதனை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்துள்ளது.

    இதனை கட்டுப்படுத்த மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பெரியகடை வீதி போலீசாருக்கு புல்லுக்காட்டில் போதை மாத்திரைகளை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனை அடுத்து சப் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருமால் வீதியை சேர்ந்த சேக் முகையதீன்(33), ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது நவாஸ்(23) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அப்போது முகமது நவாஸ் போலீசாரிடமிருந்து தப்புவதற்காக தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றார்.

    உடனடியாக அவரை போலீசார் மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சேக் மொய்தீன், முகமது நவாஸ் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.அவர்களிடம் இருந்து 68 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரைட்டான்பட்டி தெருவில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ரைட்டான்பட்டி பகுதியில் 30 சென்ட் இடத்தில் கடந்த 1983-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவியர் விடுதி கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. அதே பகுதியில் 18 சென்ட் இடத்தில் புதிதாக விடுதி கட்டுவதற்கு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடம் குறிப்பிட்ட சமுகத்தினருக்கு சொந்தமான இடம் என்று கூறி, அங்கு சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுகுறித்து 2 முறை வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் அந்தப்பகுதியில் சமுதாய கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் போராட்டம் நடத்தப்படும் என ஆதித்தமிழர் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில், அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட வந்த ஆதித்தமிழர் கட்சித்தலைவர் ஜக்கையன் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து ரைட்டான்பட்டி தெருவில் அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விருதை வசந்தன் உள்ளிட்ட148 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • 188 மது பாட்டில்கள் பறிமுதல்
    • விற்பனையில் ஈடுபட்டவர் கைது

    திருச்சி,

    திருச்சி சிறுகனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருவளூர் டாஸ்மாக் மது பான கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதை அறிந்து, அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சிறுகனூர் மேற்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன்(வயது 56) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 188 மது பாட்டில்கள், 6 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

    நாகர்கோவில் :

    திக்கணங்கோடு தாரவிளையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 46), தொழிலாளி. இவர் மீது இரணியல் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

    எனினும் போலீசார் எச்சரிக்கையை மீறி ஜெயபால் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

    இதனை தொடர்ந்து இரணியல் போலீசார், ஜெயபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதே போல காட்டாத்துறையை சேர்ந்த சஜிவன்ராஜ் என்பவரை தக்கலை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இவர் மீது மார்த்தாண்டம் மற்றும் தக்கலை போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    • காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்தனர்,
    • அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி விற்ற வாலிபரை, நகர போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    காரைக்கால் நகர போலீஸ் நிலைய சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் மாலை, காரைக்கால் ஒப்பிலா ர்மணியர் கோவில் குளத்து மேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, போலீசாரை பா ர்த்ததும், அங்கு நின்றிருந்த ஐயப்பன்(வயது30) என்பவர் ஓடத்துவங்கினார். போலீசார் அவரை விரட்டி பிடித்து சோதனை செய்தபோது, சட்டை பாக்கெட்டில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்ரி சீட்டுகளை வைத்திருந்தார். அவரது செல்போனிலும், 3 எண் லாட்ரி சீட் எண்கள் இருந்தது. விசாரித்ததில், 3 எண் லாட்ரியை விற்றதை வாலிபர் ஒப்புகொண்டார். தொடர்ந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு செல்போன், ரூ.2230 ரொக்கம் மற்றும் 3 எண் துண்டு சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

    • 141 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல்
    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கடைகளில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்குந்தபுரம் கலியபெருமாள் மகன் பிரபாகரன் வீட்டில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றதாக இவரை கைது செய்து அவரிடமிருந்து 141 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 17-ந்தேதி அவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டனர்.
    • இவர்கள்தான் வனிதாவின் தாலி செயினை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சத்யநாராயணா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் தனது வீட்டில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டனர்.

    தண்ணீர் பாட்டிலை எடுக்க வனிதா திரும்பிய போது, அந்த நபர்கள் திடீரென வனிதாவை கீழே தள்ளி, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலி செயினை பறித்து க்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த வனிதா, இது குறித்து ஓசூர்அட்கோ போலீசில் புகார் செய்தார்.

    புகாரை பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில், நேற்று மாலை, ஓசூர்- நல்லூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் போது அந்த வழியாக ஒருமோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் சந்தாபுரா அருகேயுள்ள பன்னஹள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் (31) மற்றும் தும்கூரு அருகே கொரட்டஹள்ளியை சேர்ந்த சிவகுமார்(31) என்பதும், இவர்கள்தான் வனிதாவின் தாலி செயினை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, தாலி செயினையும் பறிமுதல் செய்தனர்.

    ×