search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் பகுதிகளில் பொது இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தமாறன் உள்ளிட்ட போலீசார் சித்தன்னவாசல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்தன்னவாசல் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 45), பழனி (26), செல்வம் (26), கார்த்திகேயன் (30), அன்னவாசல் மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன் (42), தச்சம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டைகள், ரூ.600 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.
    • பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    விருதுநகர்:

    கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலத்தின் எச்சம் மருந்துகள், வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன் படுத்தப்படுகிறது. இவைகள் சர்வதேச அளவில் அதிக அளவில் விலை போகிறது. எனவே திமிங்கல எச்சம் கடத்துவது அதிகரித்து உள்ளது.

    குறிப்பாக கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திமிங்கல எச்ச கடத்தல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நெல்லையில் இருந்து விருது நகருக்கு திமிங்கல எச்சம் கடத்தப்படுவதாக மதுரை வன உயிரின தடுப்பு பிரிவு துறைக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மதுரை வன காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையை சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் தலைமையிலான வனத்துறையினர் விருதுநகரில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். சில இடங்களில் வாகன சோதனையும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் தர்மராஜ் (வயது 45) என்பவர் திமிங்கல எச்சம் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    தர்மராஜ் கொடுத்த தகவலின்பேரில் விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் அவரது நண்பர் மனோகரன் என்பவர் நடத்திவரும் பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதை பறிமுதல் செய்த வனத்துறையினர் தர்மராஜ், மனோகரன், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பால்பாண்டி, நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், பத்ம குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திமிங்கல எச்சம் எங்கிருந்து யாருக்காக கடத்தப்பட்டது? தொடர்பாக வனத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளநோட்டுகள், ஸ்கேன் எந்திரம், கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார்.

    ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
    • வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவரை தாக்கி கொண்டனர்.

    பாப்பிரெட்டிபட்டி,

    தருமபுரி மாவட்டம்,பொம்மிடி அருகே உள்ள நத்த மேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (70). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகன் பெரியசாமி (43), இளைய மகன் சக்திவேல் (41). இருவருக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவரை தாக்கி கொண்டனர். இவர்களை அவர்களது உறவினர்கள் தடுத்தனர். ஆனால் 2 பேரும் தொடர்ந்து தாக்கி கொண்டனர்.

    இதில் எதிர்பாராதவிதமாக சக்திவேல் அவருடைய அண்ணன் தலையை கட்டையால் அடித்து உடைத்தார்.பலத்த காயமடைந்த பெரியசாமி தலையில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் ெபாம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.        

    • ஹரிஷ் ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • 17 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

    சென்னை:

    ஏழுகிணறு, மிண்ட் தெருவில் வசித்து வரும் ஹரிஷ், வ/17, என்பவர் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று காலை சுமார் 5.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஏழுகிணறு, அம்மன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கையில் செல்போன் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஹரிஷ் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ஹரிஷ் ஏழுகிணறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசார் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காமேஷ் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனும் பிடிபட்டார். அவர்களிடம் இருந்து 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட காமேஷ் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட் டார். 17 வயது சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

    • 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க கடைக்கு வந்துள்ளார்.
    • வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள மாப்பிள்ளைகுப்பத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் அதே பகுதியில் பள்ளிக்கூடத்திற்கு எதிரே ஒரு பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு அதே ஊரைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி குளிர்பானம் வாங்க வந்துள்ளார்.

    குளிர்பானம் வாங்க வந்தபோது கடையில் பொதுமக்கள் யாரும் இல்லாததால், துணிச்சல் அடைந்த கார்த்திகேயன் சிறுமியை கடைக்கு உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.

    இதில் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடி தனது வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சிறுமியின் தாய் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

    • பிரகாஷ் என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்
    • குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்கலாம்

    கோவை,

    கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 38) என்பவரை கஞ்சா விற்பனை செய்ததாக, பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி உத்தரவிட்டார்.

    இதன்படி பிரகாஷ் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறுகையில், கோவை மாவட்டத்தில் இதுவரை 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இவர்களில் 7 பேர் கஞ்சா குற்றவாளிகள். எனவே கோவை மாவட்டத்தில் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர் குறித்த தகவலை 9498181212, 77081 00100 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • நடுரோட்டில் பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது.

    மதுரை

    தல்லாகுளம் வல்லபாய் மெயின் ரோட்டில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையிலும் வாலிபர்கள் சிலர் நடு ரோட்டில் பைக் ரேசில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தல்லாகுளம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆதிகுந்தகண்ணன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு சில வாலிபர்கள் பைக் ரேஸ் ஓட்டி கொண்டிருந்தது தெரியவந்தது. பைக் ரேசில் ஈடுபட்ட 8 வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் கிருஷ்ணாபுரம்காலனி சரவணன் மகன் தரனேஷ்(20), வாடிப்பட்டி தாலுகா ஜெமினிப்பட்டி ரமேஷ் மகன்அபினேஷ்(18), வில்லாபுரம் பரமேஸ்வரி அம்மன் தெரு சுரேஷ்பாபு மகன் அச்சுதன்(18) உள்ளிட்ட 8 பேர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
    • கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமண மண்டபம் அருகே மளிகை கடையில் போதை பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து புதுவை செல்லும் சாலை அனிச்சம் பாளையம் பாலிமர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக விழுப்புரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால சிங்கம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட தில் விழுப்புரம் மருதூர் எம்.ஆர்.கே தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 30), தனியார் மண்ட பம் எதிரே உள்ள மளிகை கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 382 பாக்கெட் போதை மற்றும் குட்கா பொரு ட்களை கைப்பற்றிய விழு ப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சதாம் உசேனை கைது செய்தனர்.

    • வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
    • தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரில் 108 திவ்ய தேசயங்களில் ஒன்றான காளமேக பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் மாலையில் சுவாமி-அம்பாள சட்டத்தேரில் பவனிவந்தனர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்புள்ள கலையரங்கில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இருதரப்பினரையும் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த நிலையில் மோதல் சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    அதனை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்தனர். அவர்களில் செந்தில்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 2 பேரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பலருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    ஒரு தரப்பினர் நடத்திய இந்த தாக்குதலால் திருமோகூரில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது. தாக்குதலில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் சேதமானது. தாக்குதலில் காயம் அடைந்த 3 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் ஏராளமானோர் வலியுறுத்தினர். அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். தாக்குதல் சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மனோஜ்பிரபாகரன், பிரபு, முகேஷ், ஆகாஷ், நேரு, மாதேஷ், சூரிய பிரகாஷ், அருண், ஸ்ரீகாந்த், வைரபிரகாஷ், அர்ஜூன், சாந்தகுமார், சிவா, ராேஜந்திரபாண்டியன், சந்துரு உள்ளிட்ட 24 பேர் மீது 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவர்கள் அனைவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்தவர்களில் 12 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஏற்காடு:

    ஏற்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமனின் மகள், அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தாகவும் அவர்களுக்கு வரதராஜன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்தே இருவருக்கும் தகராறு நிலவியது.

    இந்நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன் தனது வீட்டில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜன் வீட்டிற்கு சென்று தேடியதில் வரதராஜன் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த வடமன் அங்கு இருந்த பசுமாட்டை சுட்டு கொன்றுவிட்டு தலை மறைவானார்.

    இந்நிலையில் வரதராஜன் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரில் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக சுற்றி திரிந்த வடமன் ஏற்காட்டில் இருந்து தப்பி செல்வதற்காக கோட்டச்சேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஏற்காடு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    ×