search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்"

    • ஜன்னல் கம்பி வழியாக புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை
    • ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே இனயம் கடற்கரை கிராமம் நடுத்தெரு பகுதி 13-வது அன்பியத்தை சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 47).

    இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்ப வத்தன்று இரவில் வீட்டில் அனைவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஜாண்சன் கையில் கிடந்த ½ பவுன் மோதிரம் மற்றும் மொபைல் போன் மாயமாகி இருந்தது.

    மேலும் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தையும் காணவில்லை. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டி னுள் நுழைந்து திருடி யிருப்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டுபோன பொருட்க ளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மீனவர் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அசலாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது46).

    மீனவரான இவர் இன்று அதிகாலை லைட் ஹவுஸ் ஊராட்சிக்கு உட்பட்ட கரிமணல் எனும் இடத்தில் பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை அருகே மர்மமாக இறந்து கிடந்தார்.

    திருப்பாலைவனம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.
    • திடீரென மயங்கி நிலையில் கடலில் மூழ்கி கிடந்துள்ளார் கரைக்கு சென்ற போது இறந்து விட்டது தெரியவந்தது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே வல்லவன்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 54).

    இவர் நேற்று (புதன்கிழமை) காலை பைபர் படகில், மூன்று மீனவர்களுடன் சம்பா நண்டு பிடிக்க சென்றுள்ளார்.

    சுமார் 2 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில், சேகர் கடலில் இறங்கி சம்பா நண்டு பிடிப்பதற்காக வலையை இறக்கிக் கொண்டு இருந்துள்ளார். சேகருடன் வந்த மீனவர்கள் வேறு பக்கம் வலையை கடலில் இறக்கிக் கொண்டு இருந்தனர்.

    அவர்கள் படகுக்கு திரும்பிய நிலையில், சேகர் வலையை இறக்கிய பகுதியில் பார்த்த போது, மயங்கி நிலையில், கடலில் மூழ்கி கிடந்துள்ளார்.

    உடனடியாக சக மீனவர்கள் அவரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்து பார்த்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல்துறை ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சேகர் உடலை கைப்பற்றி, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று அதிகாலை 4 மணிக்கு செல்வமணி கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
    • அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56).

    இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

    செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.

    துறைமுகத்தில் 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார்.

    இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும் வழியில் படகு மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அருகில் தேடி உள்ளனர்.

    அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளது தெரிய வந்தது.

    இதனை எடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக செல்வமணி உடல் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கூட்டத்தில் மீனவர்கள், மீனவ அமைப்புகள் கலந்து கொண்டு மனுக்களை நேரில் வழங்கலாம்.
    • கோரிக்கைகளை தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    ராதாபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 11-ந் தேதி காலை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறை களால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் தே வைகள் அடங்கிய மனுக்களை மீனவர்கள், மீனவ அமை ப்புகள் கலந்து கொண்டு நேரில் வழங்கலாம்.

    மேலும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரி யாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர் களுக்கு அனுப்பி நட வடிக்கை எடுக்கப்பட்டு அதன் விவரம் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரி விக்கப்படும்.

    எனவே கோரிக்கைகள் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கூட்ட த்தில் கலந்து கொண்டு மனுக்கள் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டின் ஒரு அறையில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி
    • சுசீந்திரம் போலீசில், செல்வராஜின் மனைவி புகார் செய்தார்.

    கன்னியாகுமரி :

    சுசீந்திரத்தை அடுத்த பள்ளம் சுனாமி காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி விட்டது. நேற்று காலை திருமணமாகாத மகள், தனது தாயாருடன் தேவாலயம் சென்று விட்டார். வீட்டில் செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.

    சிறிது நேரம் கழித்து அவரது மனைவியும் மகளும் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பினர். அவர்கள் செல்வராஜை தேடிய போது காணவில்லை. இந்த நிலையில் வீட்டின் ஒரு அறையில் அவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசில், செல்வராஜின் மனைவி புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
    • மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் மாதந்தோறும் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடை பெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    எனவே மீன்வளத்துறை மற்றும் இதர அரசுத்துறை களால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக் களை குறைதீர்க்கும் கூட் டத்தில் மீனவர்கள் நேரில் வழங்கலாம். பிற அரசுத்து றைகள் சார்ந்த கோரிக்கை களை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரி யாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும்.

    கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் அடுத்தமாதம் நடைபெறும் மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • மனுக்களை வழங்கி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் மீனவர்களின் குறைகள் மற்றும் குறைகளை கேட்ட றிந்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். மீனவர்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கை களை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்க ளாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க கோருதல், மீனவர்கள் கடலில் இறந்ததற்கான இறப்பு நிவாரண தொகை பெற கோருதல், மீன்பிடித்தடை காலத்திற்கான உதவித்தொகை பெறுதல், பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ய கோருதல், மீனவர்களுக்கான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண உத்தரவி டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக மாற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

    பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவிகள் என தொடங்கி அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக உருவாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றனர். இதில் மீனவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மீனவர்கள் ஒவ்வொருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக உருவாக்குவதற்கு ஏதுவாக தனித்தனியாகவும், மீனவ சங்கம் சார்பிலும் மரக்கன்றுகளை கடலோர பகுதிகளில் நடுவதன் மூலம் மண் அரிப்பில் இருந்து காத்திடவும், சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார் சிவக்குமார், கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை
    • உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    கன்னியாகுமரி

    புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதி பாரதி தெருவை சேர்ந்தவர் ஆண்டனி (வயது59), மீனவர்.

    இவரது மனைவி உஷா, அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சீட்டு பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சீட்டு தொழிலில் உஷாவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.

    சுமார் ரூ.1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கேட்டு பலரும் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

    இதனால் உஷா தலைமறைவாகி வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இது போன்ற சம்பவங்களால் மனமுடைந்த அவரது கணவர் ஆண்டனி, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆண்டனி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி பகுதியை சேர்ந்த மீனவர் பாண்டி(வயது30). இவர் நேற்று முன்தினம் (20-ந் தேதி) மீன்பிடி வலை, டீசல் உள்ளிட்ட மீன்பிடி சாத னங்களை சிறிய நாட்டு படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்கு சென்றார்.

    பின்பு நடுக்கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் மீன்பிடி சாதனங்களை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது பாண்டி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கடலுக்குள் விழுந்தார். இதனை பார்த்த சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலுக்குள் குதித்து மீனவர் பாண்டியை தேடினர்.

    அவர் கடலுக்குள் விழுந்தது குறித்து கடலோர காவல்படை போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் நவீன ரோந்து படகில் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    கடலில் மூழ்கிய பாண்டியை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நீடித்தது. கடலோர காவல்படையினருடன் மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தேடி பார்த்தும் பாண்டி கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை தேடும் பணி இன்று 3-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நாட்டு படகு மற்றும் விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் தேடி வருகின்றனர். 3 நாட்களாகியும் பாண்டியை பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
    • ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் 35 மீட்டர் அளவு கொண்ட படகுகளை பதிவு செய்ய மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இந்திய கடலோர காவற்படை சார்பில் மீனவர் ஒருங்கிணைப்பு கூட்டம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. தலைமை தாங்கினார். தூத்துக்குடி நிலைய இந்திய கடலோர காவல்படை தளபதி வினோத் குமார் முன்னிலை வகித்தார்.துணை தளபதி சாஜூ செரியன், குளச்சல் மீன் துறை உதவி இயக்குனர் நடராஜன் ஆகியோர் பேரிடர் காலத்தில் மீனவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய உபகரணங்களை செயல்முறை மூலம் விளக்கி பேசினர்.

    தொழிலுக்கு செல்லும் போது கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை மீனவர்கள் எடுத்து செல்ல வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    அப்போது குளச்சல் விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், செயலாளர் பிராங்கிளின், நகர்மன்ற கவுன்சிலர் ஜாண்சன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், முன்னாள் தலைவர் ஆனந்த், மாநில காங்.செயற்ழு உறுப்பினர் யூசுப்கான், நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் சிபு ஆகியோர் கடலில் மாயமாகும் மீனவர்களை துரிதமாக மீட்க குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    குளச்சல், முட்டம், கன்னியாகுமரி ஆகிய பகுதியில் சுமார் 1000 விசைப்படகுகள் மீன் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை.ஆழ்கட லில் தங்கி மீன் பிடிக்கும் படகுகள் 35 மீட்டர் அளவு கொண்டவை.இந்த வகை படகுகளை பதிவு செய்யவும் மீன்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

    இதற்கு பதிலளித்து விஜய்வசந்த் எம்.பி. பேசியதாவது:-

    குமரி மாவட்ட கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரியில் விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் கடலோர காவல் படை நிலையம் அமைக்க வேண்டும் என கடலோர காவல் படையின் கூடுதல் இயக்குனரை சந்தித்து மனு அளித்துள்ளேன்.இவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.

    கூட்டத்தில் குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் ஆன்றனி, மாவட்ட காங்.துணைத்தலைவர்கள் முனாப், தர்மராஜ், அகில இந்திய இளைஞர் காங்.ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மீனவர் காங்.நிர்வாகிகள் ஜோசப்மணி, ஸ்டார்வின், லாலின், இளைஞர் காங்.நிர்வாகிகள் டைசன் ஜேக்கப், திங்கள்நகர் பேருராட்சி தலைவர் சுமன் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×