search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர்"

    • கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    நாகர்கோவில்:

    திருவனந்தபுரம் முட்டை தரை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி குப்பை கிடங்கில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் 2 கால்கள் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கு முகம் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். 2 கால்களையும் கைப்பற்றி உடல் பாகங்கள் எங்கே என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர் பாக நாகர்கோவில் பட்டகா சாலியன் விளையைச் சேர்ந்த ரமேஷ் (வயது 25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த நண்பர் ஒருவரை கொலை செய்து உடல்பாகங்களை திருவனந்தபுரம் பகுதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் மீது குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் ராஜாக்கமங்கலம், கோட்டார், போலீஸ் நிலை யங்களில் வழக்கு உள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    ரமேஷ் கொலை செய்ததாக கூறப்பட்ட அவரது நண்பர் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்தனர். ரமேஷ் கூறிய அவரது நண்பர் கடந்த இரண்டு மாதங்களாக மாயமாய் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.எனவே கொலை செய் யப்பட்டது அவரது நண்பர் சின்னமுட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் (வயது 27) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    போலீசாரிடம் ரமேஷ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்ப தாவது:-

    எனது தந்தை மணிகண்டன் கேரளாவில் வசித்து வருகிறார். என் மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. போலீசார் என்னை வழக்கு தொடர்பாக தேடினால் உடனே நான் கேரளாவிற்கு சென்று விடுவேன். சின்ன முட்டத்தைச் சேர்ந்த பீட்டர் கனிஷ்கர் எனது நண்பர் ஆவார். அவர் மீன்பிடிப்பதற்காக கேரளாவிற்கு வந்திருந்தார்.

    சம்பவத்தன்று நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன். பின்னர் கொலையை மறைக்க திட்டம் தீட்டினேன். துணி யால் அவரது உடலை மூடி வைத்திருந்தேன். பின்னர் அங்குள்ள இறைச்சி கடைக்காரர் ஒருவர் உதவியுடன் பீட்டர் கனிஷ்கர் உடலை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் வீசினேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இருப்பினும் போலீசார் கொலை செய்யப்பட்டது பீட்டர் கனிஷ்கர் என்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதில் கொலை செய்யப்பட்டது யார் என்பது இறுதி முடிவு செய்யப்படும்.

    பீட்டர் கனிஷ்கர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    • தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
    • குரூஸ் பர்னாந்துக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் .

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர தந்தை என்று அழைக்கப்படுபவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து. இவருக்கு தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா பகுதியில் மணிமண்டபம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் நகரின் மையப்பகுதியில் அமைக்காமல் இங்கு அமைப்பதற்கு மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக குருஸ் பர்னாந்து நற்பணிமன்ற தலைவர் ஹெர்மன் கில்டு கூறியதாவது:-

    தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த குரூஸ் பர்னாந்துக்கு நகரின் ஒதுக்குப்புறத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு மீனவ மக்களின் மனதை வேதனைப்படுத்தி உள்ளது. அனைத்து சமுதாய மக்களுக்கும் தொண்டு ஆற்றிய அவருக்கு நகரின் மத்திய பகுதியில் மணிமண்டபம் அமைத்து கவுரவப்படுத்த வேண்டும் . இல்லை என்றால் கடற்கரை பகுதி மீனவமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்றம் சார்பில் அனைத்து மீனவ அமைப்புகளுடன் ஆலோசனை தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற எட்வின் பாண்டியன், தலைவர் ஹெர்மன் கில்டு, செயலாளர் சசிக்குமார், பொருளாளர் டெரன்ஸ், வளன் ஆண்ட்ரூஸ், லூர்துசாமி, ராஜ், அலாய், அமலநாதன், கென்னடி, சாக், ஜெபி, பரதநலச் சங்கம் பொதுக் செயலாளர் கனகராஜ், இக்னேஷியஸ், ரூஸ்வால்ட், ராஜேந்திரன், முன்னாள் துணை மேயர் சேவியர், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அகஸ்டின், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.
    • அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்து 7 பேரும் நீரில் மூழ்கினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ந்தேதி கட்டுமான பொருட்களை ஏற்றிக் கொண்டு எஸ்தர் ராஜாத்தி என்ற தோணி ஒன்று மாலத்தீவுக்கு சென்றது.

    அதில் தூத்துக்குடி தருவை மைதானம் அருகே உள்ள லைன்ஸ்டவுன் 6-வது தெருவை சேர்ந்த ஸ்டான்லி சாக்ரியாஸ் (வயது 59), சகாய கிளிப்பட் ஜான் பெக்மான்ஸ், தொன்மை ஜேசு, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன் தாசன் பெர்ணான்டோ, ஆண்டன் வாஸ்டின் பெர்ணான்டோ, லிங்கராஜ் முனியசாமி ஆகிய 7 பேர் பயணம் செய்தனர். மாலத்தீவுக்கு அருகே சென்றபோது அதிக காற்று வீசியதால் தோணி கவிழ்ந்ததில் பயணம் செய்த 7 பேரும் நீரில் மூழ்கினர்.

    இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஸ்டான்லி சாக்ரியாஸ் மட்டும் உயிரிழந்தார். அவரது உடலை கடலோர காவல் படையினர் மீட்டு மாலத்தீவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மீட்கப்பட்ட 6 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி வந்தனர்.

    இந்நிலையில் கடலில் மூழ்கி பலியான ஸ்டான்லி சாக்ரியாஸ் உடல் மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து வானம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு பிரேத பரிசோதனை நடைபெற்றது. இன்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனைவி மரணத்தின் வேதனை மற்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு புதூரைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 85). இவர் மகன் ஜாண் பீட்டருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வின்சென்ட் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 4 முறை அறுவை சிகிச்சை செய்தும் நோய் குறையவில்லை. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வின்சென்ட் மனைவி இறந்து விட்டார். மனைவி மரணத்தின் வேதனை மற்றும் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வின்சென்ட் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் ஜாண்பீட்டர் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.
    • மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வே தாரண்யம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது.

    இதனால் வயல்களில் ஒரு அடி தண்ணீர் தேங்கி உள்ளது.

    இதனால் மானாவாரி பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்ய முடியமாலும், நேரடி நெல் விதைப்பு செய்ய முடியாமல் உள்ளனர்.

    தொடர்ந்து பெய்துவரும் மழையால் வேதாரண்யத்தில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது.

    அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு,கடிநெல்வயல், பகுதியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் உப்பு ஏற்றுமதி பணியும் அடியோடு பாதிக்கபட்டுள்ளது.

    மழையால்சுமார் 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குசெல்லவில்லை.

    தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது விட்டுவிட்டு மழை பெய்ததால்வியாபாரம் பாதிக்கப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    • மீனவர் தேவதாசனுக்கு மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
    • மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ள மேல குறும்பனையை சேர்ந்தவர் தேவதாசன் (வயது40). இவர் கடந்த 18-ந்தேதி குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையில் சிக்கி மாயமானார். அவரை கடந்த 3 நாட்களாக போலீசாரும், உறவினர்களும் தேடி வந்தனர்.மரைன் போலீசார் தூண்டில் வளைவு கற்களுக்கு இடையேயும் சென்று தேடினர்.

    இந்நிலையில் மாயமான மீனவ ரின் லுங்கி கடல் அலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. இதனால் அவர் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என குடும்பத்தினர் பீதியடைந்தனர். இந்நிலையில் தேவதாசன் உடல் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குளச்சல் துறைமுக பகுதியில் மிதந்து சென்றது.

    இதனை விசைப்படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் பார்த்து கரையில் சோகமாக அமர்ந்திருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மீனவர்கள் வள்ளத்தில் சென்று அவரது உடலை மீட்டு கரை சேர்த்தனர்.

    பின்னர் மரைன் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேவதாசன் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலில் மாயமாகி பலியான மீனவர் தேவதாசனுக்கு ஜெகதா என்ற மனைவியும், ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

    • காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர்.
    • தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    கன்னியாகுமரி, ஆக.12-

    தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம் சரியான முறையில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடிக்கப்பட்டதால் துறைமுக முகத்துவாரத்தில் அடிக்கடி கடல்சீற்றத்தில் சிக்கி படகுகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    இதனை சீரமைக்க கோரி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மீனவ மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து மறு சீரமைப்புக்காக ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதுவரை எந்த பணிகளும் துவங்காமல் துறைமுக முகத்துவாரம் அப்படியே கிடக்கிறது.

    இதற்கிடையில் கடந்த ஒரு சில வாரங்களாக தொடர் விபத்துகள் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்டு வந்தது. ஒரே நாளில் பல படகுகள் கவிழ்வதும், உடைந்து சேதமடைவதும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நாட்டு படகு ஒன்று துறைமுக முகத்துவாரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் படகில் இருந்த பூத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த சைமன் (வயது 48) என்ற மீனவர் பலியானார். இதை தொடர்ந்து பூத்துறை மீனவ கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மேலும் போராட்டம் முடிவுக்கு வரும் வரையிலும் துறைமுகத்தில் மீன் இறக்குதல் உள்ளிட்ட எந்த பணியும் செய்வதில்லை எனவும், இனயம், தூத்துர் மண்டலத்தை சேர்ந்த 15 மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணிப்பது எனவும், பெரு நிறுவனங்கள் உட்பட கடைகள் அனைத்தும் அடைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

    இதையடுத்து சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் பொது மக்களுடன் ராஜேஷ்குமார் எம். எல்.ஏ. மீனவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று உடனடியாக துறைமுக பணி ஆரம்பிக்கப்படும் என மீன்வளத் துறை இணை இயக்குனர் எழுத்து பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகத்தில் பணிகள் தொடங்க அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்தனர்.

    காலையில் கிரேன் முலம் துறைமுக அலை தடுப்பு சுவர் பழுதடைந்த பகுதியில் இருந்து கற்களை அகற்ற தொடங்கினர். தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் வரும் 10 நாட்களுக்கு பணிகள் சிறிது தாமதமாக நடைபெறும் எனவும், அதன் பிறகு முழு வீச்சில் பணிகள் தொடரும் என கூறினர்.

    • ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.
    • இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதவது,

    கடந்த 10ம்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைப்படுத்தி உள்ளனர்.

    இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் அவர்களுக்கு உதவியாக இந்தியா பல்வேறு நிதி உதவிகள், பெட்ரோலிய பொருட்கள், மருந்து பொருட்களை வழங்கி உதவிகரமாக உள்ளது.

    இப்படிப்பட்ட சூழலிலும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்கிறது. இது தொடர்பாக எந்த அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது. தமிழக முதல்-அமைச்சர் இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி அந்த மீனவர்களையும், படகுகள், மீன்பிடி வலைகளையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இலங்கையின் தற்போதைய சூழலை வைத்து கச்சத்தீவை மீண்டும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணம் இல்லை என்று ஆண்டனி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
    • படுகாயம் அடைந்த ஆண்டனி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதி 46-ம் அன்பியத்தை சேர்ந்தவர் வில்லாரிஸ் மகன் ஆண்டனி டைனிஸ் (வயது 46). மீனவர். சம்பவ தினம் ஆண்டனி கடற்கரை பகுதியில் நிற்கும் போது, அதே பகுதி ஒன்றாம் அன்பியத்தை சேர்ந்த அகஸ்டின் மகன் சுபாஷ் என்பவர் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார்.

    பணம் இல்லை என்று ஆண்டனி கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுபாஷ் தகாத வார்த்தைகள் பேசி, மரக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆண்டனி கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடல் சீற்றத்தில் எழுந்த ராட்சத அலையால் எதிரே கரையை நோக்கி வந்த ராஜ் என்பவரின் பைபர் கட்டுமரம் தூக்கி வீசப்பட்டது.
    • கட்டுமரம் மோதி பலியான மீனவர் ராசையனுக்கு அருள் செல்வி என்ற மனைவியும் 5 பிள்ளைகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் மரமடியை சேர்ந்தவர் ராசையன் (வயது 61).மீன்பிடி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் ஆல்பின்ஸ் என்பவருக்கு சொந்தமான பைபர் கட்டுமரத்தில் மீன் பிடிக்க சென்றார்.

    கட்டுமரம் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க புறப்பட்டு செல்லும்போது கடல் சீற்றத்தில் திடீரென எழுந்த ராட்சத அலையால் எதிரே கரையை நோக்கி வந்த மேல்மிடாலத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் பைபர் கட்டுமரம் தூக்கி வீசப்பட்டது. இந்த கட்டுமரம் ராசையன் சென்ற கட்டுமரம் மீது மோதியது. இதில் ராசையனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்ட ராசையன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அவரது சகோதரர் குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் சப் - இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் நவீன் விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலில் கட்டுமரம் மோதி பலியான மீனவர் ராசையனுக்கு அருள் செல்வி (54) என்ற மனைவியும் 5 பிள்ளைகளும் உள்ளனர்.

    • மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மண்டபம் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமான கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது வாகன விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பலியான மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பலியானவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணத்தையும் உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் கடல் அட்டை மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    • சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சூறைக்காற்று வீசி வருகிறது.

    மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசியதால் நாகர்கோவில் கோட்டார் ரெயில்வே பகுதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்ததை யடுத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, திருவட்டார், கன்னியாகுமரி, மார்த்தாண் டம் பகுதிகளி லும் சாரல் மழை இன்று பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.

    குமரி மாவட்டத்தில் கடல் அலையின் சீற்றம் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பும் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பூத்துறை, வள்ளவிளை, தூத்தூர், ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால் பகுதிகளில் இன்று காலையில் ராட்சத அலைகள் எழும்பியது. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதி சென்றன.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லா ததையடுத்து விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்களை பாது காப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். கன்னியாகுமரி, கோவளம், கீழமணக்குடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட் டது.

    ×