என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கிழிப்பு"
- நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது
- அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பேனர் கிழிப்புஇதனை தொடர்ந்து இன்று காலை விழா நடைபெறும் இடத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள் வந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்றது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர் . பேனரை கிழித்த மர்ம நபர்கள் யார் ? எதற்காக கிழித்தார்கள் என தெரியவில்லை. தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். மேலும் யார் பேனரை கிழித்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெட்டிச்சா வடி போலீஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையா?
- தக்கலையில் இன்று காலை பரபரப்பு
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இன்று காலை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷைஜாராணி (வயது 42), அவரது மகள் ஆதிரா (8) மற்றும் பத்மலதா(55), பிரியா (45), சாந்தா (65) ஆகியோர் பஸ்சில் புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மண்டைக்காடு செல்லும் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஷைஜாராணி கையில் யாரோ பிளேடால் கீறி உள்ளனர். இதனால் அவர் வலியால் கத்தினார்.
மேலும் அவரது மகள் ஆதிராவுக்கும் அதேபோல் காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்படவே, பஸ்சை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பிக்பாக்கெட் திருடர்கள் யாராவது, பேக்கை கிழிக்கும் போது தாய்-மகள் கைகளை தெரியாமல் கிழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பஸ்சில் வந்த ஓருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஷைஜாராணி, அவரது மகள் ஆதிரா சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாடிக்கார குட்டை தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். வக்கீல். இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சாமிக்கும்பிட சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் நகை, வெள்ளி குத்துவிளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
ரோசனை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 75). இவர் இன்று காலை திருமண விழாவுக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கினர்.
இதில் அவர் நிலை குலைந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.
படுகாயமடைந்த மூதாட்டி ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோன்று ராஜாராம் என்பவரது வீட்டை உடைத்து மர்மநபர்கள் புகுந்தனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
திண்டிவனம் கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனசேகரி. இவர் காற்று வாங்க வீட்டு முன்பகுதியில் தூங்கினார். இரவு நேரம் மர்மநபர்கள் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டில் இருந்த 500 கிராம் வெள்ளி மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
ஒரே நாளில் திண்டிவனம் பகுதியில் 4 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியதால் பரபரப்பு ஏறபட்டது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்