search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231346"

    • குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பு
    • குமரி-கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, போதை பொருள்கள், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருவதாலும் மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவதாலும் அதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குமரி-கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    போதைப் பொரு ட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருபவர்களை போலீசார் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் உள்ள ஒரு பிரபல மொத்த விற்பனை கடை மற்றும் குடோனில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு மூட்டை மூட்டையாக 200 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பணியில் இருந்த மார்த்தாண்டத்தையடுத்த நெல்வேலி ஓச்சவிளையை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 49), வீயன்னூர் செவரக்கோட்டை முருக தாஸ் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக் அதிக அளவில் விற்பனையாவதாக, சுகாதாரத்துறை மருந்து கண்காணிப்பு பிரிவுக்கு புகார்.
    • ஒரே நேரத்தில் 5 மி.லி.,க்கு அதிகமாக உட்கொண்டால், போதைதருவது போல் இருக்கும்.

    திருப்பூர் :

    இருமலுக்கு பரிந்துரைக்கப்படும் 'டானிக்'கை,சிலர் போதைப்பொருள்போன்று பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருப்பூரில் உள்ள மருந்துக்கடைகளில் அதிகாரிகள் திடீர்ஆய்வு மேற்கொண்டனர்.வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக் திருப்பூரில் அதிக அளவில் விற்பனையாவதாக, சுகாதாரத்துறை மருந்து கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து,அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு மற்றும் பல்லடம்ரோடு தென்னம்பாளையம், காட்டுவளவு ஆகியபகுதிகளிலுள்ள மருந்துகடைகளில், தெற்குபோலீஸ் உதவி கமிஷனர்கார்த்திகேயன், மாவட்டமருந்துகள் கள ஆய்வாளர்கள் ராமசாமி, மகாலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்துபோலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், "இருமலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருந்து, கடைகளில் எவ்வளவு இருப்பு வைத்துள்ளனர். பில்களை பராமரிக்கின்றனரா என ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.யாராவது மீண்டும் மீண்டும் அதே மருந்தை கேட்டுவந்தாலோ, கூடுதலாகவாங்க முனைந்தாலோ தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    மருந்துகள் கள குழுவினர் கூறுகையில்,இந்தமருந்து, டாக்டர்கள் பரிந்துரைக்கக்கூடியது தான்.ஆனால் ஒரே நேரத்தில் 5 மி.லி.,க்கு அதிகமாகஉட்கொண்டால், போதைதருவது போல் இருக்கும். இந்த போதைக்காக யாராவது கூடுதலாக மருந்துகள் வாங்கி சென்று உள்ளனரா எனதொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்என்றனர்.

    • 20 நாட்களில் 311 பேர் பாதிப்பு
    • மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொரோனா சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

    குறிப்பாக முன்சிறை திருவட்டாறு ஒன்றியங்களில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. தற்போது நாகர்கோவில் பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக தினமும் ஐந்துக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவில் மாநகரில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட வர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து கொேரானா சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களாக 200 ேபருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று 839 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று மாவட்டம் முழுவதும் பரிசோதனை மேற்கொண்டு அதில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் 34 பேர் பெண்கள் 18 பேர் ஆண்கள் ஆவார்கள். இந்த மாதத்தில் இதுவரை 311 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 19 ஆயிரத்து 727 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது.
    • சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்கெட்டில் சுமார் 4ஆயிரம் கடைகளில் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகை பொருட்கள் மொத்தமாகவும், சில்லரையிலும் வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் மினி வேன்கள் மூலம் காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    தினசரி ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்லும் கோயம்பேடு மார்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பரவலின் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் அதேபோல் மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்த சில்லரை வியாபாரிகள், மளிகை மற்றும் காய்கறி கடைக்காரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்த சந்தை பின்னர் 5 மாத இடை வெளிக்குப் பிறகு படிப்படியாக திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோயம்பேடு மார்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை அங்காடி நிர்வாக குழு தீவிரப்படுத்தியுள்ளது.

    அதன்படி மார்கெட் வளாகத்தில் முககவசம் அணிவது, கடை முன்பு சாணிடைசர் வைப்பது, சமூக இடைவெளி கடை பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை வியாபாரிகள் கடை பிடிக்க வேண்டும் என்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.

    மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படுவதையும் தீவிரமாக கண்காணித்து சரி செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் மற்றும் மார்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் அபராதம் விதிக்கவும் அங்காடி நிர்வாக குழு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடந்த வாரம் முதல் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கடை நடத்தும் வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மார்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 7நாட்களில் இதுவரை 1000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களின் விபரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர்.மேலும் மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்களின் பட்டியலும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:-

    மார்க்கெட்டில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஏராளமான வியாபாரிகள் ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர் மேலும் வியாபாரிகள், கடை ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவ்வாறு ஒத்துழைப்பு தராத, விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டல சுகாதார அதிகாரி கோபால கிருஷ்ணன் கூறும்போது:-

    கோயம்பேடு மார்கெட்டில் கடந்த வாரம் முதல் கொரோனா பரிசோதனையை தொடங்கியுள்ளோம் தினசரி 150 முதல் ௨௦௦ பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பூ மார்க்கெட்டில் இருந்து தொடங்கியுள்ள பரிசோதனை வரும் நாட்களில் பழம், காய்கறி மற்றும் மளிகை மார்க்கெட் என விரிவு படுத்தப்படும் என்றார்.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
    • நேற்று மாவட்ட முழுவதும் 659 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. முஞ்சிறை ஒன்றியத்தில் 11 பேரும், குருந்தன்கோடு, திருவட்டார் ஒன்றியத்தில் தலா 4 பேரும் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் ஒருவரும் தக்கலை ஒன்றியத்தில் 6 பேரும், நாகர்கோவில் மாநகரில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. நேற்று மாவட்ட முழுவதும் 659 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை குமரி மாவட்டத்தில் 19537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    • சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து
    • ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.

    அங்குள்ள குருசடி எதிரே செல்லு்ம்போது தாவூரை சேர்ந்த ரெங்கன், குன்னங்காட்டை சேர்ந்த பிரதீஸ், பிரமேன் அழகன்பாறை ஆன்றனி ஜோசப்ராஜ், ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிறு பிளாஸ்டிக் பைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்
    • 40 பிளாஸ்டிக் பைகளில் 840 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

    கன்னியாகுமரி :

    கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கேயன் ஆகியோர் ரேசன் பொருட்கள் கடத்துவதை தடுக்கும் வகையில் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    கொட்டில்பாடு பகுதியில் செல்லும்போது அங்கு ஒரு தென்னந்தோப்பில் மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் பைகளில் கேரளாவுக்கு கடத்தி செல்ல ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.உடனே குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர்கள் மோகன் ஜோஸ்லின், தேவராஜ் ஆகி யோர் உதவியுடன் அரிசி மூட்டைகளை மீட்டனர். 40 பிளாஸ்டிக் பைகளில் 840 கிலோ ரேசன் அரிசி இருந்தது.

    பின்னர் அவை உடையார்விளையில் உள்ள அரசு நுகர்வோர் வாணிபக் கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.

    • மானாமதுரையில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை சிப்காட் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முகமது தாரிக் மற்றும் காவலர்கள் சுந்தர், ரமேஷ் ஆகியோர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருச்சுழியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த னர். அதில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 1200 போலி மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பட்டுக்கோட்டையை சேர்ந்த ஓட்டுநர் கார்த்திகேயன், ஜெயவீரபாண்டியன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தப்பியோடிய மகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான இருவரிடமும் மதுவிலக்கு தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாண்டி யன், தலைமை காவலர் மலையரசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.
    • நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

    புதுச்சேரி:

    கோவிந்தசாலை-கண்டாக்டர் தோட்டம் பகுதியில் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    புதுவையில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ரவுடிகள் தங்கள் எதிரிகளை வெடிகுண்டு வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    மேலும் சிறு, சிறு பிரச்சினைகள் இருந்தால் கூட ரவுடிகள் அதனை முன் விரோதமாக கருதி எதிராளிகளை கொலை செய்து வருகின்றனர்.

    குறிப்பாக ரவுடிகள் சிறு வயது இளைஞர்களை தங்களது கூட்டாளிகளாக மாற்றி அவர்களுக்கு மது, கஞ்சா போன்றவற்றை வழங்கி அவர்கள் மூலம் வஞ்சம் தீர்த்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அத்திபூத்தாற் போன்று வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்து வந்த நிலையில் தற்போது வெடிகுண்டு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

    சித்தர்கள் வாழ்ந்து புண்ணிய பூமியாக இருந்த புதுவை தற்போது கொலை நகரமாக மாறி விட்டது.

    நாள் தோறும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு என குற்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது.

    மாலைப் பொழுதில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அஞ்சும் நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்த புதுவை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு ரவுடிகளை கைது செய்தாலும் புதிது, புதிதாக ரவுடிகள் உருவாகிறார்கள்.

    அவர்களை ஊருக்குள் நுழைய விடாமல் தடை விதிக்கப்பட்டாலும் ஒரு சில நாட்கள் மட்டும் ரவுடிகள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து விட்டு மீண்டும் தங்களது கைவரிசையை காட்டுகின்றனர்.

    இந்த நிலையில் கண்டாக்டர் தோட்டம், கோவிந்தசாலை மற்றும் டி.வி. நகர் பகுதிகளில் ரவுடிகள் வீடுகளில் தங்கி இருப்பதாக தகவல் வந்ததின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுபம்கோஷ், வம்சித ரெட்டி ஆகியோர் தலைமையில் அதிரடி போலீசார் மற்றும் பெரியக்கடை, ஒதியஞ்சாலை போலீசார் இன்று காலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை 2 மணி நேரம் ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 6 ரவுடிகள் போலீசாரின் சோதனையில் சிக்கினர். மேலும் ஒரு ரவுடியின் வீட்டில் சாராயமும் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த ரவுடியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். அதே வேளையில் ரவுடிகளின் வீடுகளில் எந்த ஆயுதமும் சிக்கவில்லை. போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் மற்ற ரவுடிகளிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

    ×