என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மீண்டும்"
- சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா.
- கொரோனா தொற்று மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது வேகம் எடுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 22-ந் தேதி 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 23-ந் தேதி தொற்று எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. நேற்று மேலும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
தொற்று பாதிபபு ஏற்பட்டவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே 48 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று 4 பேர் வீடு திரும்பினர். இதனால் மேலும் 55 பேர் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இனி வரும் நாட்களில் கொேரானா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொது மக்கள் முககவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- கொடுமுடி அருகே இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டி தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே சுள்ளிமடை பகுதியில் இருந்து குதிரைக்கல் மேடு பகுதி வரை கீழ்பவானி வாய்க்கால் செல்கின்றது. இந்த வாய்க்காலில் சுமார் 12 அடியில் ஒரு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்து தான் விவசாய நிலங்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சென்று பாசனம் செய்து வந்தார்கள்.
மேலும் பள்ளக்காட்டூர், வெட்டுக்காட்டூர், ராசா ம்பாளையம், பழனியாண்ட வர் கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாய நிலத்துக்கு செல்பவர்கள் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்கள் பயன்படுத்தி வந்த பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனை தெடர்ந்து பொதுப்பணித் துறை ஊழியர்கள் பாலத்தை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு இடித்து அடைப்பை எடுத்து சரி செய்து விவசாயத்திற்கு தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்தனர்.
இடிக்கப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டித் தர இப்பகுதி மக்களும், விவசாயிகளும் பல முறை தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் இதுவரை இந்த பாலம் கட்ட எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொது மக்களும், விவசாயிகளும் நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது.
இதனால் பொதுமக்கள் தொடர்ந்து அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக இடிக்கப்பட்ட பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வைத்து உள்ளனர்.
மேலும் பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்