search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232214"

    • 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
    • உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் பூஞ்சைகாடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 40).

    இவர் நேற்று ரெயில் நிலையத்தில் மங்களூர் செல்வதற்காக நின்று இருந்தார். அப்போது அங்கு வந்த ரெயில்வே போலீசார் வெங்கடாசலபதி வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் வெள்ளி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது மங்களுருக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்குரிய உரிய ஆவணம் இல்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் சேலம் வணிகவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து பார்த்ததில் 38 கிலோ வெள்ளி இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.24 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். உரிய வரி செலுத்தாமல் எடுத்து சென்றதால் அவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
    • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி சலங்கபாளையம், மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி பவித்ரா(22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணவர் கலையரசன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த பவித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது .
    • சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    கோபி:

    கோபி அருகே உள்ள கடத்தூர் புதுக்கொத்துகாடு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரகுமார் என்பவர் மகன் சுரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டு பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதுகுறித்து சைட்லைன் ஆலோசகர் ஈரோட்டை சேர்ந்த தீபக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். திருமணம் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.

    ஆனால் சிறுமியின் பெற்றோர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோவிலில் சிறுமிக்கும் சுரேஷ்குமாரு க்கும் திருமணம் செய்து வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த மணமகன் சுரேஷ் குமார், மணமகனின் பெற்றோர் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் சுரேஷ்குமார், அவரது தந்தை வீரக்குமார் சிறுமி யின் தாயார் ஆகியோர் கைது செய்து கோபி நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்த ப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சித்தோடு நால்ரோட்டில் செல்போன் கடையில் நூதன முறையில் பணம் மோசடி செய்த வாலிபர்.
    • இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    பவானி அருகே உள்ள சித்தோடு நால் ரோட்டில் அரவிந்தன் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு அடிக்கடி ஒரு வாலிபர் வந்து செல்வார்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அரவிந்தன் கடைக்கு அந்த வாலிபர் தனது வங்கி கணக்குக்கு ரூ.25 ஆயிரம் மணி டிரான்ஸ்பர் செய்ய சொன்னார்.

    இதனைத் தொடர்ந்து அரவிந்தன் ரூ.25 ஆயிரம் வாலிபரின்வங்கி கணக்கில் மணி டிரான்ஸ்பர் செய்தார். பின்னர் அரவிந்தன் போன் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணம் கேட்க முயன்றார்.

    ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இது குறித்து அரவிந்தன் சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் எடப்பாடி, புதுப்பாளையம் மணியன்காரன் வலசு பகுதியைச் சேர்ந்த சண்முகம் (27) என்பதும் இவர் மணி டிரான்ஸ்பர் மூலம் பண மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து சண்முகத்தை சித்தோடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சண்முகம் இது போல் யாராரிமாவது பணம் மோசடியில் ஈடுபட்டாரா? என போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சத்தியமங்கலம் அருகே சமையல் செய்தபோது தீயில் கருகி முதியவர் பலியானார்
    • இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா கூகலூர் அரிஜன காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (57). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து மாகாளி சத்தியமங்கலம் அடுத்த வேலாங்காட்டு தோட்டத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இவரை அவரது மகன் சரவணன் அவ்வப்போது சென்று பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் மாகாளி சமைத்துக் கொண்டிருந்த போது மாகாளி வேட்டியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு செல்லவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்த அவர் உடல்நலம் மோசமாகி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×