search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232253"

    • பரமத்திவேலூரில் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கட்டிசோறு கருப்பண்ணார்சு வாமி கோவில்உள்ளது.
    • இக்கோவிலின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கட்டிசோறு கருப்பண்ணார்சு வாமி கோவில்உள்ளது.இக்கோவிலின் 9-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கட்டிச் சோறு கருப்பண்ணார் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கட்டிச் சோறு கருப்பண்ணார்சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பண்ணார் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவ ருக்கு தை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவ ருக்கு தை மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி. மஞ்சள், திருமஞ்சனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடை

    பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் ,பரமேஸ்வரர், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ,அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .

    அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில் ,பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில் ,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில் ,வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில் ,பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு கால பைரவரை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .

    • பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோயில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

    கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் தை மாத அமாவாசை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் ,அரசாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு பால் ,தயிர், பன்னீர் ,இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ண சாமி கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன்,பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன்,கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும்

    ராஜா சுவாமி, பாண்டமங்க லம் மாரியம்மன், பகவதி

    அம்மன், கொந்தளம் மாரி யம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரி யம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன்கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது .இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மாவிளக்கு பூஜை, பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்று.
    • அக்னிசட்டி, காவடி, அலகு காவடி எடுத்து வீதிகள் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மேலக்கொட்டையூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி திருவிழாவையொட்டி கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது.

    இந்த கோவிலில் மார்கழி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு மார்கழி திருவிழாவையொட்டி மாவிளக்கு பூஜை பூச்சொரிதல் விழா நடைபெற்று.

    முக்கிய நிகழ்ச்சியான இன்று புறவழிச்சாலையில் காவேரி கரையிலிருந்து கொட்டும் மழையில் நாதஸ்வர மேளதாளங்கள் தாரை தப்பட்டையுடன் பால்குடம் வேல் சக்தி கரகம் அக்னிசட்டி காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.

    தொடர்ந்து மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்த சந்தன காப்பா அலங்கார மும் அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இரவு 7 மணி அளவில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் உற்சவர் ரிஷப வாகனத்தில் பதினெட்டாம்படி கருப்புசாமி வேலு மாரியம்மன் சக்தி கரகமும் சக்தி கரகமும் மேளதாளம் புழங்க இன்னிசைக் கச்சேரியுடன் வீதி உலா நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கிராம நாட்டாமைகள் ஊர் பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர். 

    • நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவில், கொப்பளம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி கடைசி நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    விஜயதசமி நாளை முன்னிட்டு ப‌.வேலூர் சுல்தான் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு கொலு மேடை அமைத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

    அதேபோல் பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மானை தரிசனம் செய்து அருள் பெற்றனர் .பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் ஆலயத்தில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்தி வேலூர் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் உள்ள மகா மாரியம்மன், செல்லாண்டியம்மன், பரமத்தி அங்காள பர மேஸ்வரி அம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், பொத்த னூர் மாரியம்மன், கொந்த

    ளம் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பச்சையம்மன் கோவில்களிலும் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் நந்திபெருமானுக்கு பூஜைகள் நடந்தது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பெருமானுக்கு ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனி ஆண்டவர் கோவிலில் உள்ள ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூரில் உள்ள ஈஸ்வரன் கோவில், ஜேடர்பாளையத்தில் உள்ளஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,எல்லை யம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் ஆடி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • பரமத்திவேலூர் பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் ஆலயத்தில் மாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் ஆகியோர்களுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்கா ரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பேட்டை மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் அபிஷேக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்தி வேலூர்:

    ஆனி மாத வளர்பிறை சஷ்டியினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகன், பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய கல்யாண சுப்பிரமணிய சுவாமிக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் ,தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை கல்யாண சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். இதில் சுற்றுவ ட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கோப்பணம் பாளையத்தில் உள்ள பாலமுருகன், நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், திரு வேலீஸ்வரர் கோவில் உள்ள முருகன், அணிச்சம் பாளையத்தில் வேல்வடியில் உள்ள முருகன், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவில் ,அய்யம்பாளையம் முருகன் கோவில்,ஆனங்கூர் மாரியம்மன் கோவில் உள்ள முருகன், பொத்த னூர் பச்சைமலை முருகன்,

    கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பாலப்பட்டி முருகன் கோவில், மோகனூர் பாலசு ப்பிரமணிய சுவாமி கோவில், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள அருணகிரிநாதர் மற்றும் பரமத்தி வேலூர்

    சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்க ளில் ஆனி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்திவேலூரில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதை தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திபெருமான், பரமேஸ்வரர், மாசாணியம்மன், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றும் வேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர்கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமான் மற்றும் நந்திகேஷ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×