search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண மோசடி"

    • சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.
    • நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் சிவசங்கர் பாபு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார்.

    திருப்பதி:

    குண்டூரைச் சேர்ந்தவர் சிவசங்கர் பாபு. இவர் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி 8 பெண்களை தனது வலையில் வீழ்த்தி திருமணம் செய்து மோசடி செய்துள்ளார்.

    இதுகுறித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 8 பெண்கள் ஐதராபாத் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    குண்டூரைச் சேர்ந்தவர் சிவ சங்கர் பாபு. இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் கூறி மேட்ரிமோனியில் பதிவிட்டிருந்தார்.

    குறிப்பாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை மட்டுமே மேட்ரிமோனி மூலம் கண்டுபிடித்து அவர்களுக்கு காதல் வலை வீசினார். அவர் கூறுவதை உண்மை என நம்பிய நாங்கள் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

    திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் எங்களிடமிருந்த விலை உயர்ந்த நகை பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்.

    இதே போல் பல பொய்களை சொல்லி 8 பெண்களை அவர் ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். சிவசங்கர் பாபு திருமணம் செய்து கொண்ட சில பெண்கள் தற்போது கர்ப்பமாக உள்ளனர்.

    8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை, பணத்தை ஏமாற்றிய சிவசங்கர் பாபு மீது குகட்பல்லி, ஆர்.சி.புரம், பாலாநகர், ராய்துர்கம் சைபராபாத் போலீஸ் நிலையங்களிலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அனந்தபூர் போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கடந்த மே 16-ந் தேதி கோண்டாப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வதைக் கண்டு அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆர்.சி.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பெண்களை சிவசங்கர் பாபு ஏமாற்றாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

    நான் அவன் இல்லை சினிமா பட பாணியில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணம் பறித்து மோசடி செய்துள்ளார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்.

    இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.

    நான் கோவையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறேன். நான் கல்லூரியில் படித்த போது அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த அரவிந்த் (வயது 26) என்பவர் வந்து இருந்தார். அப்போது எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டோம்.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தோம். எனது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் கோவைக்கு வரும் அரவிந்த் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை என்னுடன் ஜாலியாக இருந்தார்.

    ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக என்னுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நான் அரவிந்தை நேரில் சந்தித்து என்னை திருமணம் செய்யும்படி கூறினேன்.

    ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து விட்டார். எனவே என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் போலீசார் இளம்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அரவிந்த் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார்.
    • அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    விருதுநகர்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    அங்கு சித்ராவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே குடித்தனம் நடத்தி வந்தனர்.

    அஜித்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்தபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து கோவில்பட்டிக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சித்ரா மறுமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதில் தனது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவர் சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி, தான் பெண் பார்த்து வருவதாகவும், ஆகவே உங்களது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார். அதன்பேரில் அந்த வாலிபர் சித்ராவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    இருந்தபோதிலும் அந்த வாலிபர் சித்ராவின் செல்போனுக்கு பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பெங்களூருவில் உள்ள வங்கியில் வேலை பார்ப்பதாகவும், தனது தாய்-தந்தையுடன் இருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும் சித்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆவகே அவரை சந்திக்க கோவில்பட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு சித்ராவும் சம்மதித்துள்ளார். அதன்படி நேற்று காலை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்துடன் சித்ரா காத்திருந்தார்.

    அப்போது அவருடன் பேசிய வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தார். ஓட்டலுக்கு சாப்பிட செல்லலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சித்ராவின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அங்கு சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது அந்த வாலிபர் சித்ராவின் கழுத்தில் தங்கச்சங்கிலி என்று கூறி ஒரு செயினை அணிவித்தார். மேலும் சித்ரா அணிந்திருந்த செயினை கழற்றி தனது கழுத்தில் அணிந்து கொண்டார். பின்பு இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு திரும்பிச் சென்றனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தை அந்த வாலிபரே ஓட்டி வந்தார். சித்ரா வைத்திருந்த அவரது கைப்பை மற்றும் செல்போனை அந்த வாலிபர் வாங்கி வைத்துக் கொண்டார். திடீரென அவர் வாகனத்தில் பழுது இருப்பது போல் தெரிகிறது என கூறியிருக்கிறார். அதனை சரி செய்து வருவதாக கூறி சித்ராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. தனது செல்போனும் அந்த வாலிபரிடம் சிக்கிக் கொண்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் சித்ரா தவித்தார். சாத்தூரில் பலமணி நேரமாக காத்திருந்த சித்ரா, அந்த வாலிபர் தன்னை ஏமாற்றி நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனுடன் சென்றதை அறிந்தார்.

    பின்னர் வேறு வழியில்லாமல் அங்கு நின்ற முதியவர் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு பஸ்சில் தனது ஊருக்கு சென்றார். அங்கு சென்று அந்த வாலிபர் அணிவித்த நகையை சோதனை செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

    திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தனது நகை, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவைகளை பறி கொடுத்தது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார்.

    தன்னிடம் நூதன மோசடி செய்த வாலிபர் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் சித்ராவுக்கு தெரியவில்லை. இதனால் சித்ராவை ஏமாற்றிய வாலிபர் யார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிந்த ராஜசேகரன் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.
    • பணம் வாங்கிய பின்னர் மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

    சிங்கப்பூர்:

    தமிழகத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார்.

    இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார்.

    இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மல்லிகா ராமு (வயது 51) என்ற பெண் கோவிந்த ராஜசேகரை தொடர்பு கொண்டார்.

    தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தான் ஆஸ்திரேலியா நாட்டு கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் தனது போட்டோவை அனுப்பினால் 51 வயது என்பது வெளியில் தெரிந்து விடும் என நினைத்து தனது உறவுக்காரரான 25 வயதுடைய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டார்.

    இதை பார்த்த கோவிந்த ராஜசேகர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் தனது தாய்க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும் அதனால் உடனடியாக பணம் தேவைப்பபடுவதாகவும் மல்லிகா கோவிந்த ராஜசேகரிடம் கூறினார்.

    இதை நம்பி அவரும் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் அனுப்பியதாக தெரிகிறது. ஆனால் அதன் பிறகு மல்லிகா இவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். மேலும் திருமணத்தையும் தள்ளிப்போட்டபடி சென்றார்.

    இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்த ராஜசேகர் போலீசில் புகார் செய்தார். சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகா ராமுவை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டி திருமண மோசடியில் ஈடுப்பட்டதும் தெரிந்தது.

    இதையடுத்து மல்லிகா சிங்கப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 7 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கு முன்பும் மல்லிகா இதுபோன்று திருமண மோசடி செய்து பலரிடம் பணம் பறித்து போலீசில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×