என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தை விற்பனை"
- குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர்.
- இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்றுள்ளனர்.
ஈரோடு:
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தார். பின்னர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தார். ஈரோடு பஸ் நிலைய பகுதியில் தங்கி இருந்தார்.
அப்போது சந்தோஷ்குமார் என்பவருடன் நித்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் நித்யா கர்ப்பம் அடைந்தார். அப்போது சந்தோஷ்குமார், நித்யாவிடம் நமக்கு குழந்தை பிறந்தால் அதனை விற்று விடலாம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்ட சந்தோஷ் குமார் பெண் இடைதரகர்களான ஈரோட்டைச் சேர்ந்த செல்வி, ராதாமணி, பானு மற்றும் ரேவதி ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.
அவர்களும் நித்யாவின் பெண் குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு விற்க பேரம் பேசி உள்ளனர். இறுதியாக ரூ.4 லட்சத்துக்கு அந்தப் பெண் குழந்தையை நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதியிடம் விற்றுள்ளனர். பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையை விற்ற பின்னர் நித்யா குழந்தை நினைவாக இருந்துள்ளார்.
குழந்தையை விற்பனை செய்த பிறகு மனமில்லாமல் இருந்த நித்யா நடந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் நித்யாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரிடம் அவர் நடந்தவற்றை கூறினார். இதை அடுத்து சந்தோஷ் குமார், பெண் இடைத்தரகர்களான செல்வி, ராதாமணி, பானு, ரேவதி ஆகிய 5 பேரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை ரூ.4 லட்சம் கொடுத்து வாங்கிய நாகர்கோவில் தம்பதியினரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் மேலும் யாருக்கு தொடர்பு உள்ளது எனவும், வழக்கு குறித்த முழு விவகாரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பெண் குழந்தை விற்ற இச்சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.
- குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர் கிராமம், திம்பத்தியான் வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (32). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளி. இவரது மனைவி குண்டுமல்லி இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதுவரை இவர்கள் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
சேட்டு-குண்டுமல்லி தம்பதிக்கு அண்மையில் 6-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் குழந்தையை சேட்டு புரோக்கர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி செய்து உள்ளார். ஆனால் அவர் இந்த குழந்தையை சட்டபூர்வமாகவே தான் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறி, சேலத்தில் உள்ள குழந்தைகள் நல ஆணையத்தை தொடர்பு கொண்டு தகவல் கூறி உள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் சேட்டுவை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, ஏற்கனவே தனக்கு பிறந்த 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையை தலா ரூ. 1 லட்சத்துக்கு புரோக்கர்கள் மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்ததும், தற்போது பிறந்த பெண் குழந்தையை குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதனை அடுத்து சேட்டுவை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை விற்பனை செய்த விவரம் குறித்தும், அதற்கு துணையாக செயல்பட்ட புரோக்கர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.
- 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மனைவியின் தங்கை பாண்டீஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மதுரையைச் சேர்ந்த சிவக்குமார்-உமா மகேஸ்வரி தம்பதிக்கு விற்று விட்டதாக தகவல் பரவியது. மேலும் கடந்த 2 நாட்களாக குழந்தையை விற்ற பணத்தில் சங்கர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே அலப்பறை செய்து வந்துள்ளார்.
இது குறித்து சிறார் நலக்குழு மற்றும் வீரபாண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் சிறார் நலக்குழு களப்பணியாளர் வனராஜ் ஆகியோர் சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தனர். பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.
இருந்தபோதும் அவர்களது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் சங்கர் கூறிய விலாசத்தில் மதுரைக்கு விரைந்து சென்றனர். மதுரை அம்புஜம் நகரில் வசிக்கும் சிவக்குமார் (45) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (35) ஆகியோரை போலீசார் வரவழைத்து விசாரித்தனர். அவர்களும் முறையான பதில் அளிக்காததால் சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார்- உமாமகேஸ்வரி தம்பதி வேறு யாரிடமாவது இது போல வறுமையில் உள்ள தம்பதியிடம் குழந்தையை வாங்கி விற்பனை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
- கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மகப்பேறு அரசு டாக்டராக பணியாற்றி வந்தவர் அனுராதா.
இந்த நிலையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக அனுராதா மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து நாலு கால் மண்டபம் அருகே இருந்த தமிழரசு மருத்துவமனையில் டாக்டர் அனுராதா பயன்படுத்தி வந்த அறைகள் மற்றும் நாமக்கல் ரோட்டில் உள்ள அவருக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் கிளினீக் ஆகியவை அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
குழந்தை விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் அனுராதா கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட துணை இயக்குனர் திலகம் தலைமையில் நிர்வாக அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் அனுராதா பணியாற்றி வந்த திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அனுராதாவுக்கு சொந்தமான நாமக்கல் ரோட்டில் உள்ள கிளினிக் உள்ளிட்ட பகுதியில் சீல் வைக்கப்பட்ட அறைகளை சீலை அகற்றி அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சோதனை நிறைவடைந்த பிறகு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்ன? குழந்தை விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? மேலும் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
தற்போது குழந்தை விற்பனை விவகார வழக்கை மீண்டும் அதிகாரிகள் கையில் எடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
- குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தனமாரியம்மன் கோவில் சேர்ந்தவர் முனீஸ்வரன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (வயது 36). இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலி வேறு ஒரு வாலிபரிடம் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு அவருடன் சேர்ந்து வாழ்ந்ததால் மீண்டும் கர்ப்பம் ஆனார்.
பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துசுடலிக்கு கடந்த 18.10.2023 அன்று ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வறுமை, ஏற்கனவே இருக்கும் குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் சவால்களை கருத்தில் கொண்டு தற்போது பிறந்த ஆண் குழந்தையை வளர்ப்பதில் முத்துசுடலிக்கு சற்றும் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தகாத உறவில் குழந்தை பிறந்ததால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் நினைத்தார்.
இதையடுத்து குழந்தையை கொல்லும் எண்ணத்தை கைவிட்டு, தனது கணவர் மற்றும் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் குழந்தையை விற்றுவிட முத்துசுடலி முடிவு செய்தார். அதன்படி தனது விருப்பத்தை சேத்தூரை அடுத்த முகவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜேஸ்வரி (54) என்பவரிடம் கூறியுள்ளார்.
அவர் மற்றும் தென்காசி மாவட்டம் பெரும்பத்தூரை சேர்ந்த புரோக்கர் ஜெயபால், ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த செல்வி (30) ஆகியோர் மூலம் ஈரோட்டை சேர்ந்த தம்பிராஜன் மனைவி அசினாவுக்கு பிறந்த 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடந்த 25.10.2023 அன்று முத்துசுடலி விற்றுள்ளார்.
இதற்கிடையே வீடு திரும்பிய முத்துசுடலிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தாய்ப்பால் கொடுக்காததால் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் குழந்தை பெற்றெடுத்த ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளனர். முதலில் பல்வேறு மழுப்பலான பதில்களை கூறிய முத்துசுடலி, பின்னர் குழந்தையை விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் முத்துசுடலியிடம் விசாரணை நடத்தியபோது பிறந்த 7 நாட்களில் குழந்தையை ஈரோட்டை சேர்ந்த பெண்ணுக்கு விற்பனை செய்தது உறுதியானது. இதுபற்றி திருப்பதி மற்றும் விருதுநகர் உதவி மைய மேற்பார்வையாளர் விஸ்வநாதன் ஆகியோர் சேத்தூர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், முத்துசுடலியிடம் அதிரடியாக விசாரணை நடத்தினார். இதில் குழந்தையை வளர்க்க விருப்பம் இல்லாததால் ஈரோட்டை சேர்ந்தவருக்கு ரூ.3½ லட்சத்துக்கு விற்றதும் அம்பலம் ஆனது. அந்த பணத்தில் ரூ.2 லட்சத்தை குழந்தையின் தாய் முத்துசுடலிக்கும், மீதமுள்ள ரூ.1½ லட்சம் புரோக்கர் மற்றும் மற்ற பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாக கொண்டு குழந்தையை விற்ற முத்துசுடலி, முகவூர் ராஜேஸ்வரி, நாமக்கல் குமாரபாளையம் செல்வி, குழந்தையை வாங்கிய ஈரோடு அசினா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள புரோக்கர் ஜெயபாலை தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்கள் அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார் விருதுநகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து பராமரித்து வருகிறார்கள்.
ராஜபாளையத்தில் பிறந்த ஒரு வாரமேயான ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாலாமணி என்ற பெண் மூலமாக லோகாம்பாள் குழந்தை விற்பனை தொழிலை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
- தினேஷ்-நாகஜோதியின் பெண் குழந்தையை விற்பனை செய்வதற்கு இருவரும் சேர்ந்து முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தினேஷ்-நாகஜோதி தம்பதிக்கு 3-வதாக பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திருச்செங்கோடு அரசு டாக்டர் அனுராதா, புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகஜோதி-தினேஷ் தம்பதிகளின் வீட்டுக்கு சென்று குழந்தையை விற்பனை செய்ய லோகாம்பாள் ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் தருவதாக கூறியுள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போதுதான் குழந்தை விற்பனை தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது.
பாலாமணி என்ற பெண் மூலமாக லோகாம்பாள் குழந்தை விற்பனை தொழிலை கற்றுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து லோகாம்பாலின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் டாக்டர் அனுராதாவுடன் சேர்ந்து ஏற்கனவே ஆண் குழந்தையை சட்ட விரோதமாக விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.
தினேஷ்-நாகஜோதியின் பெண் குழந்தையை விற்பனை செய்வதற்கு இருவரும் சேர்ந்து முயற்சித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் குழந்தை விற்பனை விவகாரத்தில் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை விற்பனை கும்பலின் பின்னணியில் மனித உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள் குழந்தை விற்பனை வழக்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழகம் முழுவதும் குழந்தை விற்பனை சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரையும் பிடிப்பதற்கு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் பற்றியும் அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தை விற்பனை கும்பல், பச்சிளம் குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்திருக்கலாமோ? என்கிற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குழந்தை விற்பனை மற்றும் உடல் உறுப்புகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்களை கூண்டோடு பிடிக்க போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
- புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
- குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவரது மனைவி நாகதேவி (26). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகதேவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்று தருவதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் அனுராதா என்பவரும், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த புரோக்கர் லோகாம்பாள் என்பவரும் பேரம் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தினேஷ் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் டாக்டர் அனுராதா பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த 2 கிளீனிக்குகளும் மாவட்டம் நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார்.
- கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் கோசங்கி தேவி. நிறைமாத கர்ப்பிணியான இவர் குடும்ப வறுமையால் தவித்தார். இதன் காரணமாக அவர் தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க முடிவு செய்தார்.
அம்பேத்கர் காலனி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற கோசங்கி தேவி அங்கு பணியில் இருந்த ஆஷா ஊழியர் ஜெயாவை தொடர்பு கொண்டார். வறுமையின் காரணமாக தனக்கு பிறக்க போகும் குழந்தையை விற்க உள்ளதாக அவரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து ஜெயா ஆட்டோ நகரை சேர்ந்த ஷபானா பேகம் மற்றும் அமீனா பேகம் என்பவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கோசங்கி தேவி இருவரிடமும் தனித்தனியாக ரூ.5 ஆயிரம் முன்பணம் பெற்றுக்கொண்டார். அப்போது ஆண் குழந்தை பிறந்தால் ரூ 1.50 லட்சமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.1 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசினார்.
கடந்த 4-ந் தேதி கோசங்கி தேவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததை அறிந்த ஜெயா ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தார்.
அப்போது எனக்கு தெரியாமல் எப்படி 2 பேரிடம் தனித்தனியாக முன்பணம் வாங்கினாய் என சண்டையிட்டார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரும் வாக்குவாதம் செய்வதை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தனர்.
பதிவு செய்யப்பட்ட வீடியோவை போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கோசங்கி தேவி, ஜெயா, ஷபானா பேகம், அமினா பேகம் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
ஆம்பூர்:
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயது பெண். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.
அப்போது பெண்ணுக்கும், அவரது அக்கா கணவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.
இதில் கர்ப்பமான பெண்ணை அவரது உறவினர்கள் கடந்த 23-ந்தேதி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு நேற்று முன்தினம் இரவு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மற்றும் அவரது தாய் நேற்று காலை திடீரென அங்கிருந்து மாயமாகி விட்டனர்.
சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர்கள் பெண் மற்றும் குழந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து டாக்டர்கள் உமராபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் பெண்ணின் செல்போன் எண் சிக்னலை வைத்து தேடினர்.
பெண் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கே.ஜி.எப். விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு குழந்தையின் தாய் குழந்தையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு, பெண் மற்றும் அவரது உறவினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஆஸ்பத்திரியிலிருந்து குழந்தை மற்றும் அவரது தாய் திடீரென காணாமல் போனதால் அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கினோம்.
பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனையடுத்து பெண் ஆம்பூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வந்தார்.
அக்காவின் கணவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால் கர்ப்பமானார். பெண்ணை அவரது உறவினர்கள் கேலி கிண்டல் செய்வார்கள் என பயந்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், குழந்தை பிறந்ததும் அதனை கே.ஜி.எப். எடுத்து சென்று விற்பனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதுகுறித்து பெண், அவரது உறவினர்களிடம் என் அண்ணனுக்கு பயந்து நான் குழந்தையை வேறொரு நபரிடம் கொடுத்துள்ளேன் எனக்கூறி நாடகமாடி உள்ளார்.
பெண்ணிடம் தொடர்ந்து விசாரித்ததில் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது. குழந்தையை மீட்டு அவரிடம் ஒப்படைத்ததோடு அறிவுரைகள் வழங்கியுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார்.
- ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் நோனா டங்கா பகுதியில் உள்ள ரெயில்வே காலனியை சேர்ந்தவர் இளம் பெண் ரூபாலி மோண்டல்.
இவருக்கு கடந்த 21 நாட்குளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் அந்த குழந்தையை ரூபாலி மோண்டல் ஒரு பெண்ணுக்கு விற்று விட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அனந்தபுர் போலீசார் ரூபாலியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பிறந்து 21 நாட்களே ஆன குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மிட்னாபூரை சேர்ந்த கல்யாணி குஹா பெண்ணுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத நிலையில் அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை விற்றதாக ரூபாலி கூறினார். இதைத்தொடர்ந்து ரூபாலியை கைது செய்த போலீசார் மிட்னாபூர் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ரூபாலிக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மற்றும் கல்யாணி குஹா உள்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
- போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.
அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
"இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.
- குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.
இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் .
இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.
அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்