என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 பேர் காயம்"
- பைக் மீது கார் மோதியதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டிடு
கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பையை சேர்ந்தவர் பாண்டியராஜன்(வயது23). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது உறவினர் ராணி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வத்தலகுண்டு-கொடைக்கானல் சாலையில் வந்து கொண்டு இருந்தார்.
டம்டம் பாறை அருகே வந்த போது எதிரே வந்த கார் மோதியதில் 2 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
- பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
பரமத்திவேலூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்கநாயக்கன் பாளையம் அருகே உள்ள கள்ளிக்காடு, வழங்கையான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் சத்தியமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ஆவார். இவரது மனைவி நவமணி (57). இவர் ஈரோடு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் அரசு காரில் நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். பரமத்திவேலூர் அனிச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த செங்கோட்டையன் மகன் கல்லூரி மாணவர் பிரஜித் (19), நன்செய்இடையாறை சேர்ந்த ராஜேந்திரன் மகனான மெக்கானிக் கண்ணன் (19) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.
இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை அதிக வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா, தூக்க நாயக்கன் பாளையத்தை சேர்ந்த டிரைவர் முகேஷ் (25) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காரை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஜய்(வயது32)ர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார்
- இருவருடைய மோட்டார்சைக்கிளும் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்,
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த சேத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது32) மற்றும் தாமனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலர்(35). 2 பேரும் நேற்று முன்தினம் இரவு, தனித்தனி மோட்டார் சைக்கிளில் சேத்தூர் சாலை அருகே சென்றனர். அப்பொழுது திடீரென்று சாலையின் மறு பக்கத்திற்க்கு செல்ல முயன்ற விஜய், சாலையில் இடது புறம் சிங்காரவேலு மற்றொரு மோட்டார் சைக்கிள் வேகமாக வருவதை கவனிக்காமல் கடந்து உள்ளார். இதனால், வேகமாக வந்த சிங்காரவேலு மோட்டார் சைக்கிள், விஜய் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் சாய்ந்தனர்
. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துமுடிந்த இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், இருவரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து, காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
- கிராம மக்கள் ஒன்று கூடி நடத்திய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெருமாள் (வயது 40) என்பவருக்கு பலத்த காயமும் மற்றொருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
தொப்பூர்,
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து கிராம பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு உள்ளவை பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அதே போல் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நாகாவதி அணை அருகே உள்ள எர்ரப்பட்டி பகுதியில் நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி நடத்திய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி பொதுமக்கள் ஆரவாரத்துடன் நடைபெற்று கொண்டிருந்த பொழுது அங்கு போதை ஆசாமிகள் ஒரு சிலர் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திரும்பிய மாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இருவரை முட்டி குத்தி தூக்கியதில் சவுளூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 40) என்பவருக்கு பலத்த காயமும் மற்றொருவருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.
- பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 42). கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று குருவிநத்ததிலிருந்து கடலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது கடலூர் அடுத்த சின்ன கங்கணாங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்த போது சாலையில் திரும்ப முயன்றார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் கணபதி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பவீஷ்குமார், கணபதி 2 பேரும் காயம் அடைந்தனர். மேலும் 2பேரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே முஹமதியர்பேட்டை பல்பல்தக்கா பகுதியை சேர்ந்தவர் ஹாசீம் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்திலுள்ள தனது உறவினரை பார்க்க சென்றார்.அங்கிருந்து ஊர் திரும்பிய ஹாசீம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹாசீம் பலத்த காயமடைந்தார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேந்திரனின் மனைவி ரேவதி (30), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் கல்லூரி பகுதியில் சாலையை கடந்து சென்றார்.
- அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே சத்யா நகரை சேர்ந்தவர் மல்லிகா(வயது 52), கூலி தொழிலாளி. இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை எதிர்மேடு தனியார் கல்லூரி பகுதியில் சாலையை கடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ராசிபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன
பணியாளர் கண்ணையன் (28) என்பது தெரியவந்தது. அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- சின்னசேலம் அருகே கார் விபத்தில் சிக்கியதால் 2 பேர் காயம்
கள்ளக்குறிச்சி:
சென்னையை சேர்ந்தவர்கள் கணேஷ் (வயது 30), சந்தோஷ் (28), விக்னேஷ் (30), மணிகண்டன் (23,) இவர்கள் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்வதற்காக காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். வாசுதேவனூரில் உள்ள மகாபாரதி பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. பின்பு சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பத்தினர் காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவித்தனர். பின்பு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரை பத்திரமாக மீட்டனர். அதில் 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிறகு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காயமடைந்த 2 பேரையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அனுமதிக்கப்பட்டார்கள். மற்ற 2 பேரும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
- தியாகதுருகம் புறவழிச்சாலையில் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த கார்-2 பேர் காயம் அடைந்தனர்.
- காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கோரனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன் (வயது 29) இவர் சம்பவத்தன்று தனது உறவினர்கள் அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியயோருடன் விவசாய நிலத்துக்கு மின் மோட்டார் வாங்குவதற்கு சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தியாகதுருகம் புறவழிச் சாலையில் பிரிதிவிமங்கலம் காலனி அருகே சென்ற போது காருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி, காரை முந்தி சென்ற போது காரின் பக்கவாட்டில் உரசியதில் கார் சாலையோர பள்ளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த செந்தமிழ்ச்செல்வன், அமிர்தலிங்கம், பழனிவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செந்தமிழ்ச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்கு பதிந்து எந்த லாரி மோதியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .
- பயணிகள் கூட்டத்தில் புகுந்த பஸ்-2 பேர் காயம் அடைந்தனர்.
- பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் நல்லிமுத்து (60) ,அஞ்சம்மாள் (62) ஆகிய இவர்கள் இருவரும் இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் செல்லமேல் கவரப்பட்டில் பஸ்சுக்காககாத்திருத்தனர். அப்போது பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது.இந்த பஸ், சாலை ஓரத்தில் பஸ்சுக்காக காத்திருந்த நல்லிமுத்து, அஞ்சம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதனால் இரு பெண்களும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனடியாக அங்கிருந்த கிராம மக்கள் அவர்களை மீட்டுகடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய தனியார் பஸ்ஸை சிறை பிடித்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்.இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டுள்ளகிராமமக்களிடம்பேச்சுவார்த்தை நடத்தினர்.சாலையில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனர்.அதிகாரிகள் உறுதி அளித்ததால்போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பா.ஜ.க.வினருக்கு இடையே மோதல் ஏற்பட்டத்தில் 2 பேர் காயம் அடைந்தனர்
- நகர செயலாளர் பெயர் சேர்க்கப்படவில்லை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கள்ளுப்பட்டரை பகுதியைச் சேர்ந்தவர் ஏஆர்எம் ரமேஷ், பாஜகவை சேர்ந்த இவர் தற்போது அறந்தாங்கி நகரச் செயலாளராக புதிதாக பதவியேற்றுள்ளார். அதே போன்று கவிதா ஸ்ரீகாந்த் என்பவரும் மாநில மகளிர் அணி பொதுச் செயலாளராக புதிதாக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் கவிதாஸ்ரீகாந்த் புதிதாக பதவியேற்றதையடுத்து, நகரில் ஆங்காங்கே பதாகைகள் வைத்து தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளார். பதாகையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நகரச் செயலாளர் ரமேஷ் பெயர் சேர்க்கப்படவில்லையென கூறப்படுகிறது.
இதனை ரமேஷ் ஏன் தனது பெயரை சேர்க்கப்படவில்லையென கேட்டுள்ளார். அதற்கு கவிதாஸ்ரீகாந்த் அது என் விருப்பம் என பதிலளித்துள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் கவிதாஸ்ரீகாந்தின் கனவர் ஸ்ரீகாந்த் அங்கே இருந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்து ரமேஷின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் இருவரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகம் உள்ளிட்ட பகுதியில் காயமடைந்த ரமேஷ் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போன்று கவிதா ஸ்ரீகாந்த்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாஜகவினரிடையே உட்கட்சி மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலால் அறந்தாங்கி நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்