search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் ஆட்டோ"

    • இரு நிறுவனங்கள் கூட்டணியில் தனிநபர் பயன்பாடு மற்றும் டெலிவரிக்காக தனித்தனி மாடல்கள் அறிமுகம்.
    • இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உற்பத்தி செய்ய இருக்கிறது.

    யுலு மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் இணைந்து மிராகில் GR மற்றும் DeX GR மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் யுலு நிறுவனத்தின் ஏஐ சார்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இவற்றை செட்டாக் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

    மிராகில் GR தனிநபர் பயன்பாட்டு வாகனம் ஆகும். இதனை குறைந்த தூர போக்குவரத்துக்கு ஏற்ற வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு அதிகபட்சம் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. DeX GR மாடல் வினியோக பயன்பாட்டுக்கு ஏற்றதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 15 கிலோ எடையை சுமந்து செல்ல முடியும்.

     

    இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் ஹெட்லைட், டெயில்லைட், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ரியர் ஸ்ப்ரிங்குகள், இரு வீல்களிலும் டிரம் பிரேக்குகள் உள்ளன. கடந்த மூன்று மாதங்களில் இந்த எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் நாடு முழுக்க முக்கிய நகரங்களில் சுமார் ஒரு லட்சம் வாகனங்களை இயக்க ஆயத்தமாகி இருக்கிறது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் யுலு நிறுவனம் வருவாயை பத்து மடங்கு வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணி மூலம் யுலு நிறுவனம் செலவீனங்களை குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நிதி மேலான்மையை மேம்படுத்தி, உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துகிறது.

    யுலு ஃப்ளீட்டில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் உள்ளன. இவை யுமா எனர்ஜி மூலம் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் சுமார் 100 யுமா ஸ்டேஷன்கள் உள்ளன. 2024 வாக்கில் இந்த எண்ணிக்கையை 500 ஆக அதிகப்படுத்த இந்நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
    • டாமினர் 400 பிஎஸ்6 மாடல்களின் ஸ்டாக் உள்ள வரை இந்த தள்ளுபடி பொருந்தும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் மிகவும் கடினமான பிஎஸ்6 2 புகை விதிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பிஎஸ்6 யூனிட்களை வேகமாக விற்று முடிக்க திட்டமிட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏராளமான தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    பஜாஜ் டாமினர் 400 பிஎஸ்6 மாடலுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி பஜாஜ் நிறுவனம் மிக குறைந்த முன்பணத்தில் டாமினர் 400 மாடலை விற்பனை செய்து வருகிறது. டாமினர் 400 மாடலுக்கு பஜாஜ் தற்போது ரூ. 25 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக டாமினர் 400 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 991, எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

     

    இந்த தள்ளுபடி டாமினர் 400 பிஎஸ்6 யூனிட்களை வேகமாக விற்று முடிக்கவே அறிவிக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் 2016 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் டாமினர் 400 விலை ரூ. 1 லட்சத்து 36 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின் பஜாஜ் டாமினர் 400 விலை பலமுறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வுக்கு ஏற்ற வகையில், டாமினர் 400 மாடலில் புதிய அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

    அம்சங்களை பொருத்தவரை பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்டிவ் கூல்டு, DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 39.4 ஹெச்பி பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. டாமினர் 400 மாடலில் 43mm யுஎஸ்டி ஃபோர்க்குகள், மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் உள்ளது.

    பிரேக்கிங்கிற்கு பஜாஜ் டாமினர் 400 மாடலின் முன்புறத்தில் 320mm டிஸ்க் பிரேக், பின்புறம் 230mm டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    • பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.
    • புதிய செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மென்பொருள் மற்றும் கண்ட்ரோலர்களில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் ஸ்கூட்டர் வாங்குவோரின் முதல் தேர்வாக பஜாஜ் இருந்து வந்தது. தற்போது ஸ்கூட்டர் பிரிவில் பஜாஜ் நிறுவனம் எந்த மாடலையும் விற்பனை செய்வதில்லை. சமீபத்தில் தான் பஜாஜ் நிறுவனம் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்திய ஸ்கூட்டர் பிரிவில் ரி-எண்ட்ரி கொடுத்தது. 2022 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் செட்டாக் யூனிட்களை பஜாஜ் விற்பனை செய்தது.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர 2023 ஆண்டிற்கு புதிய வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் பஜாஜ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய ஸ்கூட்டரின் பேட்டரி திறன் எவ்வித மாற்றமும் பெறாது என்றே தெரிகிறது. எனினும், புதிய ஸ்கூட்டர் மென்பொருள், கண்ட்ரோலர் அல்காரிதம்களில் மாற்றங்கள் செய்யப்படலாம்.

     

    முன்னதாக 2021 டிசம்பர் மாத வாக்கில் வெளியான தகவல்களின் படி பஜாஜ் நிறுவனம் செட்டாக் ஸ்கூட்டரின் திறனை அதிகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டது. பஜாஜ் செட்டாக் மாடல் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. தற்போதைய தகவல்களில் செட்டாக் பிரீமியம் வேரியண்ட் பற்றிய விவரங்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

    புதிய பஜாஜ் செட்டாக் மாடல் 2423 குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது. இது பிரீமியம் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 50.4 வோல்ட் 57.24 Ah பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 4.2 கிலோவாட் பீக் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. புதிய செட்டாக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 108 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது. 

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிளாட்டினா 110 சீரிசில் ABS பிரேக்கிங் கொண்ட புது மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
    • புது பிளாட்டினா 110 மாடலின் ஸ்பீடோமீட்டரில் ABS இண்டிகேட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ABS வசதி கொண்ட தனது பிளாட்டினா 110 ABS மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடலின் விலை ரூ. 72 ஆயிரத்து 224, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எண்ட்ரி லெவல் கம்யுட்டர் பிரிவில் இத்தகைய பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் ஒரே மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புதிய பிளாட்டினா 110 ABS பெற்று இருக்கிறது.

    புதிய பிளாட்டினா 110 மாடலில் பஜாஜ் நிறுவனம் சிங்கில் சேனல் ABS வழங்கி இருக்கிறது. இதன் மூலம் மோட்டார்சைக்கிளின் பாதுகாப்பு அதிகரித்து இருக்கிறது. இத்துடன் புதிய பிளாட்டினா 110 ABS மாடலில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ABS இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கியர் கைடன்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் இது பிளாட்டினா சீரிசில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 110 ABS மாடல் எபோனி பிளாக், கிளாஸ் பீவ்டர் கிரே, காக்டெயில் வைன் ரெட் மற்றும் சஃபயர் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய பிளாட்டினா 110 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலிலும் 115.45சிசி, ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8.44 ஹெச்பி பவர், 9.81 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இவை தவிர 17 இன்ச் அளவில் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள், ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 11 லிட்டர் ஃபியூவல் டேன்க், செமி டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடல் இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ், ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா CD 110 டிரீம் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர பிராண்டு பல்சர் தொடர்ந்து அதிக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
    • முற்றிலும் புதிய பல்சர் P150 மோட்டார்சைக்கிள் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பல்சர் P150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் P150 மாடல் சிங்கில் டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 755 என துவங்குகிறது. இதன் சிங்கில் டிஸ்க் வேரியண்ட் சிங்கில் பீஸ் சாடில், ஃபிளாட் ஹேண்டில்பார் கொண்டிருக்கிறது.

    இதன் ட்வின் டிஸ்க் வெர்ஷன் ஸ்ப்லிட் ஸ்டைல் சாடில், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 757 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய பல்சர் P150 மாடலின் ஸ்டைலிங் பல்சர் N250 மற்றும் N160 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைன் அம்சங்களை பொருத்தவரை டிண்ட் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீன், பாடி கலர் ஹெட்லைட் கவுல், பாடி கலர் என்ஜின் கவுல் கொண்டிருக்கிறது. ட்வின் டிஸ்க் வெர்ஷனில் ஸ்ப்லிட் ஸ்டைல் பில்லியன் கிராப் ரெயில் கொண்டிருக்கிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 149.68சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 ஹெச்பி பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலின் 90 சதவீத டார்க் பயன்படுத்தக்கூடிய RPM-இல் கிடைக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்து இருக்கிறது.

    பஜாஜ் பல்சர் P150 இரண்டு வேரியண்ட்களும் - ரேசிங் ரெட், கரீபியன் புளூ, எபோனி பிளாக் ரெட், எபோனி பிளாக் புளூ மற்றும் எபோனி பிளாக் வைட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முதற்கட்டமாக கொல்கத்தாவில் அறிமுகமாகி இருக்கிறது. வரும் நாட்களில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த மாடல் கிடைக்கும்.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 125 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புது வேரியண்ட் பல்சர் 125 சிங்கில் சீட் மற்றும் ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார்பன் எடிஷன் சிங்கில் சீட் மற்றும் ஸ்ப்லிட் சீட் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இந்த மாடல் புளூ மற்றும் ரெட் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷன் சிங்கில் சீட் விலை ரூ. 89 ஆயிரத்து 254 என்றும் ஸ்ப்லிட் சீட் வெர்ஷன் விலை ரூ. 91 ஆயிரத்து 642 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டு வித நிறங்களிலும் பிளாக் பேஸ் நிறமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட் கௌல், பியூவல் டேன்க் மற்றும் ஷிரவுட்கள், என்ஜின் கௌல், ரியல் பேனல், வீல் ஸ்டிரைப் உள்ளிட்டவைகளில் கிராபிக்ஸ் உள்ளது.

    கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் பெல்லி பேன், முன்புற ஃபெண்டர், டேன்க், ரியர் கௌல் உள்ளிட்டவைகளில் இடம்பெற்று இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைனில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் சிங்கில்-பாட் ஹெட்லைட், ட்வின் டிஆர்எல்கள், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், போல்டெட் ஷிரவுட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலிலும் 124.4சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.64 ஹெச்பி பவர், 10.80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய 125சிசி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த மாடல் மூன்று விதமான டூயல் டோன் நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் 125சிசி பிரிவில் புது மோட்டார்சைக்கிளை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பஜாஜ் CT125X மாடல் விலை ரூ. 71 ஆயிரத்து 354, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் கிரீன் மற்றும் பிளாக், ரெட் மற்றும் பிளாக், புளூ மற்றும் பிளாக் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.

    தோற்றத்தில் பஜாஜ் CT125X பார்க்க CT110X போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப் மற்றும் பல்பு இலுமினேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மீது சிறிய கௌல் மற்றும் எல்இடி ஸ்ட்ரிப் உள்ளது. இந்த பைக்கில் ஹெட்லைட் கார்டு, என்ஜின் கிராஷ் கார்டு மற்றும் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.


    புதிய பஜாஜ் CT125X மாடலில் 125சிசி ஏர் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10 ஹெச்பி பவர், 11 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் போர்க்குகள், டூயல் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிரேக்கிங்கிற்கு 240 மில்லிமீட்டர் டிஸ்க் அல்லது ஆப்ஷனல் 130 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் உள்ளது. 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்கும் பஜாஜ் CT125X மாடலில் முன்புறம் 80/100 பின்புறம் 100/90 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளது. 

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல மோட்டார்சைக்கிள் சீரிசாக பல்சர் விளங்குகிறது.
    • பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பல்சர் சீரிஸ் கணிசமான பங்குகளை பெற்று இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 180 மாடல் விற்பனையை நிறுத்தி விட்டது. இந்த மாடல் பஜாஜ் ஆட்டோ வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டது. திடீரென இந்த மாடல் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பஜாஜ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    பல்சர் சீரிசில் முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் பல்சர் 180. பிஎஸ் 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது, 2019 ஆண்டு வாக்கில் முதல் முறையாக இந்த மாடல் விற்பனை நிறுத்தப்பட்டது. இத்துடன் பல்சர் 180F விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் பல்சர் 180 மாடல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.


    பஜாஜ் பல்சர் 180 மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17 ஹெச்பி பவர், 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. உபகரணங்களை பொருத்தவரை பஜாஜ் பல்சர் 180 மாடலில் ஹாலோஜன் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், டிஜி-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் டெலிஸ்கோபிக் போர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், பிரேக்கிங்கிற்கு 280 மில்லிமீட்டர் முன்புற டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. 

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய CT125X மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த மாடல் ஹோண்டா ஷைன் மற்றும் ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    புதிய பஜாஜ் CT125X மோட்டாரைச்கிள் பஜாஜ் விற்பனை மையத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் CT110X மாடலின் 125சிசி வெர்ஷன் ஆகும். இத்துடன் இந்த மாடல் அதிக அம்சங்கள் மற்றும் திறன் கொண்டிருக்கிறது.

    பஜாஜ் CT125X மோட்டார்சைக்கிள் மூலம் பஜாஜ் நிறுவனம் 125சிசி பட்ஜெட் மோட்டார்சைக்கிள் பிரிவில் மீண்டும் களமிறங்குகிறது. முன்னதாக டிஸ்கவர் 125 மற்றும் XCD 125 போன்ற மாடல்களை பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையின் 125 சிசி பிரிவில் விற்பனை செய்து வந்தது.


    பட்ஜெட் மாடல்கள் பிரிவில் பிளாட்டினா 100, பிளாட்டினா 110 மற்றும் CT110X போன்ற மாடல்களை பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. 125சிசி மட்டுமின்றி பெட்ரோல் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்யாத காரணத்தால் பஜாஜ் வாகனங்கள் ஒட்டுமொத்த விற்பனை திடீர் சரிவை எதிர்கொண்டது.

    தற்போது பஜாஜ் CT125X மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தன் மூலம் பஜாஜ் நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய பிரிவில் பலத்த போட்டியை ஏற்படுத்த முடியும். இந்திய சந்தையில் புதிய பஜாஜ் CT125X மாடல் ஹோண்டா SP125, ஹோண்டா ஷைன், ஹீரோ கிளாமர், ஹீரோ சூப்பர் ஸ்பிலெண்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பஜாஜ் மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
    • இந்த மாடல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    பஜாஜ் ஆட்டோ மற்றும் கேடிஎம் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.

    பஜாஜ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கை தாக்கலின் போது இந்த தகவலை ராகேஷ் ஷர்மா தெரிவித்தார். முதல் மாடலே ஹை-எண்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் என ராகேஷ் ஷர்மா குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வகையில், புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 390 சீரிசுக்கு இணையான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.


    புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றிய இதர விவரங்கள் சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். எனினும், இந்த மாடலின் ஆயத்த பணிகள் தற்போது தான் துவங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவை பொருத்தவரை சர்வதேச மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தாத நிலையை கடைபிடிக்கின்றன. எனினும், அனைத்து நிறுவனமும் திடமான எலெக்ட்ரிக் பைக்கை வரும் ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டம் கொண்டுள்ளன.

    இது தவிர பஜாஜ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் ஹஸ்க்வர்னா பிராண்டிங் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் ஹஸ்க்வர்னா வெக்டார் மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த மாடல் இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டு, மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது டாமினர் சீரிஸ் மாடல்களின் விலையை மாற்றி உள்ளது.
    • புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மற்றும் டாமினர் 250 மோட்டார்சைக்கிள்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. இரு மாடல்களின் விலையும் முறையே ரூ. 6 ஆயிரத்து 400 மற்றும் ரூ. 3 ஆயிரத்து 152 என உயர்த்தப்பட்டுள்ளது.

    விலை உயர்வை தொடர்ந்து டாமினர் 400 விலை ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 538 என்றும் டாமினர் 250 விலை ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 002 என்றும் மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    டாமினர் 250 மாடல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக மூன்று வித டூயல் டோன் ஆப்ஷன்களில் வழங்கப்பட்டது. புதிய நிறம் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 248.77சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 26.6 ஹெச்.பி. பவர், 23.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டாமினர் 400 மாடலில் 373.3சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 39.42 ஹெச்.பி. பவர், 35 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அப்டேட் செய்யப்பட்டு புதிதாக ஃபேக்டரி-ஃபிட் செய்யப்பட்ட டூரிங் அக்சஸரீக்கள் வழங்கப்பட்டன. 

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த வாரம் தான் புதிய பல்சர் N160 மாடலை அறிமுகம் செய்தது.
    • இந்த மாடல் தற்போது விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் புதிய பல்சர் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பல்சர் N160 என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது இந்த மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது.

    புதிய பஜாஜ் பல்சர் N160 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். , யு.எஸ்.பி. மொபைல் சார்ஜிங் சாக்கெட், பை பன்ஷனல் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், வாகன விவரங்களான கியர் பொசிஷன் இண்டிகேட்டர், தேதி உள்ளிட்டவைகளை காண்பிக்கும் எல்.சி.டி. வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஃபேன்சியான ஹெட்லேம்ப் செக்‌ஷன் மற்றும் மஸ்குலர் பாடி பேனல்கள் உள்ளன.


    இந்த மாடலில் 165சிசி, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15.68 ஹெச்.பி. பவர், 14.65 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 154 கிலோ எடை கொண்டிருக்கும் பஜாஜ் பல்சர் N160 மாடலில் 17 இன்ச் அளாய் வீல்கள், 37 மில்லிமீட்டர் டெலிஸ்கோபிக் போர்க்குகள் மற்றும் நைட்ராக்ஸ் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். கொண்ட பஜாஜ் பல்சர் N160 மாடல் புளூ, ரெட் மற்றும் கிரே என மூன்று வித நிறங்களிலும், டூயல் சேனல் ஏ.பி.எஸ். கொண்ட மாடல் பிளாக் என ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

    ×