search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணி விவரம்:-

    அலெக்ஸ் லீஸ், சாக் க்ராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்சன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே.
    • அதே நேரத்தில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதில் உறுதியில்லை என்று பயிற்சியாளர் டிராவிட தெரிவித்துள்ளார்.

    எட்ஜ்பஸ்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டி முடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    முதல் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்டில் 151 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 157 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்னில் வெற்றி பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமே. இதனால் வேகப்பந்து வீரர் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கபில்தேவுக்கு பிறகு வேகப்பந்து வீரர் ஒருவர் கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.

    அதே நேரத்தில் ரோகித் சர்மா இந்த டெஸ்டில் விளையாட மாட்டார் என்பதில் உறுதியில்லை என்று பயிற்சியாளர் டிராவிட தெரிவித்துள்ளார். இன்றைய இறுதிகட்ட பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும். ரோகித் சர்மா ஆடாமல் போனால் சுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக மயங்க் அகர்வால் களம் இறங்கலாம்.

    விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், விஹாரி, ரிஷப்பண்ட் ஆகியோர் அடுத்த வரிசையில் ஆட கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களில் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி இடம் பெறுவார்கள். சுழற்பந்தில் ஜடேஜா ஆடுகிறார். ஷர்துல் தாகூர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர்.

    இந்த டெஸ்டை டிரா செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இங்கிலாந்தை வீழ்த்தினால் 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். தோற்றால் தொடர் சமநிலையில் முடியும்.

    பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாக இருக்கிறது. அந்த அணி சமீபத்தில் நியூசிலாந்தை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

    கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோரூட், பேர்ஸ்டோக், ஆண்டர்சன், ஜேக்விச் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்து அணியை வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலானது.

    இரு அணிகளும் மோதிய 130 டெஸ்டில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 49-ல் வெற்றிபெற்றன. 50 டெஸ்ட் டிரா ஆனது.

    நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.

    • ரோகித் சர்மாவுக்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
    • பரிசோதனை முடிவு அடிப்படையில் பும்ராவுக்கு கேப்டன் வாய்ப்பு வழங்கப்படும்.

    பர்மிங்காம்:

    கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கில் நீடிக்கிறது.

    இதனிடையே, ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளரும் துணை கேப்டனுமான பும்ரா வழிநடத்துவார் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.

    எனினும் இன்று ரோகித் சர்மாவுக்கு நடத்தப்படும் கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் போட்டியில் பங்கேற்பாரா இல்லையா என்பது உறுதிசெய்யப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கபில்தேவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பையும் பும்ரா பெற உள்ளார்.

    • இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும்.
    • கேஎல் ராகுல்-ரோகித் சர்மா உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

    இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு இந்தியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது டெஸ்ட் போட்டி கொரோனா பரவல் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

    இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தொடரை இழந்தது. 2 போட்டிகளில் டிரா ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் அதிரடியில் வெற்றி பெற்றது. இதே மன நிலையில் தான் இந்தியாவுடனான 5-வது டெஸ்ட்டில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவர் என இங்கிலாந்து வீரர் மொயின் அலி இந்திய அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    5-வது டெஸ்ட் போட்டியை கடந்த ஆண்டே முடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் என உணர்கிறேன். நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அதனால் அவர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தெரிந்தபிறகு பென் ஸ்டோக்ஸ் ஆபத்தானவராக மாறி விடுவார்.

    இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பானதாக இருப்பதால் வெற்றி பெறுவது சவாலானதாக இருக்கும். இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய போது புது பந்தில் கேஎல் ராகுல் - ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். தற்போது கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்து அணிக்கு சாதகமாகும்.

    இங்கிலாந்து அணி இதற்கு முன்பு ஜோரூட் தலைமையில் 17 டெஸ்ட்டில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளருடன் டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதல் தொடரில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்துள்ளது.

    பென் ஸ்டோக்ஸின் சிறந்த விஷயம் என்னவென்றால் வீரர்கள் இங்கிலாந்துக்காக சிரித்த முகத்துடன் விளையாட வேண்டும் என்று அவர் விரும்புவார். பயப்பட ஒன்றுமில்லை. உங்களின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுங்கள். இந்த வேலை செய்தால் அது அணிக்கு சிறந்ததாகும். ஆனால் எப்படி விளையாட வேண்டும் என்பதை எண்ணி பயப்பட வேண்டாம். கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு உங்களுக்கு இருந்தால் அது பெரிய விஷயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது.
    • இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 டெஸ்டுகளிலும் 250 ரன்களுக்கு மேலான இலக்கை தடாலடியாக ரன்மழை பொழிந்து எட்டிப்பிடித்தது. கொரோனா பிரச்சினையால் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இதே போல் அதிரடி காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து ஸ்டோக்ஸ் அளித்த பேட்டியில், 'உலகின் தலைச்சிறந்த அணியை 3-0 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. அடுத்து நாங்கள் மற்றொரு அணியை எதிர்கொண்டாலும் கூட அதே மனநிலையில் (ஆக்ரோஷமான ஆட்டம்) தான் விளையாடுவோம். அதில் மாற்றம் இருக்காது.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டுகளில் நாங்கள் என்ன செய்தோமோ அதை இந்தியாவுக்கு எதிரான டெஸ்டிலும் தொடர்வதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தற்போது இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணியினர் தீவிரமாக உள்ளனர். கடந்த ஆண்டு மனஅழுத்தம் காரணமாக இந்த தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் ஒதுங்கி இருந்தது நினைவு கூரத்தக்கது.

    • நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
    • 31 வயதான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

    இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் டெஸ்ட் தொடரில் மோதின. இதில் 3 டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியாவுடன் ஜூலை 1-ந் தேதி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மோத உள்ளது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து தொடரில் விளையாடிய அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. இந்திய அணிக்கு எதிராக கூடுதலாக சாம் பில்லிங்சை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

    31 வயதான சாம் பில்லிங்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தாவது ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவனில் அவர் இடம் பெறவில்லை. கீப்பர் பென் ஃபோக்ஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் அணியில் அவர் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், சாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ்.

    • மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடந்தது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் டெஸ்ட் அணியில் காயம் காரணமாக விலகிய கேஎல் ராகுலுக்கு மாற்று வீரராக மயங்க் அகர்வால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படிருந்தார். அவர் தற்போது இந்திய அணியில் இணையவுள்ளார். கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் உடல் நலம் பாதிப்படைந்துள்ள நிலையில் அகர்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மயங்க் அகர்வால் இன்று இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்ற விதிமுறை நீக்கப்பட்டுள்ளதால் மயங்க அகர்வால் நேரடியாக அணி வீரர்களுடன் இணைவார்.

    அகர்வால் ரஞ்சி டிராபியில் 21 டெஸ்ட் போட்டிகளில் 41.33 சராசரியுடன் 1,488 ரன்கள் எடுத்துள்ளார். இதில் நான்கு சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில், 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது.
    • நான்கு இந்திய வீரர்கள் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள்.

    லீசெஸ்டர்:

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி, அந்நாட்டின் லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

    இதில் இந்திய வீரர்கள் ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடினார்கள். முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிபட்சமாக ஸ்ரீகர் பாரத் 70 ரன்கள் குவித்தார்.

    பின்னர் களமிறங்கிய லீசெஸ்டர்ஷைர் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    இதில் முன்னாள் கேப்டன் விராட் கோலி 67 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜா 56 ரன் அடித்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் லீசெஸ்டர்ஷைர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்திருந்த போது போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 ஆம் தேதி தொடங்குகிறது.

    • அஸ்வின் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
    • கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தபோது கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை. அவர் கொரோனா பாதிப்பால் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அஸ்வின், இங்கிலாந்தில் இந்திய அணியுடன் இணைந்தார்.

    லீசெஸ்டர்னாஷர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதையடுத்து லீசெஸ்டருக்கு சென்று இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.

    இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1-ந்தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு சரியான நேரத்தில் குணமடைவார் என்று அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    • பும்ரா வீசிய பந்தில் ரோகித் சர்மா காயமடைந்தார்.
    • பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணி -லீசெஸ்டயர் அணிக்களுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள்.

    பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரனான ரோகித் சர்மா இதுவரை பும்ராவுக்கு எதிராக விளையாடியதில்லை என்று கூறலாம்.

    இந்திய அணியிலும் சரி ஐபிஎல் போட்டியிலும் சரி இருவரையும் ஒரே அணியில் பார்த்துவிட்டு தற்போது இந்த பயிற்சி ஆட்டத்தில் எதிரெதிர் அணிகளில் பார்த்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

                                                                            பும்ரா வீசிய பந்தில் காயமடைந்த ரோகித் சர்மா 

    பும்ரா வீசிய பந்தில் ரோகித் சர்மா காயமடைந்தார். இதனால் மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா இயல்பு நிலைக்கு திரும்பி பேட்டிங்கை தொடர்ந்தார்.

    இந்திய அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 25, சுப்மன் கில் 21, விஹாரி 3, ஸ்ரேயாஸ் அய்யர் 0, ஜடேஜா 11 என வெளியேறினர். விராட் கோலி 9 ரன்னிலும் பரத் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

    • ரிஷப்பண்ட், பும்ரா உள்பட 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள்.
    • டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.

    லீசெஸ்டர்:

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கி லாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி லீசெஸ்டயர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்து இருந்தது. அதன்படி பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடைபெறும் இந்த பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாகும். வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க 11 பேர் கொண்ட அணியில் இடம்பெற போராடுகிறார்.

    ரிஷப்பண்ட், புஜாரா, பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் லீசெஸ்டயர் அணிக்காக ஆடுகிறார்கள். அதாவது அவர்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவார்கள்.

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், விகாரி, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா,ஷர்துல் தாகூர், முகது ஷமி, முகது சிராஜ், உமேஷ் யாதவ்.

    லீசெஸ்டயர்: சாம் இவான்ஸ் (கேப்டன்), ரேகான் அகமது, சாம் பேட்ஸ் (விக்கெட் கீப்பர்), பவ்லே, விலடேவாஸ், வெசன் கிம்பர், அபி ஷகாண்டே, ரோமன் வால்கர், புஜாரா, ரிஷப்பண்ட், பும்ரா, பிரசித் கிருஷ்ணா

    • ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர்.
    • இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்திய அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது.

    கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்றடைந்தனர். இதனையடுத்து இந்திய டெஸ்ட் அணியுடன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அணியுடன் பயிற்சியாளர் டிராவிட் ஆலோசனை நடத்தும் புகைப்பட காட்சிகளை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    ×