என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீடிப்பு"
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- பேச்சிப்பாறையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் குறைப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொட்டி தீர்த்து வந்த மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.
பேச்சிபாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வழிகிறது. பாசன குளங்களும் நிரம்பியுள்ளது.இந்த நிலையில் தற்பொழுது மழை சற்று குறைந்துள்ளது. மழை குறைந்ததையடுத்து பேச்சிபாறை அணை யிலிருந்து வெளியேற்றப் பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப் பட்டு வருகிறது.
இன்று பேச்சிபாறை அணையில் இருந்து 316 கன அடி உபரிநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளி யேற்றப்படும் உபரிநீரின் காரணமாக கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோதை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதை யடுத்து இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு இருந்தது. விடு முறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் ஏராள மான சுற்றுலா பயணி கள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனர்.
ஆனால் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டி யதால் அருவியில் குளிப்ப தற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற னர்.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 41.23 அடியாக இருந்தது. அணைக்கு 387 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 316 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.73 அடியாக உள்ளது. அணைக்கு 356 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 350 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
சிற்றார்-1 அணை நீர் மட்டம் 14.89 அடியாகவும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.99 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 45.93 அடியாகவும் உயர்ந்துள்ளது.
- மாம்பழத்துறையில் 19.6 மி.மீ. பதிவு
- பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருகை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த இரண்டு நாட் களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பேச்சிபாறை அணை பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை, சிற்றார், கன்னிமார், மாம்பழத்து றையாறு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாம்பழத்து றையாறில் அதிகபட்சமாக 19.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவைவிட கூடுதலாக உள்ளதையடுத்து பரளி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிற்றார் -1, சிற்றார் -2 அணைகளின் நீர்மட்டமும் 12 அடியை கடந்துள்ளதையடுத்து வெள்ள அபாய எச்ச ரிக்கை தொடர்ந்து விடப் பட்டு வருகிறது.ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள்.
பேச்சிப்பாறை அணை யில் இருந்து நேற்று முதல் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இன்று காலையிலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, குழித்துறை ஆறு,கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.14 அடியாக உள்ளது. அணைக்கு 924 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 327 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1073 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.19 அடியாக உள்ளது. அணைக்கு 639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.23 அடியாக வும், சிற்றார்- 2 அணை நீர்மட்டம் 12.33 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும் உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.
- சேலம் மாவட்டத்தில் 3 -வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.
- 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 3 -வது நாளாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தம்மம்பட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வெளிகள் உ ள்பட தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து அந்த பகுதியில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.
இேத போல ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
43.30 மி.மீ. மழை
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டி யில் 34 மி.மீ. மழை பதிவாகி உள்ளது ஓமலூர் 5, எடப்பாடி 3, ஆத்தூர் 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 43.30 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- காடையாம்பட்டி, மேட்டூரில் கன மழை அதிக பட்சமாக 36 மி.மீ. பதிவானது.
- இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக காடையாம்பட்டி, மேட்டூர், சங்கிகிரி மற்றும் ஓமலூரில் நேற்றிரவு கன மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம் பட்டியில் 36 மி.மீ. மழை பெய்துள்ளது.
மேட்டூரில் 35.8, ஓமலூர் 31, சங்ககிரியில் 29.2, எடப்பாடியில் 6.2, சேலம் 4.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 143 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்றும் காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- ஏற்காட்டில் அதிக பட்சமாக 32 மி.மீ. பதிவு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
ஏற்காட்டில் கன மழை
குறிப்பாக ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் பகுதியில் சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடையில் நீர்வரத்து அதிகரித்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் அந்த வழியாக செல்லும் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேற்றிரவு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இன்று அதிகாலை முதல் அந்த ஓடையில் தண்ணீர் வரத்து குறைந்ததால் மீண்டும் அதே வழியாக போக்குவரத்து தொடங்கி உள்ளது.
இதே போல மேட்டூர், தம்மம்பட்டி உள்பட பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம்
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காடையாம்பட்டி, மேட்டூர் பகுதிகளில் கன மழை பெய்தது.
இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக காடையாம்பட்டியில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. மேட்டூர் 22.2, ஓமலூர் 10.4, எடப்பாடி 1.4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையுமம் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
- மேட்டூரில் கன மழை அதிக பட்சமாக 35.4 மி.மீ.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
ஏற்காட்டில் மழை
குறிப்பாக மேட்டூரில் நேற்றிரவு கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இேதபோல தம்மம்பட்டி, ஏற்காட்டிலும் மழை பெய்தது. சேலம் மாநகரில் லேசான தூறலுடன் மழை நின்று போனது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது.
57.7 மி.மீ. பதிவு
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 35.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தம்மம்பட்டி 10, ஏற்காடு 8, ஓமலூர் 3, காடையாம்பட்டி 1, சேலம் 0.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 57.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது .
கன மழை
குறிப்பாக ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணி அளவில் ெதாடங்கிய மழை லோசன தூறலுடன் நின்று போனது.
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆத்தூரில் 45 மி.மீ. மழை பெய்துள்ளது. தம்மம்பட்டி 30, பெத்தநாயக்கன் பாளையம் 19, கெங்கவல்லி 15, ஏற்காடு 7, ஆனைமடுவு 7, ஓமலூர் 6.4, சேலம் 2.9, சங்ககிரி 2.2, எடப்பாடி 2 ,காடையாம்பட்டி 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வெயில் அடித்த படி இருந்தது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொத்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோளசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 10.30 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது.
அதனை தொடர்ந்து மழை கனமழை பெய்தது. விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது.
மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இரவில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்