search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233586"

    • 137.500 கிராம் தங்கம், 137.00 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
    • திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் உண்டியல்கள் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செல்வராஜ், ஊத்துக்குளி கோவில் ஆய்வாளா் ஆதிரை, தக்காா் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலா் காளிமுத்து ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் பக்தா்கள் ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்து 264 ரொக்கம், 137.500 கிராம் தங்கம், 137.00 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.பெருமாநல்லூா் கே.எம்.சி. பப்ளிக் பள்ளி, திருப்பூா் மகா விஷ்ணு சேவா சங்கத்தினா் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.80 லட்சத்து 79 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
    • தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.இங்கு ஆடி மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த வருடம் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடந்தது. விழா நேற்று முடிந்த நிலையில் ேகாவிலில் வைக்கப்பட்டிருந்த 4 தற்காலிக உண்டியல், 10 நிரந்தர உண்டியல், ஒரு கால்நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை கோவில் மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

    பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. இதில் ரொக்கமாக ரூ.80 லட்சது 79 ஆயிரத்தி 888 பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 176 கிராமும், வௌ்ளி 822 கிராமும் கிடைத்தது.

    இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர், இந்து அறநிலைய துறை கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலை வர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு வினர், ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வை யிட்டனர்.

    • சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் எடுத்து சென்றனர்
    • சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்த கோவிலில் வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வார்கள்.நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

    இன்று காலையில் கோவில் மேற்பார்வையாளர் அனந்தகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார்.அப்போது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த இரண்டு உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தனர் .மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ராகவேந்திரா கோவிலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • க்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள்
    • ரூ.14,29,759 ரொக்கமாகவும், 82 கிராம் தங்கம், 196 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 9 நிரந்தர உண்டியல், 7 குடங்கள் ஆகியன நேற்று குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் தங்கம், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், சுயஉதவிகுழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    அதில் ரூ.14,29,759 ரொக்கமாகவும், 82 கிராம் தங்கம், 196 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

    • கோவில் உண்டியலை உடைத்து சுமார் ரூ.500-ஐ திருடி உள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி கோவில் உண்டியலை உடைத்து திருடிய செல்வராஜை கைது செய்தனர்.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே ஆலங்கோட்டையில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வாரம் இரு முறை வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம் அது போல் நேற்று முன்தினம் கோவிலில் வழிபாடுகள் முடிந்து இரவு சென்ற பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 43) என்பவர் கோவில் உண்டியலை உடைத்து சுமார் ரூ.500-ஐ திருடி உள்ளார். மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டெம்போவில் இருந்த செல்போனையும் திருடி உள்ளார்.

    இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விசாரணை நடத்தி கோவில் உண்டியலை உடைத்து திருடிய செல்வராஜை கைது செய்தனர்.

    • திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை.
    • போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்

    கன்னியாகுமரி:

    குளச்சல் மெயின்ரோட்டில் களிமார் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்றிரவு வழக்கம்போல் வழிபாடு முடிந்து நிர்வாகிகள் கோவில் கிரில் வாசலை பூட்டிவிட்டு சென்றனர். இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஒருவர் கோவில் வாசல் கிரில் திறந்து கிடந்ததை கண்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.உடனே நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்க்கும்போது கோவில் உள்பக்கமாக இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதிலிருந்த காணிக்கை பணம் காணாமல் போயிருந்தது. மர்ம நபர்கள் கிரில் பூட்டையும், உண்டியல் பூட்டையும் உடைத்து காணிக்கை பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. திருடப்பட்ட காணிக்கை பணம் எவ்வளவு என்று மதிப்பிடப்படவில்லை. காணிக்கை பணத்தை திருடிய நபர்கள் 2 பூட்டுகளையும் எடுத்து சென்று விட்டனர்.

    இது குறித்து கோவில் நிர்வாக தலைவர் ஜெகன்னாதன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசாரும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    • நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.
    • மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற முருகன், மாரியம்மன் கோவில்கள் அருகருகே உள்ளது.இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.கோவில் தினமும் காலை திறக்கப்பட்டுஇரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். அதே போல்நேற்று இரவும் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.

    நள்ளிரவில் கோவிலுக்கு வந்தமர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்துஅதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மேலும் கோவிலில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று தேடிப்பார்த்து உள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை பூசாரி வழக்கம் போல் கோவிலை திறக்க வந்த போது 2 கோவில்களின் உண்டியல்கள்உடைக்க ப்பட்டு அதில்இருந்த காணிக்கை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளை நடந்த கோவிலுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உண்டியல் மற்றும் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் மாரியம்மன் கோவில் உண்டியலில் ரு. 20 ஆயிரமும், முருகன் கோவில் உண்டியலில் ரு. 5 ஆயிரமும் இருந்தது தெரியவந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள்.
    • ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழாவை முன்னிட்டு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நடைபெற்ற ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை இந்து அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் சிவலோகநாயகி, கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அலுவலக பணியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
    • சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தேடி வருகிறார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிபட்டியில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தான்தோன்றி ஈஸ்வரர் கோவில் உள்ளது.

    சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட இந்த கோவிலில் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள் .

    நேற்று இரவு கோவில் பூசாரிகள் வழக்கம் போல் கோவில் நடையை பூட்டிவிட்டுச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் சன்னதியில் இருந்த உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் கொண்டு தப்பினர்.

    இன்று காலை கோவிலை திறக்க வந்த பூசாரி உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்களை எண்ணப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி மற்றும் காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டது. தக்கார் நவீன்ராஜா, ஆய்வர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் சின்னசாமி, கோவில் எழுத்தர் ஸ்ரீ சைல வெங்கடேச முருகன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ரொக்கம் மற்றும் நாணயங்கள் சேர்த்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 995 ரூபாய் இருந்தது. இந்த தொகையை முறைப்படி அரசிடம் சேர்க்கப்பட்டது.

    • மேச்சேரி அருகே கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 பேர் கைது செய்தனர்.
    • திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் செல்வசக்தி. இவர் இந்த கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் அருகே ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது,

    இக்கோவில் நுழைவு வாயில் கேட்டினை 2 நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர். இதை கண்ட செல்ல சக்தி உடனே சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு அங்கு வந்து திருட முயன்ற மர்ம நபர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இவர்கள் இருவரும் சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அதில் ஒருவர் தீபன்ராஜ் ( வயது 23) மற்றொருவர் தீபக் (23) என்பதும், இவர்கள் இருவரும் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட முயற்சி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் பொதுமக்கள் மேச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
    • ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவதற்காக வேண்டி கோவிலில் உள்ள உண்டியலில் பணம், காசு தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

    இதற்காக வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகள் முன்பு 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜயகுமார் விஜிலென்ஸ் அதிகாரி நாயுடு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இதில் வருமானமாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்து 133 வசூல் ஆகி இருந்தது.

    ×