search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233867"

    • பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் மாலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மாலையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது. பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் செல்லும் எதிரே உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மோகன் ராஜ், விஜய் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனே சம்பவத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு போக்குவரத்து சீரானது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதைபோல் கவுந்தப்பாடி, அம்மா பேட்டை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-67, கவுந்த–ப்பாடி-18.40, அம்மா–பேட்டை-11.60, வரட்டு–பள்ளம்-7, குண்டேரி–பள்ளம்-6.20, சென்னி–மலை-3.

    • ஈரோடு மாவட்டத்தில் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
    • அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டு வகித்தது. இரவு 7 மணி முதல் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை பெய்யத் தொடங்கியது.

    மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, கொடிவேரி, தாளவாடி, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-90, கொடுமுடி-57, கவுந்த ப்பாடி-22, மொடக்குறிச்சி, வரட்டுபள்ளம்-21, ஈரோடு, பவானி-15, கோபி-9.4, குண்டேரிபள்ளம்-7.6, பெருந்துறை-7, கொடி வேரி-6.2, தாளவாடி-6, சென்னிமலை-4, பவானிசாகர்-3.2, சத்தியமங்கலம்-3.

    சேலம், ஏற்காட்டில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக சேலத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழை தொடர்ந்து இரவிலும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் சேலத்தில் இரவு முழுவதும் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் அதிக பட்சமாக 15.4 மி.மீ. மழை பெய்துள்ளது . ஏற்காடு 4, ஆத்தூர் 3, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிட தக்கது. 

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காலையில் கடும் வெயில் நிலவுகிறது. மாலையில் கன மழை பெய்து வருகிறது. நேற்று வழக்கம்போல காலையில் வெயில் வாட்டியது.

    மாலையில் வானில் கரு மேகங்கள் சூழ்ந்தன. பின்னர் கன மழை கொட்டியது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், எடப்பாடி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது.

    அதிகபட்சமாக 45.5 மி.மீ பதிவு

    மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்த–நாயக்கன்–பாளையத்தில் 45.5 மி.மீ. மழையும், ஏற்காட்டில் 45.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    எடப்பாடி- 35.4, கரியகோவில்-18, ஆத்தூர்-10.8, தம்மம்பட்டி-10, வீரகனூர்-5, மேட்டூர்-4.2, காடையாம்பட்டி-2.5, சேலம்-1.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 181.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 12.10 ஆகும்.

    தொடர் மழை காரணமாக வாழப்பாடி தாலுகாவில் அமைந்துள்ள ஆனைமடுவு அணை நீர்மட்டம் 44.52 அடியாகவும், பெத்தநாயக்–கன்பாளையம் தாலுகாவில் உள்ள கரியகோவில் அணை நீர்மட்டம் 44.75 அடியாகவும் உயர்ந்து உள்ளது.

    ×