search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குத்தகை"

    • மாவட்ட விவசாய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.
    • 2-வது பரிசாக பரிசாக ரூ. 10ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் பாராம்பரிய காய்கறி கள் சாகுபடியில் சிறந்து விளங்குபவர்களுக்கு 2023––-24-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விருது மற்றும் பரிசு தொகை வழங்க அறிவித்துள்ளது.விருது பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக் கலை துறையின் இணைய தள முகவரியில் நுழைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும் . அல்லது மாவட்ட விவசாய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம்.

    விவசாயி்கள் தங்களது சொந்த நிலம் மற்றும் குத்தகை நிலத்தில் காய்கறிகள் பயிரிடுபவராகவும், பராம்பரிய காய்கறிகளை பயிரிடுபவராக இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட குழுவில் சமர்பிக்கப் பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையிலான அதிகாரிகள் குழு விவசாயிகள் இருவரை தேர்வு செய்து ,மாவட்ட அள விலான அரசு விழா நடை பெறும் போது விவசாயிகளை கவுர வித்து அவர்களுக்கு விருது மற்றும் முதல் பரிசாக ரூபாய் 15 ஆயிரம், 2-வது பரிசாக பரிசாக ரூ. 10ஆயிரம் காசோலையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.
    • மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த அழகரசன் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேச்சலுக்கு விட்டு முடித்துக் கொண்டு வழக்கம்போல் இரவு விவசாய நிலத்தில் உள்ள கொட்டாயில் கட்டி விட்டு அருகில் உள்ள இவரது வீட்டிற்கு தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் அனைத்து இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை. திருட்டு போன ஆடுகளின் மதிப்பு 40 ஆயிரம் என தெரிய வருகிறது. 

    கல்குவாரிகளில் கல் உடைக்கும் குத்தகை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள 31 சாதாரண கல்குவாரிகளில் இருந்து சாதாரண கல் உடைக்க குத்தகை உரிமம் பெற முன்னுரிமை அடிப்படையில் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கங்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.1959-ம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளின் விதி 8-ன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கண்ட கல் குவாரிகளிலிருந்து கட்டுமானப் பணிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் சாதாரண கட்டுக்கல், சக்கை கல், வேலிகல், ஜல்லி ஆகியவற்றை குவாரி செய்வதற்காக குத்தகை உரிமம் பெற விருப்பம் உள்ள உரிய அங்கீகாரம் பெற்ற பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் சங்கங்கள் ஆகியவற்றுக்கு குத்தகை உரிமம் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் இணைப்பு 6-பி-யில் கண்டுள்ளவாறு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண்.21-ல் உள்ள மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது தபாலிலோ நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. மற்றும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    • கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம்:

    நாட்டின் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக வலைதள வீடியோக்கள் உதவியாக உள்ளன. இதற்கு உதாரணமாக அண்மையில் மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் வீடியோ சாட்சி. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    தமிழகத்தில் கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்களை அரை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் பல்வேறு கண்மாயின் மீன்பிடிக்கும் உரிமையை பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு குத்தகைதாரர்கள் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஏலம் எடுத்தவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளி நபர்கள் யாரேனும் மீன்களை பிடித்து விற்கக்கூடாது என்பதற்காக கண்மாய்க்கு காவலுக்கு ஆட்களை போட்டு கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருங்கூர் கண்மாயில் அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்கள் திருட்டு போய் வந்தது. இதன் காரணமாக கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் கண்மாயில் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, அன்பழகன், மனோகர், மனோஜ் ஆகிய 4 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மீன்பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவலாளிகள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து குத்தகைதாரர் ராஜ்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

    அவர் 4 பேரையும் போலீசில் ஒப்படைக்காமல் அரை நிர்வாணமாக்கி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். அவருடன் சேர்ந்து சதீஷ், சத்தியராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகியோரும் அவர்களை தாக்கி உள்ளனர்.

    அப்போது 4 பேரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனாலும் தொடர்ந்து ராஜ்குமார் தரப்பினர் அவர்களை தாக்கினர். மேலும் மீன்பிடித்தற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டினர். இந்த தாக்குதலை ராஜ்குமார் தரப்பை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வேகமாக பரவி வைரலானது. 4 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடக்கும் பதிவு பார்ப்போர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம் வடக்கு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 4 வாலிபர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைதாரர் ராஜ்குமார், சதீஷ், சத்யராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த இருவர் எலும்பு முறிவு காரணமாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • பழமை வாய்ந்த 3 வேல மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளனர்.
    • இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தில் புகழ்பெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோயிலும், அதற்கு சொந்தமான இடமும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் நிலங்கள் குத்தகக்கு விடப்பட்டுள்ளது. குத்தகை எடுத்தவர்கள் நிலத்தில் இருந்த பழமை வாய்ந்த 3 வேல மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டி விற்பனை செய்துள்ளனர். அரசு நிலத்தில் குத்த கைக்கு பயிரிடுபவர்கள் நிலத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நிலத்தில் உள்ள கோயில் சொத்து க்களை அழிக்கவோ, விற்கவோ உரிமை இல்லை என வீதிமுறைகள் உள்ளது.

    இதனை பொருட்ப டுத்தாமல் குத்தகைக்கு எடுத்தவர்கள் மரத்தை வெட்டி விற்றுள்ளனர். இது சம்பந்தமாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று வெட்ட ப்படும் மரங்கள், தினமும் மாலை நேரங்களில் டிராக்டர் டிப்பரில் கடத்துவது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனையும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனுமதியின்றி மரத்தை வெட்டிய குத்தகைதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.
    • குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு 13 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன.

    இந்த நிலங்களில் ஓரளவுதான் கணக்கில் உள்ளது.

    பாக்கி நிலங்கள் யாரிடம், எவ்வளவு உள்ளது என்பது தெரியவில்லை.

    இதனால் பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தி வருபவர்கள் குத்தகை செலுத்த இயலாமல் உள்ளனர்.

    இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய உத்தரவிடப்பட்டு அதன்படி, குரவப்புலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்சியர் அமுதா, கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன் உள்பட கோவில் அலுவலர்கள், நில அளவையர் குழுவினர் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல் போட்டு வருகின்றனர்.

    • வலையங்குளம் கண்மாயில் மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வலையங் குளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் சிங்கராசு, தமிழ் மாநில சிவசேனா கட்சி செயல் தலைவர் தூதை செல்வம் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாயை, அதே பகுதி யைச் சேர்ந்த 4 பேர் 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ4.10லட்சத்தை லஞ்சம் வாங்கிக் கொண்டு, மீன் குத்தகை ஏலம் விட்டுள்ள னர். கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், மீன் களை பிடிக்க முடியவில்லை.

    அவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர். ஆடு, மாடுகளை கூட தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. மேற்கண்ட 4 பேரும் அங்குள்ள கடைகளில் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பெரிய கண்மாய் குத்தகை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும்.
    • கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா

    மணியனூர், கந்தம்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிபாளையம், சோழசிரா மணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், திகவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, வடகரை யாத்தூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், இருக்கூர், கொந்தளம், கோப்பணம் பாளையம், வெங்கரை, பாண்ட மங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர், பரமத்தி, மோகனூர், பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மர சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஒரு ஏக்கரில் 80-க்கும் மேற்பட்ட தென்னை மர கன்றுகளை வைத்து வளர்க்கிட்டனர். தென்னை மர ரகத்தை பொறுத்து 3 ஆண்டுகள் அல்லது 4 ஆண்டுகளில் காய் காய்க்க தொடங்கிவிடும். அப்போது விவசாயிகள் தென்னை மர குத்தகைக்காரர்களுக்கும், தேங்காய் மண்டி உரிமையாளர்களுக்கும் மர எண்ணிக்கையில் குத்தகைக்கு விடுவது வழக்கம். ஒரு மரத்துக்கு எவ்வளவு தொகை என நிர்ணயம் செய்து மொத்தமாக ஒரு ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுவிடுவார்கள்.

    கடந்தாண்டு ஒரு தென்னை மரத்துக்கு ஒரு வருடத்துத்திற்கு ரூ.1200 முதல் ரூ.1300 வரை குத்தகைக்கு எடுத்திருந்தனர். நடப்பாண்டில் ஒரு மரத்துக்கு ரூ.1000 என விலை குறைந்து போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து பருவமழை பெய்ததால் தென்னை மரத்தில் காய்கள் அதிக விளைச்சல் பெற்றுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மும்பை மற்றும் வெளிமாநில, வெளி மாவட்டத்திற்கு செல்லும் தேங்காய்கள் விலை குறைந்து விற்பனையாவதால் குத்தகைகாரர்கள் மற்றும் தனியார் தேங்காய் மண்டி வியாபாரிகள் தென்னை மர குத்தகையை விலை குறைத்து விட்டனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். 

    • குத்தகைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை குறைக்க வேண்டும்.
    • குத்தகை சாகுபடிதாரர்களின் குத்தகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் ஒன்றிய ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட தலைவர் துரையரசன் தலைமையில் நடைபெற்றது.

    நாகை மாவட்ட தலைவர் விவேக் தியாகராஜன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் இருதயதாஸ் வரவேற்று பேசினார்.

    மாநில தலைவர் செருகளத்தூர் ஜெயசங்கர் பேசினார். இந்த கூட்டத்தில், காவிரி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற பைகாரா போன்ற அருவிகளை தமிழக எல்லையில் உள்ள காவிரியோடு இணைக்க வேண்டும். குத்தகை சாகுபடிதாரர்களின் குத்தகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும்.

    கோவில் நிலங்களில் சாகுபடி செய்யும் குத்தகைதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட குத்தகை தொகையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில பொதுச்செயலாளர் பாபு கந்தவேல், மாநில துணைத்தலைவர்கள் வீரமணி, செல்வம், இணைச்செயலாளர் இளையராஜா, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் இளவசரன், ஒன்றிய நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ஜெயக்குமார், நடராஜன், சித்திரவேல், சாமிநாதன், கேசவன், தினகரன், பாண்டியன், மங்களூர் சக்திவேல் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

    முடிவில் ஒன்றிய தலைவர் மோகன் ராஜ் நன்றி கூறினார்.

    • கடலூர் மாவட்டத்தில் 18 ஏரிகளில் மீன் வளர்த்திட பொது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தீவிர உள்நாட்டு மீன்வளர்ப்பு மற்றும் விற்பனைத்திட்டத்தின் கீழ் 18 ஏரிகள் மூன்றாண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வருகிற 14 ந்தேதி மாலை 5 மணி வரை பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து பொது ஏலம் மூலம் 15 ந்தேதி காலை 11 மணியளவில் குத்தகைக்கு விடப்பட உள்ளது. மீன்வளர்ப்பில் ஆர்வம் உள்ள நபர்கள் மீன்பாசி குத்தகை நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பங்களை உரிய கட்டணம் செலுத்தி பரங்கிப்பேட்டை இயங்கிவரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

    • 1200 ஏக்கர் நிலங்களை 99 ஆண்டு குத்தகைக்கு விட்டது சட்டத்திற்கு புறம்பானது என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
    • அப்போது இது சம்பந்தமான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மதுரை

    சேலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான 1200 ஏக்கர் நிலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இந்த நிலங்கள் தனிநபர்களுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்தின் நிலத்தை தனி நபர்களுக்கு இத்தனை ஆண்டுகள் குத்தகை விடுவதற்கு எந்த சட்டமும் அனுமதிக்கவில்லை.

    ஆனால் விதிகளுக்கு புறம்பாக நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு உள்ளன. எனவே இந்த மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த பலனும் இல்லை.

    எனவே 1200 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இது சம்பந்தமான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆதீனத்தின் இந்த நடவடிக்கையை தட்டி கேட்க உரிமை தமிழக அரசுக்கு இருந்தும் ஏன் அவ்வாறு செயல்படவில்லை என்றும், இது தொடர்பாக சிவகங்கை கலெக்டர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    • வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.
    • கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை.

    கடையநல்லூர்:

    சிவகிரி அருகே சுப்பிரமணியபுரம் சுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 53 சென்ட் நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவரின் மறைவுக்கு பின்னர் அவரது வாரிசுதாரர்கள் அந்த நிலத்தில் வீடு கட்டி வசித்தும், விவசாயம் செய்தும் வந்தனர்.

    அவர்கள் நீண்ட காலம் குத்தகை பணம் செலுத்தாததால், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 15 இருந்தது. இதுதொடர்பாக வாரிசுதாரர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.

    எனினும் கோவில் நிலத்தில் வசித்தவர்கள் குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்த நிலத்தில் உள்ள வீட்டில் இருந்த பீரோ, பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்தனர்.

    ×