search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான்வழி தாக்குதல்"

    • பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
    • வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

    ஜெனின்:

    பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படையினர் கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.

    மேலும் அந்த வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • சூடானின் கார்டோமில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இதில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

    சூடான்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது.

    இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.

    இந்நிலையில், சூடானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.

    சூடான் ராணுவத்திற்கும், பாராமிலிட்டரி விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையிலான சண்டையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    காயமடைந்த பொதுமக்களில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இறந்தவர்களில் 5 குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது.
    • கத்தார் நாட்டு தூதரகத்துக்குள் ஆயுதங்களுடன் சிலர் புகுந்து சூறையாடினர்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் பொதுமக்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு சில நாட்களாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. மேலும் சவுதி அரேபியாவில் இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில் நேற்று தலைவர் கார்டூமில் கடும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

    ராணுவ நிலைகளை குறிவைத்து குண்டுகள் வீசப்பட்டது. இது அந்த நகரத்தை உலுக்கியது. மேலும் கத்தார் நாட்டு தூதரகத்துக்குள் ஆயுதங்களுடன் சிலர் புகுந்து சூறையாடினர். இதற்கிடையே சூடானில் 22-ந்தேதி மாலை முதல் 7 நாட்கள் போர் நிறுத்தத்துக்கு ராணுவத்தின் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் தெரிவித்துள்ளது.

    • தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
    • சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்கா ராணுவம் தாக்குதல்.

    சிரியாவில் செயல்படும் ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக சிரியா ராணுவத்துக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன.

    அந்தவகையில் கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளம் மீது நேற்று முன்தினம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் டிரோன் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனிடையே ராணுவ தளம் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக கிழக்கு சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறித்து அமெரிக்கா ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது. எனினும் இதில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

    • இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.
    • இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் வசம் உள்ள மேற்குகரை பகுதியில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

    இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் மதவழிபாட்டுத்தலம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.

    இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா முனைபகுதியில் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

    இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் ராக்கெட்டுகளை ஏவினர். சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் வழிமறித்து அழித்தது. தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இஸ்ரேலில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காசா முனை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.

    • தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.
    • காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    காசா முனை பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் அடிக்கடி இஸ்ரேல் மீது ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். அதேபோல் ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதலை மேற்கொண்டது.

    காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை நோக்கி நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத இலக்குகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு ஹமாஸ் ராணுவ சாவடிக்குள் உள்ள ஆயுத தளத்யுதைம், ஹமாசுக்கு சொந்தமான 3 ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியது என்று கூறியது.

    மேலும் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் ஏவிய ராக்கெட்டுகள், இஸ்ரேலிய வான் பாதுகாப்புகளால் இடை மறிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் ஹமாஸ் இயக்கத்தில் முக்கிய தளபதி ஒருவர் பலியானார்.

    ×