search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்"

    • மேயர் மகேஷ் சொந்த செலவில் வழங்கினார்
    • தூய்மை பணியாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநக ராட்சி தூய்மை பணியா ளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர் நல அதிகாரி ராம்குமார் முன்னி லை வகித்தார். ஆணையர் ஆனந்த் மோகன் சிறப்புரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ் தனது சொந்த செலவில் 1,286 தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு, சில்வர் பாத்திரம், கரண்டி, ஆண்களுக்கு வேட்டி மற்றும் சட்டை, பெண்களுக்கு சேலை ஆகியவற்றை வழ ங்கினார்.

    முன்னதாக மேயர் மகேஷ் பேசியதாவது அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்ட உள்ளனர்.

    நாகர்கோவில் மாநகரை பொருத்தமட்டியில் தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாக்கடையை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

    எனவே தூய்மை பணியா ளர்களை கவுரவப்படுத்தும் விதமாக இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாகராட்சி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தை திறந்து வைக்க வருமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளோம். அவர் பிப்ரவரி 2-வது வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வ குமார், அக ஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் நவீன்குமார்,டி.ஆர். செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்ணின் போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • தூய்மை பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரெக்ஸ் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசின் வருமானவரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவியாளராக ரெக்ஸ் (36) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    அதே அலுவலகத்தில் தூய்மை பணியாளராக ஒரு பெண் பணி செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு ரெக்ஸ் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

    அவரது போன் எண்ணை வாங்கி அதன் மூலம் அடிக்கடி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கடந்த வாரம் பணிக்கு வந்த துப்புரவு ஊழியரிடம் ரெக்ஸ் தனது அறைக்கு தண்ணீர் கொண்டு வரும்படி கூறியுள்ளார். குடிப்பதற்காக தண்ணீரை கொண்டு சென்றபோது அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.

    அவரது பிடியில் இருந்து தப்பித்து வந்த பெண் ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் ரெக்சிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து தூய்மை பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரெக்ஸ் கைது செய்யப்பட்டார்.

    • மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின.
    • சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    சிக்கல்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் சிந்தாமணி. இவர் நேற்று காலை அங்கு உள்ள சிவாஜி நகரில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது குப்பைகளுக்கு இடையே 2 தங்க மோதிரங்கள் இருந்தன. அவற்றை பேரூராட்சி செயல் அலுவலர் குகனிடம், சிந்தாமணி ஒப்படைத்தார்.

    இந்த நிலையில் சிவாஜி நகரை சேர்ந்த பழனிவேல் என்பவர், தேங்காய் உரிக்கும்போது மொத்தம் 1½ பவுன் எடை உள்ள தனது 2 மோதிரங்களை கழற்றி வைத்ததும், பின்னர் ஞாபக மறதியில் அவற்றை குப்பையுடன் சேர்த்து குப்பை சேகரிக்க வந்த சிந்தாமணியிடம் கொடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அவர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று விவரத்தை கூறியுள்ளார்.

    அவர் தெரிவித்த மோதிரங்களின் அடையாளம், சிந்தாமணி ஒப்படைத்த மோதிரங்களுடன் ஒத்துப்போயின. இதையடுத்து சிந்தாமணி மோதிரங்களை பழனிவேலிடம் திரும்ப ஒப்படைத்தார்.

    அப்போது சிந்தாமணிக்கு செயல் அலுவலர், சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் சிந்தாமணியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட வழங்கினார்‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள் சுப்பராமன், ராமச்சந்திரன், கோவிந்தராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட பல்வேறு வகையான பொருட்களை வழங்கி பாராட்டினார் ‌‌.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணவர்களுக்கான உதவிப் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தனது சொந்த நிதியில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம் , திருமுருகன் பூண்டி , வெள்ளகோவில் உள்ளிட்ட 6 நகராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான போனஸ் வழங்கிட வேண்டும், ஆண்டு களாக மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கை வலியுறுத்தி இன்று காலை 300 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம்.
    • தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம், ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் திடக்கழிவு மேலாண்மையில், குப்பை தரம் பிரித்தல், 'என் குப்பை என் பொறுப்பு' என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மாணவர்கள் வழியாக விழிப்புணர்வு, கூட்டு துப்புரவுப்பணி மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் நகரங்களிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்தல், மரக்கன்று நடுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பிளக்ஸ் பேனர்கள் அகற்றம், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.அதன் அடிப்படையில், தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் உடுமலை நகராட்சியுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்கள், சங்கங்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகராட்சி தலைவர் மத்தீன், துணைத்தலைவர் கலைராஜன், கமிஷனர் சத்யநாதன், நகர் நல அலுவலர் டாக்டர் கவுரி சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நகர ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவுதம் தலைமையில், மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொண்டனர்.

    • பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
    • அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது.

    அவிநாசி :

    அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் இ-ஷ்ராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது.

    பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, நடைபாதை வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர் வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள், இணைய தளத்தில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் முகாம் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் இயங்கி வரும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் நிறுவனர் நெல்சன், உடுமலை நகராட்சியில் உள்ள 50 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

    உடுமலை நகராட்சி தலைவர் மத்தீன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி ஆணையர் சத்தியநாதன், நகர்நல அலுவலர் கௌரி சரவணன் ,சுகாதார ஆய்வாளர் செல்வம், வியாபாரிகள் சங்கதுணைசெயலாளர் தங்கமணி, சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினர்.

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.
    • சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    தாழக்குடி அருகே வீரநாராயணமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி. குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தூய்மை பணி செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் சில காரணங்களுக்காக தங்களது சொந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வீட்டில் மகன் முரளி மட்டும் தங்குவது வழக்கம். நேற்று வேலை விஷயமாக அவர் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார்.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து வீட்டில் உள்ள கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் செயின், வெள்ளி கப்பு, வெள்ளி விளக்கு, மகளுடைய பிரசவத்திற்காக வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்று உள்ளார்கள்.

    காலையில் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபால கிருஷ்ணன் ஆரல்வா ய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் பிரான்ஸிஸ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×