search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனக சபை"

    • கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும்.
    • நீதிபதிகள், தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும்?

    சென்னை:

    சிதம்பரம், நடராஜர் கோவிலில் கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து 2022-ம் ஆண்டு மே 17-ந்தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனக சபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படும்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, தீட்சிதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ள கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதிகள், தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் மூன்றாவது நபரான மனுதாரர் எப்படி வழக்கை தாக்கல் செய்ய முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். பின்னர், விசாரணையை அக்டோபர் 11-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    • கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை.
    • 7 முதல் 10 பேர் வரை மட்டும் சாமி தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், "7 முதல் 10 பேர் வரை மட்டும் சாமி தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் என்றும் தமிழக அரசின் அரசாணை, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், கோவிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.
    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையினர் கடநத 24-ந்தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன், தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து கனக சபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபை மீது ஏறி தரிசனம் தடை குறித்து விசாரணை நடத்த வேண்டும் காங்கிரஸ் பிரமுகர் மனு கொடுத்தார்
    • கோவிலுக்கு நன்கொடை மற்றும் கணக்குகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியி டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ஜெமினி எம்.என்.ராதா இந்து அறநிலையத் துறை அதிகாரியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்றம்பல மேடையில் சுவாமி தரிச னத்திற்கு தடைவிதித்தது காரணம் குறித்து விசா ரணை நடத்த வேண்டும். ஆயிரங்கால் மண்ட பத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடை பெற்ற திருமணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    கோவிலில் உள்ள பல்வேறு இடங்களை இடிப்பதற்கு தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையில் அனுமதி பெறாமல் இடித்த தை குறித்து விசாரணை நடத்தி தீட்சிதர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவிலுக்கு நன்கொடை மற்றும் கணக்குகளை பொதுமக்களுக்கு வெளிப்படையாக வெளியி டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×