என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தாக்கல்"
- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.
- திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே மாதப்பூர் கள்ளக்கிணறு குரைத்தோட்டம் பகுதியில் வீட்டு முன்பு மது குடிப்பதை தட்டிக்கேட்ட தகராறில் அப்பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அவரின் தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோரை, ஒரு கும்பல் கடந்த செப்டம்பர் மாதம் 3-ந் தேதி வெட்டிக்கொலை செய்தது. இதுதொடர்பாக பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி, கோவை டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆகியோர் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (வயது 24), திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (52), வெங்கடேஷ் (27), தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா, திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகி புரத்தை சேர்ந்த செல்வம் என்கிற வெங்கடேஷ் (29) ஆகிய 5 பேரை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அதிவேகமாக புலன் விசாரணை முடித்து சாட்சிகள் விசாரணை முடிந்து சாட்சியங்களுடன் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா, பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீதும் 800 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
- விசாரணைக்கு ஆஜராவதற்கு பாபநாசம் கோர்ட்டு மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 2012-ல் உள்ள வழக்கு சம்பந்தமாக பாபநாசம் நீதிமன்றத்தில்
2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சியாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் அப்போது சப்-இன்ஸ்பெக்டராக ராஜா பணியில் இருந்த போது வழக்கு பதிவு செய்தமைக்காக வழக்கின் விசாரணைக்கு சாட்சி சொல்ல ஆஜராவதற்கு பாபநாசம் கோர்ட்டின் மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜா ஆஜராகவில்லை.
சாட்சி சொல்ல விசா–ரணைக்கு அம்மாபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆஜராகாத காரணத்தால் பாபநாசம் மாவட்ட உரிமைகள் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி ராஜா மீது பிடி கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்.
அம்மாபேட்டையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தற்போது திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஊரக, உள்ளாட்சி காலி இடங்களுக்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
- முதல் நாளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
சேலம்:
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் பதவி விலகல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரையில் ஏற்பட்ட பதவி இடங்களை நிரப்புவதற்காக தற்செயல் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 12 இடங்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 16 பதவிகளுக்கும் அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் சேலம் ஊராட்சி ஒன்றியம் 8-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் மின்னாம்பள்ளி, பூவனூர், நடுப்பட்டி, கூணான்டியூர், பொட்டனேரி, தெத்திகிரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, தேவியாக்குறிச்சி, கிழக்கு ராஜாபாளையம், எலவம்பட்டி, நீர்முள்ளிக்குட்டை ஆகிய ஊராட்சிகளில் 11 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 8-வது வார்டு உறுப்பினர் பதவி, கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு 4-வது வார்டு உறுப்பினர் பதவி மற்றும் ஆயில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும், இளநகர் ஊராட்சி 2-வது வார்டு, மாவுரெட்டிபட்டி ஊராட்சி 2-வது வார்டு, வடவத்தூர் ஊராட்சி 2-வது வார்டு, சிறுநல்லிக்கோவில் ஊராட்சி 3-வது வார்டு, ராசிபாளையம் ஊராட்சி 9-வது வார்டு, மத்துருட்டு ஊராட்சி 5-வது வார்டு, ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சி 3-வது வார்டு, தட்டாங்குட்டை ஊராட்சி 11-வது வார்டு, செருக்கலை ஊராட்சி 9-வது வார்டு, கதிராநல்லூர் ஊராட்சியில் 1-வது வார்டு, மோளப்பாளையம் ஊராட்சி 8-வது வார்டு, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி 8-வது வார்டு, சிறு மொளசி ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இதற்காக இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகிறது. வருகிற 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 28-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். 30-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறலாம். முதல் நாளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
அடுத்த மாதம் 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. வருகிற 14-ந் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்