search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234584"

    • இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
    • இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ஈரோடு:

    சினிமா சண்டை இயக்குனர் கனல் கண்ணன் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சை கருத்து கூறினார். இதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.

    இந்த கைதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்ப ட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

    எனினும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி, டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் தலைமையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது போலீசார் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினர்.

    ஆனால் அதையும் மீறி இந்து முன்னணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். இதை அடுத்து இந்து முன்னணி கட்சியினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, ஸ்வஸ்திக் கார்னர், கருங்கல்பாளையம் காளை மாட்டு சிலை, மரப்பாலம் சோலார் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது.
    • இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீராமானுஜ தர்சனசபா இணைந்து நடத்தும் 88-ம் ஆண்டு 24 கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் தொடங்கியது. நேற்று 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது.

    விழாவில் இன்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நடந்தது. இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட 15 பெருமாள் கோவில்களில் இருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.

    பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் கொடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிந்ததும் அந்தந்த கோவில்களுக்கு பெருமாள்கள் சென்றடைந்தன.

    விழாவில் நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

    ×