search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிதாபம்"

    • இவர் கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.
    • இது பற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரிக்கிறார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சாலாமேடு காமராஜர் நகர் ஜீவா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. (வயது 57). உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார்.

    எனவே விடுமுறையில் இருந்த அவர் சிகிச்சை எடுத்தும் உடல் நலம் சீராகவில்லை. தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கிருஷ்ணமூர்த்தி இன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் விசாரிக்கிறார். 

    • காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர்சண்முகம் (52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயம் அடைந்த இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்சி கிச்சை பலனிக்காமல் இன்று பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார் சப்.இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    • அருந்து கிடந்த மின்கம்பியை கறவை மாடு மிதித்தது.
    • அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே தண்டாங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா.

    இவர் சம்பவத் தன்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்தது.

    எதிர்பாராதவிதமாக முன்னாள் ராணுவத்தினர் காலனியில் மின்கம்பி அருந்து கிடந்தது, அதனை மிதித்த கறவை பசுமாடு பரிதாபமாக இறந்துவிட்டது.

    இதேபோன்று, கடந்த முறை மூன்று மாடுகள் இறந்தன, இது இரண்டாவது முறையாகும்.

    அடிக்கடி இதுபோன்று விபத்து நடந்து வருகிறது என மக்கள் தெரிவித்தனர்.

    மின் வாரியத்தில் பல முறை மனுவும் கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்தாண்டம் கீழபம்மம் பகுதியை சேர்ந்தவர் டான் சந்திர சுதன். இவரது மகன் பிரின் அனுக் (வயது27).

    பொறியியல் பட்டதாரியான இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று பணிமுடிந்து மாலை வீட்டுக்கு புறப்பட்டார். தக்கலை அருகே காட்டாத்துறை கொக்கிடிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். நெடுநேரம் ஆகியும் பிரின் அனுக் மீட்க படாததால் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தார்.

    இந்த தகவலை அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக இவரது தந்தை டான் சந்திர சுதன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவின் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார்.
    • நிலத்துக்கு சென்ற கவின் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்துள்ள காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கவின் (வயது 24). பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கவின் தினமும் காலையில் தனது சொந்த நிலத்திற்கு சென்று நீர் பாய்ச்சுவது வழக்கம். அதேபோல் நேற்று கவின் தனது சொந்த நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கவின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நிலத்துக்கு சென்ற கவின் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது கவின் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி மேலப்பூதனூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் மகன் ராஜேஷ் (வயது 32) சமையல் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அறையை பூட்டிக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

    அதனை கண்ட ராஜேஷ் மகன் ருத்ரன் தனது தாத்தா சேகர் இடம் கூறியுள்ளான்.

    உடன் சேகர் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த ராஜேஷை மீட்டு திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ராஜேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார் ராஜேஷ்ன் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வல்லம் புதூர் பகுதியில் ஒரு வயலில் வேலை செய்வதற்காக ராணி சென்றார்.
    • சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி ராணி (வயது42).ரங்கசாமி இறந்துவிட்டார்.

    சம்பவத்தன்று வல்லம் அருகே உள்ள வல்லம் புதூர் பகுதியில் ஒரு வயலில் வேலை செய்வதற்காக ராணி சென்றார்.

    அங்கு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு ராணி மயங்கி கிடந்தார்.

    அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்துவல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து தனது தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.
    • ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை டவுன், காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்தவர் அருள் (எ) ராயப்பன் (வயது 49), ரேவதி (45) தம்பதியினர். காதல் திருமணம் செய்து 26 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    பஸ் நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர்.

    இதனால் கணவன்-மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி ரேவதி மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார்.

    மகன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    மகள் பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ராயப்பன்தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால் ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் ராயப்பன்-ரேவதி தம்பதியரின் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு ரேவதி வீட்டிற்கு சென்று தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார்.

    அப்போது, அதனை ஏற்க மறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார்.

    சரி எனக்கூறி ரேவதியை ராயப்பன் அழைத்து சென்றபோது காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

    அக்கம்ப க்கத்தினர் ரேவதியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம், ராயப்பனை கைது செய்து கொலைவழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றிச்சென்றுவிட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வானவன் மகாதேவி மீனவர் காலனியை சேர்ந்தவர் விஜய் (வயது 22). இவர் கடந்த 29-ந் தேதி நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த தனது உறவினர் சத்தியமாலா (28) என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு நாகைக்கு சென்றுள்ளார்.

    அப்போது, விழுந்தமாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே ரேஷன் அரிசி ஏற்றி வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விஜய் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த சத்தியமாலாவை சிகிச்சைக்கு நாகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து வேட்டைகாரணிருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    மேலும், தப்பிய லாரி டிரைவர் ஜெகதீசனை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் நிறுத்திவைத்திருந்த லாரியில் இருந்த அரிசி மூட்டைகளை திருக்குவளையில் உள்ள குடோனுக்கு நுகர்பொருள் வணிப கழக அதிகாரி ஏற்றி சென்றுவிட்டார்.

    இதையறிந்து விபத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய டிரைவரை கைது செய்யக்கோரி வேட்டைகாரணிருப்பு போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி லாரி டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்தின் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

    இதனால், நாகை- வேதாரண்யம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

    • டயருக்கு அடியில் வைத்த கல்லை எடுத்த போது மதில்சுவரில் மோதி உடல் நசுங்கியது
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன் குடியிருப்பை அடுத்த தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 43). டெம்போ டிரைவர்.

    இவர்நேற்றுமாலை சுமார் 3மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் கட்டிடக் கழிவுகளை ஏற்றுவதற்காக தனது டெம்போவை ஓட்டி வந்தார். அங்கு அவர் கட்டிட கழிவுகளை ஏற்றுவதற்காக டெம்போவை சாலை ஓரமாக நிறுத்தி வைத்து இருந்தார். அவர் தனது டெம்போவை நிறுத்தி வைத்திருந்த இடம் பள்ளமாக இருந்ததால் அந்த டெம்போ நகராமல் இருப்பதற்காக டயருக்கு அடியில் டிரைவர் ஜேக்கப் கல்ஒன்றை தடுப்பு கொடுத்து வைத்து உள்ளார்.

    லோடு ஏற்றிய பின்பு டயருக்கு அடியில் வைத்திருந்த கல்லை டிரைவர்ஜேக்கப் அகற்றினார். அப்போது டெம்போ "திடீர்" என்று நகர்ந்து ஜேக்கப்பை அருகில்உள்ள மதில் சுவருடன் சேர்த்து இடித்துள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேக்கப்பை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பண்ருட்டியில் மொபட் மீது லாரி மோதியதில் விவசாயி பலியானார்.
    • அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம்ஏற்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி,திருவதிகை பழைய கடலூர் ரோட்டில் வசித்து வருபர் தியாகராஜன் (வயது72). விவசாயி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் புதுவை தூக்கணாம்பாக்கம் சென்று விட்டு திரும்பி பண்ருட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பண்ருட்டி ஹவுசிங் போர்டு அருகில் வந்து கொண்டியிருந்த போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி அவரது மொபட் மீது மோதியதில் இதனால் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு கால்கள் மற்றும்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி லோகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர்.
    • உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்த நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மதகரம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது65). இவருடைய மனைவி சின்னாச்சி (57). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் மிகுந்த வறுமையுடனும், ஆதரவற்ற நிலையிலும் வாழ்ந்து வந்தனர்.

    பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் வேலை பார்த்து வரும் உறவினர்கள் இவர்களுக்கு அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளனர். ஆனாலும் உரிய வாழ்வாதாரம் இல்லாததால் இருவரும் மனவேதனையில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் களைக்கொல்லி பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதில் மயங்கி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முருகையன், சின்னாச்சி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வலங்கை மான் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வறுமையால் மனவேதனை அடைந்த வயது முதிர்ந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொ ண்டது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படு த்தி உள்ளது.

    ×