search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் சாவு"

    • குலதெய்வம் கோவிலுக்கு வந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 60) இன்று அவரது குடும்பத்திருடன் சேர்ந்து வேலூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கு பஸ்சில் அவர்கள் வந்தனர்.

    முருகன் குடும்பத்தினர் அனைவருக்கும் டிக்கெட் எடுத்தார். பஸ் வேலூர் வந்ததும் அவரது குடும்பத்தினர் முருகனை இறங்குமாறு கூறினர. அப்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகனை பரிசோதனை செய்தனர். இதில் அவர் பஸ்சில் திடீரென இறந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து முருகன் உடலை அவரது உறவினர்கள் பஸ்சிலிருந்து கீழே இறக்கி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர். முருகன் இயற்கையாக இறந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

    அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த மணிகொல்லை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 80). இவர் கடந்த 5-ந் தேதியன்று இரவு புதுச்சத்திரத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடிவேல் மகன் தனசேகர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 74). இவர் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் கியாஸ் சிலிண்டர் கசிவு இருந்தது. இதனை அறியாத அவர் டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் வீட்டின் பெரும்பகுதி சேதமடைந்தது.

    கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் இடிபாடுகளை அகற்றி தீக்காயமடைந்த பாபநாசத்தை மீட்டனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அப்போது சுமார் 72 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார்
    • சாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி பகல் நேர பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ரெயில் காலை 7.05 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இன்று காலையும் ரெயில் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது.

    அப்போது சுமார் 72 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உள்ளார். அதனை பார்த்த சக பயணிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் கள் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர்.அப்போது மயங்கி விழுந்த முதியவர் இறந்து விட்டது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் இறந்தவர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் (வயது 72) என்பதும், இவர் சாமி தோப்பு அய்யா வைகுண்டர் பதிக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நாகர்கோவிலில்  ரெயில் பெட்டியில் முதியவர் மயங்கி விழுந்து உயரிழந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை அருகே ரெயில் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
    • நேற்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடந்தது.

    மதுரை

    மதுரை- கீழ்மதுரை இடையே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முற்பட்டார். அப்போது ராமேஸ்வரம்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் முதியவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக கீழ்மதுரை கிராம உதவியாளர் சமயன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
    • திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.

    அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பலியானார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கம்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி முதியவர் கீழே விழுந்தார்.
    • சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கே.கே.பட்டியைச் சேர்ந்தவர் சுருளிமுத்து (வயது 77).

    இவர் காமயகவுண்டன்பட்டி - கம்பம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயமடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுருளி முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பைபாஸ் சாலை வழியாக நேற்று மாலை நடந்து சென்றபோது ஸ்கூட்டரில் வேகமாக வந்த ஒரு பெண் அவர் மீது மோதிவிட்டாராம்.
    • சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி கோவிந்த தாஸ் நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(70). இவர் நேதாஜி பைபாஸ் சாலை வழியாக நேற்று மாலை நடந்து சென்றபோது அவ்வழியே ஸ்கூட்டரில் வேகமாக வந்த ஒரு பெண் அவர் மீது மோதிவிட்டாராம்.

    இதில் தலையில் அடிபட்டு படுகாயமடைந்த முத்துகிருஷ்ணனை மீட்டு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரெயில்வே மேம்பாலம் அருகே சுமார் 50 வயது தக்க முதியவர் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று மயங்கி கிடந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் நேற்று முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் மாநிறத்தில் உள்ளார். சிமெண்ட் கலர் பேண்ட் வெள்ளை நிறத்தில் நீல நிற கோடு போட்ட அரை கை சட்டை அணிந்துள்ளார்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கம்பத்தில் பார்வையற்ற முதியவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்
    • கிணற்றில் விழுந்து முதியவர் சாவு

    கம்பம் :

    கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(82). இவருக்கு கண்பார்வை குறைவாக இருந்ததுடன் உடல்நலக்குறைவும் ஏற்பட்டது.தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிப்பதற்காக அருகில் உள்ள அறைக்கு சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்து கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின்பேரில் கம்பம் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×